ஜீவனாம்சம் கேட்டு வந்த மனைவி.. ஆட்டோவில் கண்ட அந்த காட்சி.. திருவள்ளூர் ரோடெல்லாம் கணவனுக்கு கச்சேரி
திருவள்ளூர்: ஜீவனாம்சம் கோரி, விவாகரத்தான மனைவி வழக்கு தொடுத்துள்ள நிலையில், இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.. எனினும், யாருமே எதிர்பாராதவகையில், திருவள்ளூர் கோர்ட்டில் இப்படியொரு சம்பவம் நடந்து, பரபரப்பை தந்துவிட்டது.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியை சேர்ந்தவர் சத்யா... இவரது கணவர் பெயர் முனீந்திரா. சத்யாவின் உறவினரானஇவர், காளஹஸ்தி பகுதியை சேர்ந்தவர்.. இந்த தம்பதிக்கு திருமணமாகி 10 வருடங்கள் ஆகின்றன.. குழந்தைகள் இல்லை.

இந்நிலையில் முனீந்திரா, பிசினஸ் செய்வதற்காக, சத்யா பெயரில் வங்கியில் 10 லட்ச ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார்.. ஆனால், இந்த தொகை போதாமல், தன்னிடமிருந்த 40 சவரன் நகையையும் அடகுவைத்து கணவருக்கு தந்தார் சத்யா..
கோழிபண்ணை: இதையடுத்து, ஆந்திராவில் கோழி பண்ணையை துவக்கினார் முனீந்திரா.. ஆனால், முனீந்திராவுக்கு, திடீரென வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது... இந்த விஷயம் சத்யாவுக்கு தெரிந்து கொந்தளித்து போய்விட்டார். இது தொடர்பாக கணவரிடம் கேள்வி எழுப்பியதையடுத்து, தம்பதிக்குள் தகராறு வெடித்தது.
இறுதியில், சத்யாவை விவாகரத்து செய்ய முடிவு செய்தார் முனீந்திரா.. இதற்காக ஆந்திர மாநில கோர்ட்டில் விவாகரத்து வழக்கு தொடுத்து, அதில் வெற்றியும் பெற்றார்.. சத்யாவையும் வீட்டைவிட்டு வெளியேற்றினார்.
விவாகரத்து: ஆனால், சத்யாவுக்கு ஜீவனாம்சம் எதுவும் தரப்படவில்லை. எனவே, திருவள்ளூர் கோர்ட்டில் ஜீவனாம்சம் கேட்டு, கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு சத்யா வழக்கு தொடர்ந்தார்.. இந்த வழக்கு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
இதுதொடர்பாக நேற்றைய தினமும், சத்யாவும், முனீந்திராவும் ஆஜராகியிருந்தனர்.. இருவருமே வாய்தாவையும் முடித்துவிட்டு கிளம்பினார்கள்.. இதில், சென்னை-திருப்பதி ஹைவேஸில் ஆட்டோவில் உறவுக்கார பெண்ணுடன் முனீந்திரா வந்து கொண்டிருந்தார்.. அப்போது ஆட்டோவை மடக்கிய சத்யா, முனீந்திராவை அடித்து உதைத்தார்..
உறவுக்கார பெண்: தடுக்க வந்த உறவுக்கார பெண்ணுக்கும் சரமாரி உதை விழுந்தது.. இதனால் பயந்து போன அநத பெண், ஆட்டோவின் மறுபக்கத்தில் எகிறி குதித்து தப்பிக்க முயன்றார்.. ஆனால், அவர் கீழேவிழுந்து படுகாயமடைந்துவிட்டார். எனினும், முனீந்திராவை சத்யா விடவேயில்லை.. நடுரோட்டிலேயே புரட்டி புரட்டி எடுத்தார். இதனால் ரோட்டில் சென்ற அனைவருமே இதை நின்றுகொண்டு வேடிக்க பார்க்க துவங்கிவிட்டனர்... தொடர்ந்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
பிறகு, சத்யாவுடன் வந்த வக்கீல்கள், ஆக்ரோஷத்துடன் காணப்பட்ட சத்யாவை தடுத்துநிறுத்தினார்கள்.. முனீந்திரா, சத்யா இருவரையுமே போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தார்கள்.
இதுதான் காரணம்: அப்போதுதான் உண்மை தெரியவந்தது.. அதாவது, முனீந்திராவுக்கு தமிழ் தெரியாதாம்.. திருவள்ளூர் கோர்ட்டில் வழக்கு நடப்பால், தமிழ் பேசத்தெரிந்த உறவுக்கார பெண்ணை, கோர்ட்டுக்கு அழைத்து வந்தாராம் முனீந்திரா. ஆனால், இன்னொரு பெண்ணுடன் சுசீந்திராவுக்கு தொடர்பு இருப்பதாக நினைத்துக்கொண்டு, இருவரையுமே தாக்கினாராம் சத்யா.. தற்போது இவர்களின் விவாகரத்து வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளதால், இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர் திருவள்ளூர் போலீசார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications