"பணம் செழிக்கும்".. கழுகு பாணியில் 2 பெண்களை நரபலி தந்த கும்பல்.. சாம்பலை வைத்து பூஜை.. கதறும் கேரளா

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த இரண்டு பெண்கள் நரபலி மூலம் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் தற்போது கேரளாவையே உலுக்கி உள்ளது.

கேரளாவை சேர்ந்த பெண் பத்மா. கடந்த ஜூன் மாதம் இவர் காணாமல் போனதாக புகார் வைக்கப்பட்டது. எர்ணாகுளத்தில் இருக்கும் காலடி பகுதியில் வசித்து வந்த இந்த பெண் திடீரென காணாமல் போனார்.

இதையடுத்து போலீசாரிடம் அவரின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். போலீசார் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில் ரோஸ்லி என்ற இன்னொரு பெண்ணும் அருகில் உள்ள கிராமத்தில் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது.

கொலை

கொலை

கடன்வண்டரா என்ற கிராமத்தை சேர்ந்த பெண் காணாமல் போனதாக புகார் வைக்கப்பட்டது. இதையடுத்து இரண்டு வழக்கையும் போலீசார் சேர்ந்து விசாரித்து வந்தனர். அவர்களுக்கு கடைசியாக சென்ற போன் கால்கள் ஆகியவற்றை வைத்து விசாரணை செய்து வந்தனர். இரண்டு பேருக்கும் ஒரே எண்ணில் இருந்து போன் சென்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை வைத்து போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர்.

நரபலி

நரபலி

இந்த விசாரணையில் சாபி என்ற இளைஞர் இரண்டு பேருக்கும் போன் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவரை தேடி வந்த போலீசார் இன்று கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் நரபலி கொடுக்கும் ஏஜென்ட் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது நரபலிக்கு பெண்களை கடத்தி வந்து, அவர்களை பழி கொடுக்கும் கும்பலின் ஏஜென்ட் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

 யார்?

யார்?

அதில், பத்மா, ரோஸ்லி என்ற இரண்டு பெண்களையும் அவர்கள் நரபலி கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. வைத்தியன் பகவான் சிங் மற்றும் லைலா என்று தம்பதிகளுக்காக இந்த இரண்டு பெண்களை நரபலி கொடுத்துள்ளனர். அவர்களுக்கு செல்வ செழிப்பு ஏற்பட வேண்டும் என்பதற்காக இவர்கள் இருவரையும் நரபலி கொடுத்துள்ளனர். பத்மாவை கடந்த ஜூன் மாதம் நரபலி கொடுத்துள்ளனர்.

ரோஸ்லி

ரோஸ்லி

ரோஸ்லியை கடந்த செப்டம்பர் மாதம் நரபலி கொடுத்துள்ளனர். இது தொடர்பாக கொச்சி போலீசார் அளித்த பேட்டியில், இந்த கொலைகள் மிக மிக கொடூரமாக நடந்து உள்ளது. பகவான் சிங் ஒரு மருத்துவர். இவருக்கு பொருளாதார ரீதியாக பிரச்சனை இருந்துள்ளது. இதையடுத்து அவர் சாபியை சந்தித்து தனது பணக்கஷ்டம் பற்றி தெரிவித்து உள்ளார். அப்போது சாபி, எனக்கு பணக்கஷ்டம் இருந்தது.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

நான் ஒரு பெண்ணை நரபலி கொடுத்தேன். அதன்பின் எனக்கு பொருளாதார ரீதியாக பிரச்சனை இல்லை என்று கூறி உள்ளார். இதையடுத்து அவரின் வார்த்தைகளை கேட்டு பெண்களை நரபலி கொடுக்க பகவான் சிங் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து பத்மா, ரோஸ்லிக்கு வேலை கொடுப்பதாக கூறி இரண்டு பெண்களை சாபி ஏமாற்றி அழைத்து வந்து நரபலி கொடுத்துள்ளார், என்று போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

 கேரளா

கேரளா

கேரளாவில் இதற்கு முன் பணம் சேர்க்க வேண்டும் என்று நரபலி நடந்ததே இல்லை. இவர்கள் இருவரையும் முதலில் வெட்டி கொன்றுள்ளனர். அதன்பின் அவர்களை தீ மூட்டி எரித்துள்ளனர். இந்த சாம்பலை வைத்து பின்னர் பூஜை செய்துள்ளனர் என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. சாபி இதற்கு முன் இப்படி வேறு பெண்களை கொன்று இருக்கிறாரா என்று விசாரணை செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே தன்னுடைய பொருளாதார பிரச்சனைக்காக ஒருவரை கொன்றதாக இவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

கொடுமை

கொடுமை

இதனால் அந்த பெண் யார் என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது. சாகிப் என்ற இளைஞர்தான் இவர்களின் மாஸ்டர்மைண்ட் என்று கூறப்படுகிறது. அவரை போலீசார் தேடி வருகின்றனர். மற்ற 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நரபலிகளுக்கு பின் பெரிய கும்பல் இருக்கலாம் என்று கருதுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+