Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருவள்ளூரின் இதயத்தை உலுக்கிய அருணாவின் கடைசி நிமிட ஆடியோ.. புல் மருந்து தந்தாங்க! ஆடிப்போன விஏஓ 

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஏஓ அருணாவின் மரணம் மிகப்பெரிய பரபரப்பை தந்து வருகிறது.. தன்னுடைய காதலி அருணாவை அவரது குடும்பத்தினர் விஷம் கொடுத்து கொன்றுவிட்டதாக சக விஏஓ போலீசில் புகார் தந்துள்ள நிலையில், அந்த புகார்களை அருணா குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.. எனவே இது தொடர்பான விசாரணயை போலீசார் நடத்தி வருகிறார்கள்.. என்ன நடந்தது

பொன்னேரி அருகே உள்ள அகரம் கிராமத்தைச் சேர்ந்த 27 வயது அருணா என்பவர் பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட கீரப்பாக்கம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்துள்ளார்..

கிராம நிர்வாக அலுவலர்களுக்கான டிரெயினிங்கில், பொன்னேரி அடுத்த பாக்கம் கிராம வி.ஏ.ஓ. சிவபாரதியுடன் அருணாவுக்கு பழக்கம் ஏற்பட்டு அதுவே காதலாக மாறியது. ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு அருணாவின் குடும்பத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கிராம நிர்வாக அதிகாரி

ஆனால் சிவபாரதி அருணா வீட்டில் பெண் கேட்டு சென்றதற்கு சரியென்று சம்மதம் தந்தார்களாம்.. அருணாவிடம் மட்டும் சாதியை காட்டி மறுப்பு தெரிவித்தார்களாம்.. கடந்த 29ம் தேதி அருணா வீட்டில் திடீரென பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததாக கூறி, அவரது பெற்றோர் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அருணா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் சக வி.ஏ.ஓ. சிவபாரதி, அருணா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

அருணாவின் சகோதரர்கள் ரவி, ஜோதி, அரவிந்த், அஜித் ஆகியோர் சேர்ந்து அருணாவை கண்டபடி திட்டி கடுமையாக தாக்கி உள்ளனர். உறவுக்கார நபரையே திருமணம் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தி உள்ளனர்.. போலீசாக பணியாற்றி வரும் அருணாவின் அண்ணன் அரவிந்த், அருணாவை சாகுமாறு கூறி தற்கொலைக்கு தூண்டி உள்ளார்.

திருவள்ளூர் விஏஓ அருணா

ஜாதியை காரணம் காட்டி அருணாவை குடும்பத்தினர் 4 பேரும் அடித்து தாக்கி, அருணாவின் கை, கால்களை பிடித்து, புல் மருந்து (விஷம்) வாயில் ஊற்றி உள்ளனர்.. இதை அருணாவே எனக்கு போனில் சொல்லி கதறி அழுதார்.. மறுநாளே இறந்துவிட்டார்..

தன்னுடைய குடும்பத்திற்காக உழைத்தவர் அருணா.. தன்னுடைய சம்பளத்தில் 9 லட்சம் ரூபாய் லோன் வாங்கி, தனது அண்ணன் மற்றும் தம்பிக்கு வீடு கட்டிக் கொடுத்துள்ளார்.. , அப்படிப்பட்ட பெண்ணையே அவர்கள் சித்திரவதை செய்து கொன்றுள்ளனர்.. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகாரில் தெரிவித்துள்ளார்..

ஆனால் இந்த புகாரை அருணா தரப்பில் மறுத்துள்ளனர்.. எனவே இந்த சம்பவத்தின் உண்மைத்தன்மை குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.. ஆனால், அருணாவின் அண்ணன் ஆவடி காவல்நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிவதால், இந்த வழக்கு தொடர்பாக இன்னும் பதிவு செய்யவில்லை என்றும் சிலர் குற்றஞ்சாட்டுகிறார்கள்,,.

பயமா இருக்கு

இதனிடையே, மருத்துவமனையில் உயிரிழந்த அருணா, முன்தினம் தன்னுடைய காதலனுக்கு போனில் பேசியதாக கூறப்படும் ஆடியோ ஒன்று இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது..,

அதில், அருணா அழுதுகொண்டே, "நீ எங்க போனாலும் உன்னைத் தேடி வந்து வெட்டுவோம்னு சொல்றாங்க, நான் சாகுறதுக்கு பயப்படல, ஆனா நான் இல்லைன்னா நீ என்ன பண்ணுவன்னு தான் எனக்கு கவலையா இருக்கு.. அதை என்னால யோசிக்கவே முடியல" என்று பயத்துடன் பேசுவது பதிவாகியுள்ளது.

புல் மருந்து தந்துட்டாங்க

அதற்கு சிவபாரதி, அதெல்லாம் என்னை ஒன்னும் செய்ய மாட்டாங்க, தைரியமா இரு, அழாதே" என்கிறார்.. இந்த ஆடியோவுக்கு பிறகு, அருணா மீண்டும் ஒருமுறை சிவபாரதிக்கு மெசேஜ் அனுப்பினாராம்.. அதில், "வீட்டுல தான் எனக்கு புல் மருந்து கொடுத்துட்டாங்க, ஆனா நான் உன்னையத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்னதுக்கு இப்படி செஞ்சுட்டாங்க" என்று குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது.

அருணாவும் சிவபாரதியும் பேசிய உரையாடல் வெளியாகியுள்ள நிலையில், இந்த ஆடியோவின் உண்மைத்தன்மையும் தெரியவில்லை.. இது தொடர்பான விசாரணையிலும் போலீசார் மும்முரமாகி உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+