திருவள்ளூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

87 வயதில் வாக்களிக்க ஆசைப்பட்ட பாப்பம்மாள்.. கைகளில் குழந்தை போல் தூக்கிச் சென்ற மருமகள் பாண்டியம்மா

Google Oneindia Tamil News

திருவள்ளூர்: திருவள்ளூரில் ஊராட்சிகளுக்கான தேர்தலின் போது வாக்குச் சாவடியில் சக்கர நாற்காலி இல்லாததால் 87 வயதான மாமியாரை கைகளில் தூக்கி சென்று வாக்களிக்க வைத்த மருமகளை அனைவரும் நெகிழ்ச்சியுடன் பார்த்தனர்.

பூந்தமல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட சென்னீர்குப்பம் ஊராட்சி ஏரிகரை தெருவைச் சேர்ந்தவர் பாப்பம்மாள் (87). இவரது மருமகள் பாண்டியம்மா. மிகவும் வயதான பாப்பம்மாள் உள்ளாட்சி தேர்தலில் தனது வாக்கை செலுத்த வேண்டுமென அவரது மருமகளிடம் கூறியுள்ளார்.

அமித்ஷா தெளிவுபடுத்தியும்.. ஸ்டாலின் குழப்புகிறார்.. அரசியல் சூழ்ச்சி செய்கிறார்..எடப்பாடியார் நறுக்அமித்ஷா தெளிவுபடுத்தியும்.. ஸ்டாலின் குழப்புகிறார்.. அரசியல் சூழ்ச்சி செய்கிறார்..எடப்பாடியார் நறுக்

ஆட்டோ

ஆனால் பார்வை சரியாக தெரியவில்லை என்றும் நடந்து செல்ல முடியாத நிலையில் எப்படி வாக்களிக்க முடியும் என பாண்டியம்மா கேட்டுள்ளார். ஆனால் தான் வாக்களித்தே தீரவேண்டும் என பாப்பம்மாள் கூறியதால் சற்றும் யோசிக்காமல் பாப்பம்மாளை ஆட்டோவில் அழைத்து வந்தார்.

வாக்களிப்பு

வாக்களிப்பு

வாக்குச்சாவடி மையத்திற்குள் அழைத்து செல்ல வீல் சேர்
இல்லை. இதனால் சற்றும் யோசிக்காத பாண்டியம்மா குழந்தையை தனது கைகளால் தாய் தூக்கிச் செல்வது போல மாமியாரை
தூக்கிச்சென்று வாக்களிக்க செய்தார்.

பாண்டியம்மா

பாண்டியம்மா

இந்த சம்பவத்தை பார்த்த வாக்காளர்கள் மற்றும் போலீசார் மிகவும் நெகிழ்ச்சி அடைந்தனர். சிலர் நேரடியாக சென்று பாண்டியம்மாளை பாராட்டினர்.

மருமகள்

மருமகள்

வாக்களிக்க வாய்ப்புகள் இருந்தும் சிலர் தங்கள் சோம்பேறித்தனத்தால் வாக்களிக்காமல் வீட்டிலேயே இருந்து வரும் நிலையில் 87 வயது மூதாட்டி வாக்களிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை அவரது மருமகள் தட்டிக் கழிக்காமல் தூக்கி வந்து வாக்களித்தார்.

English summary
Daughter in law carries her mother in law who is 87 years old to cast her vote in Thiruvallur. After she knew that there is no wheel chair in polling station she carries her mother in law in his hands like baby.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X