Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அயன் பாக்ஸ் யூஸ் பண்றீங்களா? கவனம் மக்களே.. திருவள்ளூரில் பள்ளி மாணவனின் உயிர் போன சோகம்

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் விடையூர் அருகே அயன் பாக்ஸில் மின்சாரம் பாய்ந்து 9 ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

நாம் வீட்டில் தினமும் மின்சாதன பொருட்களை அதிகமாக பயன்படுத்தி வருகிறோம். இதனை நாம் கவனமுடன் கையாள வேண்டும். இல்லாவிட்டால் விபரீதங்கள் நடந்து விட அதிக வாய்ப்புள்ளது. ஆனாலும் கூட நம்மில் பலரும் செல்போன் சார்ஜர், லேப்டாப், அயன் பாக்ஸ் உள்ளிட்ட தினமும் பயன்படுத்தும் பொருட்களை அலட்சியமாக கையாளுவதை வாடிக்கையாக வைத்துள்ளோம்.

tiruvallur iron box


குறிப்பாக ஸ்விட்சை ஆன் செய்துவிட்டு செல்போன் சார்ஜர், லேப்டாப் சார்ஜர், அயன் பாக்ஸ் உள்ளிட்டவற்றை பிளக் பாயிண்ட்டில் சொறுகுவது, அதேபோல் ஸ்விட்சை ஆப் செய்யாமல் மின்சாதன வயர்களை அப்படியே கழற்றுவது உள்ளிட்டவற்றை செய்து வருகிறோம். மின்சாதன வயர்களில் ஏதேனும் சேதம் ஏற்பட்டாலும் அதனை உடனடியாக மாற்றாமல் இருப்பதும் உண்டு. இப்படியான அலட்சியம் என்பது நம் உயிரையே பறித்து விடும்.

இந்நிலையில் தான் தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் அயன்பாக்ஸ் பள்ளி மாணவனின் உயிரை பறித்துள்ள சோக சம்பவம் நடந்துள்ளது. அதாவது திருவள்ளூர் மாவட்டம் விடையூர் நெமிலி அகரத்தை சேர்ந்தவர் ஹரிபாபு. இவரது மகன் தீபக் குமார். இவருக்கு 14 வயது ஆகிறது. விடையூரில் உள்ள அரசு பள்ளியில் 9 ம் வகுப்பு படித்து வந்தார்.

ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் அதனை தொடர்ந்து வரும் ஞாயிற்றுகிழமையால் பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை என்பது அளிக்கப்பட்டது. இதையடுத்து நேற்றைய தினம் தீபக் குமார் தனது பள்ளி சீருடையை இஸ்திரி செய்வதற்காக வீட்டில் அயன்பாக்ஸ் பயன்படுத்தினார். அப்போது திடீரென்று அயன் பாக்ஸில் இருந்து மின்சாரம் அவர் மீது பாய்ந்தது. இதையடுத்து அவர் உடனடியாக மயங்கி உள்ளார்.

இதையடுத்து குடும்பத்தினர் தீபக் குமாரை மீட்டு விடையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு மேல்சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி தீபக் குமார் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி திருவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் விடையூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களின் வீடுகளில் அயன் பாக்ஸ் பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+