Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உடனே அது நடந்திருந்தால் பிழைத்திருப்பார்.. "இன்ஸ்டா குயின்" பிரதிக்ஷா தற்கொலையில் பெரும் சோகம்

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்: திருவள்ளூரில் இன்ஸ்டாகிராமில் பிரபலமான பிரதிக்‌ஷா உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில் அவரது ரீல்ஸ்களை வெளியிட்டு பலரும் சோகத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். பிரதிக்‌ஷா தற்கொலைக்கு முயன்று நீண்ட நேரம் உயிருக்கு போராடியதாகவும், ஒருவேளை யாராவது பார்த்திருந்தால் அவர் உயிர் பிழைத்திருப்பார் என்றும் கூறப்படுகிறது. கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பெரியகுப்பம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி என்பவரது மகள் பிரதிக்‌ஷா (வயது 9). திருவள்ளூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.

பிரதிக்‌ஷாவுக்கு சிறு வயதிலிருந்தே சினிமாவில் வரும் காமெடி காட்சிகளுக்கு டயலாக் பேசி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிடுவார். மேலும் சினிமா பாடல்களுக்கு முக பாவனையுடன் நடனமாடி சிறுமி வீடியோ வெளியிட்டு வந்தார். பிரதிக்‌ஷா தனக்கென இன்ஸ்டாகிராமில் பேஜ் ஆரம்பித்து அதில் ஏராளமான பாலோயர்களை கொண்டு வந்தார்.

இன்ஸ்டா குயின்

இன்ஸ்டா குயின்

அந்த பேஜில் அதில் சினிமா பாடல்கள், கானா பாடல்கள், கிராமிய பாடல்கள், காதல் பாடல்களுக்கு ஏற்றவாறு முகபாவனை காட்டி நடனமாடி 'ரீல்ஸ்' வீடியோக்களை வெளியிட்டார். குறிப்பாக ''ஹே... மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே... அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே... ம்... மச்சான் எப்போ வரப்போற மச்சான் எப்பவரபோற... ''கண் பாஷை பேசினால் நான் என்ன செய்வேன் கன்பியூஷன் ஆகிறேன்''... ''சின்ன சின்ன ஆச... திக்கி திக்கி பேச... மல்லிகைப்பூ வாசம் கொஞ்சம் காற்றோட வீச... ''தப்பு தண்டா பண்ணதில்ல... பொய் கூட சொன்னதில்லை நானு... அது நானு''... நாலு பேரு மத்தியில பொங்க வைப்பேன் நெத்தியில நானு... என பல்வேறு பாடல்களுக்கு ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளார். குழந்தை பிரதிக்‌ஷாவிற்கு இந்த வீடியோக்கள் "இன்ஸ்டா குயின்" என்று பட்டத்தை அளித்தது. அவரை பலரும் இன்ஸ்டா குயின் என்றே அழைத்து வந்தனர்,

சாவி கொடுத்தார்

சாவி கொடுத்தார்

இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று இரவு பிரதிக்‌ஷா பக்கத்து தெருவில் வசிக்கும் தனது பாட்டி வீட்டில் தனது தோழிகளுடன் விளையாடினாராம். அப்பொழுது அங்கு வந்த அவரது தந்தை கிருஷ்ணமூர்த்தியும் தாய் கற்பகமும் சிறுமி பிரதிக்‌ஷாவிடம் விளையாடியது போதும் வீட்டிற்கு சென்று படி என்று கூறியிருக்கிறார்கள். சிறுமி பிரதிக்‌ஷாவிடம் வீட்டு சாவியை கொடுத்து விட்டு மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளனர்.

ஜன்னல் கம்பி

ஜன்னல் கம்பி

சுமார் ஒரு மணி நேரம் கழித்து இருவரும் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள். அப்பொழுது வீட்டின் கதவு உள்பக்கம் தாழ்ப்பால் போடப்பட்டிருந்தது. இதையடுத்து கிருஷ்ணமூர்த்தி கதவை தட்டியிருக்கிறார். பலமுறை தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. பதறிபோன கிருஷ்ணமூர்த்தி படுக்கை அறை ஜன்னல் கதவை உடைத்து பார்த்திருக்கிறார். அப்போது சிறுமி பிரதிக்‌ஷா வெள்ளை நிற சிறிய துண்டால் ஜன்னல் கம்பியில் தூக்கில் தொங்கியது தெரியவந்தது.

பிரதிக்ஷா பலி

பிரதிக்ஷா பலி

உடனே வீட்டின் மேற்புற கூரையை பிரித்து வீட்டிற்குள் இறங்கிய கிருஷ்ணமூர்த்தி படுக்கை அறையின் கதவை உடைத்து உயிருக்கு போராடிய சிறுமியை மீட்டு உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார்கள். டாக்டர்கள் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி பிரதிக்‌ஷா மருத்துவமனையில் பரிதாபமாக இறந்துபோனார்.

விசாரணையில் தகவல்

விசாரணையில் தகவல்

இதனிடையே 9 வயது சிறுமியால் எப்படி தற்கொலை செய்திருக்க முடியும் என்று சந்தேகம் அடைந்த போலீசார் நேரில் வந்து ஆய்வு சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.அப்பொழுது சிறுமி பிரதிக்‌ஷா வீட்டில் படுக்கையறையில் மெத்தையின் மீது சிறிய ஸ்டூல் போட்டு ஏறி ஜன்னல் கம்பியில் துண்டை கட்டி தூக்குப்போட்டு கொண்டு அதன் பிறகு ஸ்டூலில் இருந்து குதித்ததும், அப்பொழுது துண்டு கழுத்தை முழுவதுமாக நெருங்காததால் தூக்கில் தொங்கியபடியே சிறுமி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தாமதம் ஆகிவிட்டது

தாமதம் ஆகிவிட்டது

வெளியேசென்ற கிருஷ்ணமூர்த்தி உடனடியாக வீட்டிற்கு வந்திருந்தால் ஒருவேளை சிறுமியை காப்பாற்றி இருக்க முடியும் என்றும் ஆனால் ஒரு மணி நேரம் கழித்து வந்ததால் சிறுமியை காப்பாற்ற முடியாமல் போனதாக விசாரணையில் தெரியவந்திருக்கிறது. சிறுமி பிரதிக்க்ஷா தனது தோழிகளுடன் விளையாடியதை தந்தை கண்டித்ததால் ஒருவேளை மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் விசாரித்து வருகிறார்கள். எந்த ஒரு பிரச்சனைக்கு தற்கொலை தீர்வு அல்ல.. தயவு செய்து தற்கொலை மன நிலைவந்தால் உடனே 104 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொண்டு பேசுங்கள். தற்கொலை தடுப்பு மையமான iCALLக்கு 9152987821 என்ற எண்ணில் அழைத்து பேசுங்கள். தற்கொலை மனநிலையை கைவிடுங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+