திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செருப்பு, சேரை வீசி.. வயதான தம்பதியிடம் சிக்கி தெறித்து ஓடினார்களே 2 திருடர்கள்.. இருவரும் சிக்கினர்

நெல்லை தம்பதியை தாக்க முயன்ற நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டார்

Google Oneindia Tamil News

Recommended Video

    திருடர்களுடன் ராத்திரியில் தீரமான போராட்டம் செய்து அடித்து துரத்திய தம்பதி-வீடியோ

    நெல்லை: செருப்பு, பக்கெட்.. துடைப்பம், பிளாஸ்டிக் சேர்களை தூக்கி வீசியெறிந்து கொள்ளையர்களை செந்தாமரை தம்பதியினர் துணிச்சலுடன் விரட்டி அடித்தார்களே... அந்த கொள்ளையர்களை நம் போலீசார் கிட்டத்தட்ட 50 நாட்களுக்கு பிறகு கைது செய்துள்ளனர்.

    நெல்லை மாவட்டம் கடையம் கல்யாணிபுரத்தை சேர்ந்த வயதான தம்பதி சண்முகவேல் - செந்தாமரை. கடந்த ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி இவர்கள் இருவரும் தங்கள் பண்ணை வீட்டில் இருந்தபோது, முகமூடி அணிந்த 2 கொள்ளையர்கள் அரிவாளுடன் திருட வந்துவிட்டனர்.

     Youth arrested in Nellai Robbery issue

    ஆனால் தம்பதி இருவரும் பயப்படவே இல்லையே... துணிச்சலுடன் கையில் கிடைத்த செருப்பு, சேர்களை எடுத்து அந்த கொள்ளையர்கள் மீது வீசியதில், அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இந்த துணிச்சல் மிகுந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமிராவிலும் பதிவாகி வைரலானது. இந்த தைரியத்தை பாராட்டி நம் முதல்வரும் இவர்களுக்கு விருது வழங்கினார்.

    ஆனால், கொள்ளையடிக்க வந்தவர்கள் யார் என்று தெரியாமல் போலீசார் திணறி வந்தனர். இதற்காகவே ஒரு தனிப்படையும் அமைக்கப்பட்டது. இப்போது, இந்த விவகாரம் நடந்து 50 நாட்களுக்கும் மேலாகிவிட்ட நிலையில், இந்த கொள்ளையில் தொடர்புடைய முக்கிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால், அந்த கொள்ளையன் யார், என்ன விவரத்தை போலீசார் உடனடியாக தெரிவிக்கவில்லை.

    பெண்கள் திடீர் திடீர் மரணம்.. 6 தாத்தாக்கள் மீது சந்தேகம்.. பல்லை பிடுங்கி.. மலம்தின்ன வைத்த கொடூரம்பெண்கள் திடீர் திடீர் மரணம்.. 6 தாத்தாக்கள் மீது சந்தேகம்.. பல்லை பிடுங்கி.. மலம்தின்ன வைத்த கொடூரம்

    பெயர் பாலமுருகன் என்று மட்டும் தெரியவந்துள்ளது. இந்த தம்பதிக்கு உறவினரா, அல்லது வெளியாட்களா என்றும் தெரியவில்லை. இப்போதைக்கு, ஒரு ரகசிய இடத்தில் வைத்து அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வரும்நிலையில், இன்னொரு கொள்ளையனையும் கைது செய்துள்ளனர். இவர்களிடம் முழு விசாரணை முடிந்ததும் கொள்ளையர்கள் குறித்த விவரம் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Key man have arrested for robbery in Elderly couple near Nellai after 50 days
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X