திமுக பிரமுகருக்கு வந்த "விபரீத" ஆசை.. பக்காவா ஸ்கெட்ச் போட்டு.. கடைசியில் பறந்து போச்சு மானம்

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்: ஒரு திமுக பிரமுகருக்கு விபரீத ஆசை வந்திருக்கிறது.. அதற்காக பக்காவாக ஒரு ஸ்கெட்ச் போட்டார்.. ஆனால், அது சொதப்பலாகி, மொத்த மானமும் திருவள்ளூரில் அவருக்கு பறந்து கொண்டிருக்கிறது!

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன்... இவர் சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும்கூட... அதேபோல சோழவரம் ஒன்றிய துணைத் தலைவராகவும் இருக்கிறார்.

DMK Thiruvallur Executive arrested for set up rowdies

இவரது அண்ணன் பெயர் கண்ணன்.. இவரும் திமுக பிரமுகர்தானாம்.. பெரியபாளையம் அருகே ரியல் எஸ்டேட் தொழில் சம்பந்தமாக கடந்த 27-ம் தேதி காரில் சென்று கொண்டிருந்தார்.. அப்போது, கன்னிகைபேர் ஏரிக்கரை அருகே கார் வந்தபோது, திடீரென 2 பைக்கில் 4 பேர் வந்தனர். அவர்களை பார்த்ததும் கண்ணனும், அவரது டிரைவரும் காரை விட்டு அவசர இறங்கி ஓடிவிட்டனர்.

அவர்கள் அந்த காரை வழிமறித்து சரமாரியான தாக்குதலையும் நடத்திவிட்டு, அந்த பைக்கிலேயே தப்பி சென்றும் விட்டனர்.. இதையடுத்து, நடந்த சம்பவம் குறித்து கண்ணன், பெரியபாளையம் போலீசில் புகார் செய்தார்.. அந்த புகாரின்பேரில், குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது... சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சிசிடிவியும் ஆய்வு செய்யப்பட்டது.

அதனடிப்படையில், சிலர் சிக்கினர்.. அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதில், வக்கீல் ராஜா என்பவரின் பெயர் அடிபட்டது.. இவர் யார் என்று விசாரிக்க போனால், அப்போதுதான் விஷயம் வெளியே வந்தது.

கண்ணனுக்கு ஒரு ஆசையாம்.. அமைச்சர்கள் போல கையில் துப்பாக்கியுடன் பிஎஸ்ஓ பாதுகாப்புடன் காரில் வலம் வர வேண்டுமாம்.. அதுக்காக வக்கீல் ராஜாவிடம் ஐயா கேட்டுள்ளார்.. உயிருக்கு அச்சுறுத்தல் என்று ஒரு புகார் தந்தால், உடனே துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கிடைக்கும் என்று ராஜா ஐடியா தந்தாராம்.. அதனால்தான், ரவுடிகளை செட்டப் செய்து, தன்னுடைய காரை தானே ஆள் வைத்து நொறுக்கி இருக்கிறார் கண்ணன்.

கண்ணன், இவருக்கு அப்படி ஒரு ஐடியாவை தந்த வக்கீல் ராஜா, உட்பட 6 பேர் கைதாகி உள்ளனர்.. விசாரணை நடந்து வருகிறது.. அமைச்சர்கள் போல வாழ ஆசைப்பட்ட திமுக பிரமுகரின் மானம் காற்றில் போனதுதான் மிச்சம்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+