பலருடன் உறவு.. சொல்ல சொல்ல அடங்காத மனைவி.. பரிதவித்த கணவன்.. கடைசியில் நடந்த கோரம்.. நெல்லை ஷாக்!
திருநெல்வேலியில் பெண்ணை 2 பேர் கொன்றுள்ளனர்
நெல்லை: ஒருசிலருடன் தவறான உறவில் தொடர்ந்து இருந்து வந்ததால், 35 வயது பெண் ஒருவர் மிக கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.. 2 நாள் ஆகியும் இந்த கொலை சம்பவத்தின் பதட்டம் இன்னும் நெல்லையில் அடங்கவில்லை.
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ளது செங்குளம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி.. இவருக்கு 40 வயதாகிறது.. மனைவி பெயர் முப்பிடாதி.. 35 வயதாகிறது.. இருவரும் காதலித்தார்கள்.. கல்யாணமும் செய்து கொண்டார்கள்.

13 வருஷமாகிறது இவர்களுக்கு கல்யாணமாகி.. 12 வயதில் ஒரு மகன் இருக்கிறான். முத்துப்பாண்டி தூத்துக்குடியில், சுமை தூக்கும் வேலை செய்து வருகிறார்...
இந்நிலையில் சம்பவத்தன்று முப்பிடாதி வீட்டில் தனியாக இருந்தபோது அங்கு 2 பேர் வந்தனர்.. திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாளால் முப்பிடாதி கழுத்தில் சரமாரியாக வெட்டினர்.. இதனால் அவரது கழுத்து, கைகளில் அரிவாள் வெட்டு விழுந்து ரத்த வெள்ளத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்துவிட்டார்.. அந்த கொலையாளிகளும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
அன்று இரவு முத்துப்பாண்டி, வீட்டிற்கு வந்தார்.. வீட்டினுள் மனைவி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அலறினார்.. உடனடியாக அக்கம்பக்கத்தினரும் போலீசாருக்கு தகவல் சொன்னார்கள்.. பாப்பாகுடி போலீசார் விரைந்துவந்து, முப்புடாதி உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணையும் ஆரம்பித்தனர். அப்போதுதான் முப்புடாதியின் சுயரூபம் தெரியவந்தது. அவருக்கு அந்த பகுதியில் உள்ள நபர்களுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது..
ஒருவர் இல்லை, ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் முப்பிடாதி தொடர்பில் இருந்துள்ளதாக தெரிகிறது.. இதைத்தான் அவரது உறவினர்கள் கண்டுபிடித்து கண்டித்துள்ளனர்.. முத்துப்பாண்டிக்கும் இந்த விஷயம் தெரிந்து கொந்தளித்து மனைவிக்கு அட்வைஸ் தந்துள்ளார்.. ஆனாலும், முப்பிடாதி அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளார்.
இந்த ஆத்திரத்தில்தான் கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.. இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த துர்க்கை முத்து என்ற 20 வயது இளைஞரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.. மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள்... முப்பிடாதியை கொன்றவர்கள் யார்? ஏன் கொன்றார்கள் என்ற உண்மைத்தன்மையை போலீசார் விரைவில் வெளி கொணருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications