பதற வைக்கும் சிசிடிவி காட்சி .. திருத்தணியில் வாலிபரை ஒட்டலில் வைத்து வெட்டி கொன்ற கும்பல்
Recommended Video
திருவள்ளூர்: திருத்தணியில் இன்று மாலை நீதிமன்றம் அருகில் வாலிபரை ஓட ஓட விரட்டிய 4 பேர் கும்பல் அவரை ஒரு ஓட்டலில் மடக்கி சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி உள்ளது. இந்த படுகொலை சம்பவம் திருத்தணி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் அடிவாரத்தில் உள்ள நீதிமன்றம் அருகில் இன்று மாலை வேளையில் நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் வீச்சருவாளுடன் வாலிபர் ஒருவரை துரத்திச் சென்றனர்.

அந்த வாலிபர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் தப்பி ஓட்டினார். அங்கு வாலிபரை மடக்கிய 4 பேர் கும்பல் தலை மற்றும் கை கால்களில் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியது. பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தப்பிச்சென்ற மர்ம கும்பல் ரயில் தண்டவாளம் மற்றும் திருத்தணி நகருக்குள் ஓடியது. அவர்களை திருத்தணி போலீசார் விரட்டிச் சென்றனர் ஆனால் மர்ம கும்பலை பிடிக்க முடியாமல் போலீசார் திரும்பி வந்துவிட்டனர்.

இதனிடையே வெட்டுப்பட்ட வாலிபர் யார் என்று தெரியவில்லை மற்றும் இவரை வெட்டிய நான்கு பேர் கொண்ட கும்பல் யார் என்றும் இதுவரை தெரியவில்லை இதனிடையே வெட்டுப்பட்ட வாலிபர் திருத்தணி மருத்துமனைக்கு கொண்டு வரும் வழியில் உயிரிழந்தார. இறந்த வாலிபர் 35 வயது இருக்கும் என கூறப்படுகிறது. தற்போது அவரது பிரேதம் திருத்தணி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
திருத்தணி போலீஸ் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். விரைவில் அவர் யார் என்பது குறித்த தகவலும், வெட்டியவர்கள் யார் என்பது குறித்த தகவலுடன் அவரை கைது செய்த தகவலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications