திருநெல்வேலி அருகே திருமணமான 6 மாதங்களில் புதுப்பெண் ஜோதி.. விடிந்தால் பொங்கல்.. இப்படியா நடக்கணும்
திருநெல்வேலி: தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே அய்யனூர் கிராமத்தைச் சேர்ந்த ஜோதி என்பவருக்கும், சேர்மக்கனி என்பவருக்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கல்யாணம் நடந்தது. இவர்கள் சேர்மக்கனியின் வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தார்கள். சேர்மக்கனி நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு போய்விட்டார். வீட்டில் தனியாக இருந்த ஜோதி எடுத்த முடிவு, மொத்த குடும்பத்தையும் ஆடிப்போக வைத்துள்ளது.
திருமணமான புதிதில் கணவன் மனைவி இடையே ஏற்படும் சின்ன சின்ன சண்டைகள் பூதாகரமாகிவிடுகின்றன, பெண் வீட்டார் தரப்பினர், மாப்பிள்ளை உன் கண்ட்ரோலில் இருக்க வேண்டும் என்று கூறுவது நடக்கிறது. இதேபோல் மாப்பிள்ளை வீட்டிலும் பெண் உன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று கூறுவதும் நடக்கிறது..

அதேபோல் வீட்டில் நடக்கும் பிரச்சனைகள், மனஸ்தாபங்களை எப்படி கையாள்வது என்பது இன்றைய 2 கே கிட்ஸ்க்ளுக்கு தெரிவது இல்லை.. சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு எல்லாம் வாழ்க்கையை முடித்து கொள்ளவும் தயங்குவது இல்லை.. அதேநேரம் சில வீடுகளில் வரதட்சணை கேட்டு டார்ச்சர் செய்வது நடக்கிறது.
அதேபோல் சில வீடுகளில் பெண்ணின் அம்மாவின் தவறான வழிகாட்டுதல்களால் குடும்பத்தில் பெரிய பிளவுகள் ஏற்பட்டு குடும்பத்தில் விபரீதமான நிகழ்வுகளும் நடப்பது உண்டு. அதேநேரம் என்ன காரணம் என்றே வெளியே தெரியாமல் சில பெண்கள் , குடும்ப பிரச்சனையில் உயிரை விட்டுவிடுகிறார்கள். அப்படி ஒரு சம்பவம் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியில் நடந்துள்ளது.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே அய்யனூர் கிராமத்தைச் சேர்ந்த 30 வயதாகும் சேர்மக்கனி, கூலி தொழிலாளியாவார். இவருடைய மனைவி ஜோதி சந்திரகனி (23). இவர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்கள் சேர்மக்கினியின் வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர். நேற்று காலையில் சேர்மக்கனி வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். பின்னர் வீட்டில் இருந்த ஜோதி சந்திரகனி திடீரென்று மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு உயிரையே விட்டார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த ஜோதி சந்திரகனியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 6 மாதங்களில் ஜோதி சந்திரகனி உயிரை விட்டதால், தென்காசி உதவி கலெக்டர் லாவண்யா மேல் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்வம் தென்காசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications