Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பூரித்த பொன்னேரி.. ஒருத்தருமே வரலயாமே.. அரசு பள்ளியில் அசத்தியது யார் பாருங்க..திருவள்ளூர் ஆச்சரியம்

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்: வியக்கத்தகுந்த சம்பவம் ஒன்று திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்து, மொத்த பேரையும் அசத்தி விட்டது.. இந்த செய்திதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ளது வஞ்சிவாக்கம் ஊராட்சி.. இங்கு ஆசானபுதூர் அரசுப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது...

Amazing incident in Tiruvallur and Do you know students open newly built Government school Buildings near Thiruvallur

இந்த அரசு பள்ளியில், காமராஜர் துறைமுக சமூக மேம்பாட்டு நிதியின்கீழ், கிட்டத்தட்ட 15.60 ரூபாய் லட்சம் மதிப்பில் அரசு பள்ளி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.. இவைகளுடன் 7 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அதே பள்ளியில் சமையலறை கட்டிடங்களும் கட்டப்பட்டன.

என்ன காரணம்: இந்த பள்ளி கட்டிடத்தையும், சமையலறை கட்டிடத்தையும் கட்டி முடித்து, பல மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால், இந்த கட்டிடங்கள் திறக்கப்படவில்லை.. மாணவர்களின் பயன்பாட்டிற்கும் வழங்கப்படவுமில்லை..

எனவே, கட்டி முடிக்கப்பட்ட, கட்டிடங்களை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போதும், ஒருத்தருமே இது தொடர்பான நடவடிக்கையை எடுக்கவில்லை, கட்டிடங்களையும் திறக்கவில்லை..

பள்ளி கட்டிடம்: இதனால் பொறுத்து பொறுத்து பார்த்த அந்த கிராம மக்கள், தாங்களே நேரடியாக அந்தப் பள்ளி கட்டிடத்தை திறந்துவைக்க முடிவு செய்தார்கள்.. இதையடுத்து கிராம மக்களும், அந்த பள்ளி மாணவர்களும் ஒன்று சேர்ந்து பள்ளியை திறக்க தயாரானார்கள்.

இதற்காக பிரம்மாண்டமான ஏற்பாடுகளையும் முன்னெடுத்தனர்.. அனைவரும ஒன்றுசேர்ந்து சீர்வரிசை தட்டுகளுடன் மேளதாளம் முழங்க தெருக்களில் ஊர்வலமாக பள்ளிக்கு வருகை தந்தனர். கிராம மக்கள் சீர்வரிசை பொருட்களுடன் வந்து நின்றதுமே, பள்ளி ஆசிரியர்கள் அவர்களை தாம்பூல தட்டில் ஆரத்தி எடுத்து, அவர்களை வரவேற்றனர். அதற்கு பிறகு, பள்ளி கட்டிடத்தை குத்து விளக்கு ஏற்றி ரிப்பன் வெட்டி திறப்பு விழா செய்யப்பட்டது..

பூரிப்பு: இதையெல்லாம் பார்த்து, மாணவ மாணவியர்களும், ஆசிரியர்களும் மகிழ்ச்சியிலும் நெகிழ்ச்சியிலும் திக்குமுக்காடிவிட்டனர்.. ஆனால், இப்போது சிக்கல் என்னவென்றால், பள்ளிக்கூடம், கிச்சன் இரண்டும் ரெடியாக உள்ளது, ஆனால், பள்ளியில் கழிவறை வசதி இல்லையாம்.. எனவே, அதனை விரைவாக செய்து கொடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

விஐபிகளும், அரசியல்வாதிகளும் என காலம் காலமாக பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்துவரும் நடைமுறை நம்முடைய தமிழகத்தில் உள்ள நிலையில், பள்ளி மாணவர்களே, தங்களுக்கான பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்திருப்பது வியப்பையும், ஆச்சரியத்தையும் பெற்று வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+