மன்னார்குடி பஸ் ஸ்டாண்ட் கட்டுமானப் பணி! ஸ்பீடாக வேலையை முடிக்கணும்! முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!
முதல்வரை தனது தொகுதிக்கு அழைத்துச் சென்று ஆய்வு நடத்த வைத்த டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ.
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் மன்னார்குடியில் நடைபெற்று வரும் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கிருந்த அலுவலர்களை அழைத்த அவர், உரிய காலத்திற்குள் முடித்து, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இது தொடர்பான விவரம் வருமாறு;

திருவாரூர் பயணம்
திருவாரூர் மாவட்டத்திற்கு நேற்று வருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலின், திருவாரூர் கிடங்கு வளாகத்தில் புதிதாக கட்டி திறக்கப்பட்டுள்ள 4250 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரையுடன் கூடிய நவீன நெல் சேமிப்பு நிலையத்திற்கு நேரடியாக சென்று அங்கு வைக்கப்பட்டுள்ள நெல்மணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மன்னார்குடி பஸ் ஸ்டாண்ட்
அதனைத் தொடர்ந்து இன்று (22.2.2023), மன்னார்குடி நகராட்சியில் 26.76 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய ஒருங்கிணைந்த நவீன பேருந்து நிலையத்திற்கான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 2021-22ஆம் ஆண்டிற்கான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மானியக் கோரிக்கையில், மன்னார்குடி நகராட்சி, காமராஜர் பேருந்து நிலையம் மற்றும் சந்தைப்பேட்டை பேருந்து நிலையம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து புதிய ஒருங்கிணைந்த நவீன பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

நேரில் முதல்வர் ஆய்வு
அந்த அறிவிப்பிற்கிணங்க, மன்னார்குடி புதிய ஒருங்கிணைந்த நவீன பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகளுக்காக 26.76 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிக்காக பேருந்து நிலையத்தின் உட்பகுதி மற்றும் வெளிப்பகுதியில் உள்ள நகராட்சி கடைகள் காலி செய்யப்பட்டு, பேருந்து நிலையத்தில் உள்ள பழைய கட்டடங்களை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்புதிய பேருந்து நிலையத்தில் 50 பேருந்து நிறுத்தங்கள், 117 புதிய கடைகள் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பிடம் ஆகியவை அமைக்கப்படும்.

விரைந்து முடிக்க உத்தரவு
இப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின், புதிய ஒருங்கிணைந்த நவீன பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை உரிய காலத்திற்குள் முடித்து, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
-
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல்












Click it and Unblock the Notifications