மீஞ்சூர் அருகே குளத்தில் மூழ்கி இரு சிறுவர்கள் பலி.. காப்பாற்ற சென்ற பெண்ணும் பலியான சோகம்
பொன்னேரி: மீஞ்சூர் அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே குளத்தில் மூழ்கி மூன்று பேர் உயிரிழந்தனர். செங்கழுநீர்மேடு கிராமத்தை சேர்ந்த ஷீலா (21) என்பவர் அருகில் உள்ள குளத்திற்கு துணி துவைப்பதற்காக சென்றுள்ளார்.

அப்போது அவரது உறவினர்களின் குழந்தைகளான ஜெயப்ரகாஷ் (7), குணால் (6) ஆகிய இருவரும் ஷீலாவுடன் குளத்திற்கு சென்றுள்ளனர். ஷீலா துணிகளை துவைத்து கொண்டிருந்த போது சகோதரர்கள் இருவரும் குளத்தில் குளித்துள்ளனர்.
திடீரென இருவரும் தண்ணீரில் மூழ்கி கூச்சலிட்டதால் ஷீலா துணிகளை போட்டுவிட்டு குளத்தில் குதித்து சிறுவர்களை காப்பாற்ற முயன்றுள்ளார். எனினும் சேற்றில் சிக்கி மூவரும் உயிரிழந்தனர்.
தகவலறிந்த கிராம மக்கள் சடலங்களை குளத்திலிருந்து மீட்டனர். பிரேத பரிசோதனைக்காக சடலங்களை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து காட்டூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே கிராமத்தில் சகோதரர்களான 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications