சூர்யா ரசிகர்களுக்கு அதிர்ச்சி... ரூ.6.5 லட்சம் செலவில் வைக்கப்பட்ட கட் அவுட் அகற்றம்
Recommended Video
திருவள்ளூர்: திருத்தணி புறவழிச்சாலையில் ரூ 6.5 லட்சம் செலவில் வைக்கப்பட்டிருந்த 220 அடி உயர சூர்யா கட் அவுட் அகற்றப்பட்டது.
நீண்ட இடைவேளைக்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே படம் வெளியாக உள்ளது. இந்த படம் நாளை வெளியாக உள்ள நிலையில், நடிகர் சூர்யாவுக்கு 220 அடியில் கட் அவுட்டை ரசிகர்கள் வைத்துள்ளனர்.
அனுமதியின்றி பிரமாண்ட கட் அவுட் வைக்கப்பட்டுள்ளதாக கூறி, நகராட்சி ஆணையர் ராஜேஸ்வரி தலைமையில் ஊழியர்கள் கட் அவுட்டை அகற்றி வருகின்றனர்.

செல்வராகவன் - சூர்யா கூட்டணி
இயக்குநர் செல்வராகவன் - சூர்யா கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் என்.ஜி.கே. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு ‘யு' சான்றிதழ் கிடைத்துள்ளது.

அரசியல் பின்னணி
முழுக்க முழுக்க அரசியல் பின்னணியை மையப்படுத்திய இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. நாளை இந்த படம் திரைக்கு வருகிறது. நடிகர் சூர்யாவுக்கு இதற்கு முன் வெளியான, தானா சேர்ந்த கூட்டம் படத்திலும், அரசியல் பேசப்பட்ட நிலையில், மீண்டும் அரசியலை மையப்படுத்திய படத்தில் நடித்துள்ளார்.

திருவிழா கோலம்
படத்தை பிரபலப்படுத்தும் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வரும் நிலையில், சூர்யா ரசிகர்களும் படத்திற்கான விளம்பரத்தில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை வெளியாக உள்ள திரையரங்குகளில், தோரணங்கள், தங்கள் கற்பனைக்கு ஏற்றவகையிலான கட் அவுட்கள் என திருவிழா போல், ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். சூர்யா படம் வெளியாகி கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகியுள்ளதால், படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

சமூக வலைதளங்களில் வைரல்
இந்தநிலையில், நடிகர் சூர்யாவுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக இதுவரை யாருக்கும் வைக்காத உயரத்திற்கு கட் அவுட் வைக்க ரசிகர்கள் திட்டமிட்டனர். அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் சூர்யாவுக்கு 220 அடியில் கட் அவுட் வைக்க திட்டமிட்டு, அவரது ரசிகர்கள் சில தினங்களுக்கு முன் பூஜையுடன் வேலைகளை தொடங்கினர். அந்த பணி முடிந்து, நேற்று கட் அவுட் பிரமாண்டமாக வைக்கப்பட்டது. இந்த கட் அவுட்டின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.

கட் அவுட் அகற்றம்
இதற்கு முன்னதாக விஸ்வாசம் படத்திற்காக நடிகர் அஜித்திற்கு வத்தலக்குண்டில் 190 அடியில் கட் அவுட் வைக்கப்பட்டிருந்தது. இந்த சாதனையை முறியடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சூர்யா ரசிகர்கள் 220 அடிக்கு கட் அவுட் வைத்திருந்தனர். ஆனால், முறையான அனுமதி பெறாததால் கட் அவுட்டை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர். ஆசையுடன் வைக்கப்பட்ட மாஸ் கட் அவுட், பட ரிலீஸ் முன்பே அகற்றப்பட்டது, சூர்யா ரசிகர்களை வருத்தமடைய வைத்துள்ளது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications