சொத்தை தரப்போறியா இல்லையா.. தூங்கி கொண்டிருந்த கணவனை தீ வைத்து கொளுத்திய மனைவி!
சொத்துக்காக கணவனை தீ வைத்து மனைவி கொளுத்தி விட்டார்
Recommended Video
நெல்லை: "சொத்தை என் பேருக்கு எழுதி வைக்க போறியா இல்லையா" என்று கணவன் பாக்யராஜை கேட்டு கேட்டு தவித்து போய்விட்டார் மனைவி. இதனால் தூங்கி கொண்டிருந்த பாக்யராஜ் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொளுத்தி விட்டார்!
நெல்லை மாவட்டம் கள்ளிகுளத்தைச் சேர்ந்தவர், பாக்யராஜ். இவர் ஒரு விவசாயி. மனைவி மரியலீலா. இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.

மகன்கள் இருவருமே வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர். மகன்கள் வெளிநாடு போனபிறகுதான் மகள்களுக்கு பாக்யராஜால் கல்யாணம் செய்து வைக்க முடிந்தது. மேலும் இப்போது இருக்கும் சொத்துக்கள் அனைத்துமே மகன்கள் உழைத்து சம்பாதித்து அனுப்பியவைதான்.
இந்நிலையில், தனக்கும் 60 வயது ஆவதால், சொத்துக்களை மகன்களின் பெயரிலேயே உயில் எழுதி வைத்துள்ளார் பாக்யராஜ். இதற்கு மனைவி மரியலீலா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சொத்துக்கள் எல்லாவற்றையும் தன் பெயருக்கு எழுதி தரும்படி கேட்கவும், அதற்கு பாக்யராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
அப்படியானால், 2 மகன்களை போலவே, 2 மகள்களுக்கும் சொத்துகளை பிரித்து தர வேண்டும் என்று மரியலீலா கேட்டுள்ளார். அதற்கும் பாக்யராஜ் மறுப்பு சொல்லி உள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை, தகராறு நடந்து வந்துள்ளதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில், மகன்களுக்கு எழுதி வைத்த நிலத்தை அளவீடு செய்யும் பணி நடக்கவும், மரியலீலா கொதித்து போய்விட்டார்.
என்ன சொல்லியும் கணவர் கேட்காத ஆத்திரத்தில் திரும்பவும் சண்டை போட வீட்டுக்குள் நுழைந்தார் மரியலீலா. அப்போது பாக்யராஜ் தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் எடுத்து அவர் மீது ஊற்றி விட்டு தீ வைத்து விட்டார்.
உடம்பெல்லாம் குப்பென்று தீப்பற்றிய நிலையில் அலறி துடித்தார் பாக்யராஜ். பின்னர் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, மரியலீலாவை வள்ளியூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications