எடப்பாடி பேசும்போதே.. பக்கத்தில் சட்டென சரிந்த முக்கிய பிரமுகர்.. அதிமுக பிரச்சாரத்தில் பதற்றம்
திருவள்ளூர்: அதிமுக சார்பில் "மக்களை காப்போம்.. தமிழகத்தை மீட்போம்!" என்ற பெயரில் பிரச்சாரம் நடந்து வருகிறது. அதன்படி எடப்பாடி பழனிசாமி திருவள்ளூரில் பேசிக் கொண்டு இருந்தபோது அருகே இருந்த திருவள்ளூர் அதிமுக மாவட்ட செயலாளர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் ஆரம்பித்துவிட்டன. ஒரு பக்கம் கூட்டணி பேச்சுவார்த்தை, இன்னொரு பக்கம் பிரச்சாரம் என்றே அனைத்து அரசியல் கட்சிகளும் செயல்பட்டு வருகிறது. அதன்படி அதிமுக சார்பில் "மக்களை காப்போம்.. தமிழகத்தை மீட்போம்!" என்ற பெயரில் பிரச்சாரம் நடந்து வருகிறது.

இதில் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். அதன்படி அவர் இன்றைய தினம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டியில் பிரச்சாரம் செய்தார்.
அப்போது எடப்பாடி பழனிசாமி பிரச்சார வாகனத்தில் நின்றிருந்த மாவட்டச் செயலாளர் மயக்கமடைந்தா். எடப்பாடி பேசிக் கொண்டு இருந்தபோது சிறுணியம் பலராமன் மயங்கி விழுந்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
அதில் எடப்பாடி பழனிசாமி பேசும்போதே, அருகே நின்றிருந்த பலராமன் அசவுகரியமாக உணர்வது தெரிகிறது. இதை உணர்ந்த பாதுகாவலர்கள் அவரிடம் என்னாச்சு என கேட்கிறார்கள். அப்போது அவர் தலை சுற்றுகிறது என்பது போலச் சொல்கிறார். பிறகு சில நொடிகளில் அவர் சரியவே அங்கிருந்த செக்யூரிட்டி அவரை தாங்கி பிடித்தனர்.
இருப்பினும், நல்வாய்ப்பாக அவருக்கு மோசமான உடல்நிலை பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. அவருக்கு எடப்பாடி வாகனத்திலேயே முதலுதவி சிகிச்சை தரப்பட்டது. இதையடுத்து மீண்டும் வாகனத்தின் மீது ஏறிய பலராமன், எடப்பாடி பழனிசாமிக்கு வீர வாளை பரிசாக அளித்தார்.
-
எங்களை தொட்டுருக்கவே கூடாது குழந்தை.. தவெகவுக்கு அதிமுக பைனல் வார்னிங் -
நீ வேணா சண்டைக்கு வா.. எடப்பாடியிடம் விடாமல் ஒரண்டை இழுக்கும் சி.விஜயபாஸ்கர்! ஓ.. இதுதான் ப்ளானா? -
சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் போட்ட பகீர் குண்டு.. ஆடிப்போன அதிமுக.. இபிஎஸ்-க்கு இப்படியொரு சிக்கலா -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்? -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்.. சிவி சண்முகத்தை அடுத்து சி. விஜயபாஸ்கரும் பரபர ட்வீட் பதிவு -
எடப்பாடி பழனிசாமிக்கு விழுந்த அரசியல் அடி.. தவெகவுக்கு தாவ ரெடியாகும் முக்கிய புள்ளி! இதுதான் காரணமா -
இனிதான் ஆரம்பம்.. விஜயபாஸ்கர் பலே திட்டம்.. வெளியான ஆடியோ -
விஜய் பர்த்டே ஸ்பெஷல்: இரண்டு ‘விஜயபாஸ்கர்’களின் அதிரடி மூவ்! இத்தனை இடிக்கு எடப்பாடி தலை தாங்குமா? -
"எங்கே சென்றது சிங்கப்பெண் அதிரடி படை?" கும்மிடிப்பூண்டி வழக்கில் இபிஎஸ், அன்புமணி கண்டனம்












Click it and Unblock the Notifications