தமிழ்நாட்டில் எனக்கு கிடைத்த ஆதரவால் பலர் குழம்பி போய் உள்ளனர்.. நெல்லையில் மோடி பேச்சு
திருநெல்வேலி: தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக, பிரதமர் மோடி, இன்று திருநெல்வேலி வந்தடைந்தார். அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர்பட்டியில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த மோடி, தமிழ்நாட்டில் எனக்கு கிடைத்த ஆதரவால் பலர் குழம்பி போய் உள்ளனர் என்று பேசினார்.
தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளதால், பிரச்சாரத்தையும் தீவிரப்படுத்தி உள்ளன அரசியல் கட்சிகள்.. தேசிய தலைவர்களும் அடிக்கடி சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.. அதுவும், 7வது முறையாக தமிழ்நாட்டுக்கு வந்து சென்றுள்ள பிரதமர் மோடி, இன்று 8வது முறையாக மறுபடியும் தமிழகம் வந்துள்ளார்.

திருநெல்வேலி: இன்றைய தினம் மீண்டும் தமிழகம் வந்துள்ள பிரதமர்.. திருநெல்வேலி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவு கேட்டு அம்பாசமுத்திரத்தில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் எனக்கு கிடைத்த ஆதரவால் பலர் குழம்பி போய் உள்ளனர். இந்த கூட்டத்தையும், உற்சாகத்தையும் பார்த்து திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு தூக்கம் தொலைந்து போயிருக்கும். நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில் சேவையை பாஜக கொண்டு வந்தது. தென் மாநிலங்களில் புல்லட் ரயில் திட்டம் கொண்டு வர ஆலோசனை செய்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக மோடி வருகையையொட்டி, 2 நாட்களுக்கு அங்கு டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. பிரதமரின் வருகையை முன்னிட்டு, மாவட்ட காவல்துறை சார்பாக வாகன தணிக்கை, தங்கும் விடுதிகள், மக்கள் அதிகம் கூடும் இடமான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் போன்ற முக்கிய இடங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
திமுக அதிரடி: பிரதமர் தமிழகம் வரும்போதெல்லாம் அமைதியுடன் கவனித்து வந்த திமுக, கடந்த முறை, விழித்து கொண்டதாக தெரிகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது, அரசு மாளிகையான ராஜ்பவனில் மோடி தங்கியது தேர்தல் விதி மீறல் என்ற சர்ச்சையை புதிதாக தொடங்கியிருக்கிறது திமுக!! இது குறித்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யவும், தேர்தல் ஆணையத்தில் திமுக தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை, மோடி மீது வழக்குப்பதிவு செய்யவில்லையென்றால், தமிழக முதல்வரும் இனி மாவட்ட சுற்றுப்பயணத்தின் போது அரசு பங்களாவில் தங்குவார் என்றும் தேர்தல் அதிகாரிகளிடம் சற்று சட்டரீதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த புகாரை தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாம் தமிழக தேர்தல் ஆணையம்.
அப்செட்: இதெல்லாம் பாஜக தரப்பில் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லையாம்.. அதிலும் பிரதமர் மோடியே இதை எதிர்பார்க்கவில்லையாம்..
ஏற்கனவே, ராஜ்பவனில் தங்கியிருந்த மோடி, ரோட் ஷோவில் பொதுமக்கள் திரண்டு வருவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், அந்த அளவுக்கு கூட்டம் இல்லை என்பதால் மிகவும் அப்-செட்டாகி விட்டதாகவும், அதனால், தமிழக பாஜகவினருடன் ராஜ்பவனில் ஆலோசிக்க திட்டமிட்டிருந்த புரோக்கிராமையும் கேன்சல் செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
பரபரப்பு: இப்படி அரசியல் களமே அனலடித்து கொண்டிருக்கும் சூழலில்தான், இன்றைய தினம் பிரதமரின் வருகையானது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.












Click it and Unblock the Notifications