ஏம்மா.. புருஷன் சரியில்லைன்னா.. இப்படியா பண்ணுவீங்க.. இளம்தாய்க்கு போலீஸ் அட்வைஸ்!
சங்கரன்கோயில் அருகே 6 வயது மகளுடன் தற்கொலைக்கு தாய் முயன்றுள்ளார்
Recommended Video
நெல்லை: சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் 6 வயது பெண் குழந்தையுடன் தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சங்கரன்கோவில் அருகே குருக்கள்பட்டி மேலத்தெருவை சேர்ந்த தம்பதி சங்கர் - அமுதா. சங்கருக்கு 40 வயது, அமுதாவுக்கு 35 வயதாகிறது.
கல்யாணம் ஆகி 14 வருடங்கள் ஆகிறது. மகாலெட்சுமி, பிரியதர்ஷினி என்ற 12 மற்றும் 6 வயது பெண் குழந்தைகள் உள்ளனர்.

5 லட்சம் ரூபாய்
சங்கர் பெட்டிக்கடை வைத்திருக்கிறார். ஆனால் குடும்பத்தை சரிவர கவனிக்காமல், குடித்துவிட்டு, ஊதாரித்தனமாக நடந்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது. தினமும் வீட்டுக்கு வந்து அமுதாவிடம் சண்டை போடுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார். இதைதவிர 5 லட்சம் ரூபாய் வரை அவருக்கு கடனும் உள்ளதாம்.

அடிஉதை
இது பற்றியெல்லாம் அமுதா ஏற்கனவே சின்னக் கோவிலான்குளம் மற்றும் சங்கரன்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. தினம் அடிஉதையால் சித்ரவதை தாங்க முடியாத அமுதா.. நேற்று 6 வயசு மகள் பிரியதர்ஷினியை அழைத்து கொண்டு சங்கரன் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார்.

ஆஸ்பத்திரி
அங்கிருந்த வளாகத்தில் உள்ள புறக்காவல் நிலையம் முன்பு மகள் மீதும், தன் மீதும் மண்ணெண்ணெயை ஊற்றி கொண்டு தீ வைக்க முயன்றார். இதை பார்த்து மற்ற போலீசார் பதறி போய்விட்டனர். உடனடியாக விரைந்து சென்று அவர்களை தடுத்து நிறுத்தி இருவர் மீதும் தண்ணீர் ஊற்றினர். ஆஸ்பத்திரியில் இருந்த பாத்ரூமுக்கு அழைத்துசென்று மீண்டும் தண்ணீர் ஊற்றி அழைத்து வந்தனர்

உறுதி தந்தனர்
பின்னர் போலீசார் அமுதாவிடம், "முதல்ல குளிம்மா.. நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம். இப்படியா குழந்தையை வெச்சுக்கிட்டு தற்கொலை பண்ண போறது?" என்று அறிவுறுத்தியதுடன், உரிய விசாரணை நடத்துகிறோம் என்று சொல்லி உறுதி தந்தனர்.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications