முகம் கொடுத்து பேசாத முதலமைச்சர்! அதிர்ச்சியில் அமைச்சர் ஆவடி நாசர்! இன்று காலை நடந்தது என்ன?
அமைச்சர் நாசர் மீதான முதலமைச்சரின் அதிருப்தி.
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்க சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசரிடம் முகம் கொடுத்து பேசாதது அவருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுக்கும் வகையில் அமைந்திருந்தது.
அதேபோல் திருவள்ளூர் மாவட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றால் எப்போதும் அமைச்சர் நாசரை ஓரிரு வரிகளாவது புகழ்ந்து பேசிவிட்டு தான் பேச வேண்டிய விவகாரத்திற்குள்ளேயே முதலமைச்சர் ஸ்டாலின் செல்வார். ஆனால் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய போது, எல்லோரது பெயர்களையும் உற்சாகமாக குறிப்பிட்ட முதல்வர், அமைச்சர் நாசர் அவர்களே என்ற வார்த்தைகளோடு அவர் பற்றி குறிப்பிடுவதை நிறுத்திக் கொண்டார்.
அதேபோல் சிறுமி டான்யாவை முதலமைச்சர் நலம் விசாரித்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் கூட ஆவடி நாசர் படம் இடம்பெறாதவாறு எடிட் செய்த பிறகே அதனை தனது Mk Stalin டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் ஸ்டாலின். ஆனால் அதேவேளையில் Cmo Tamilnadu என்ற அரசு சார்பில் நிர்வகிக்கப்படும் முதலமைச்சரின் டிவிட்டர் பக்கத்தில் மட்டும் அமைச்சர் நாசர் படமும் இடம்பெற்றிருக்கிறது.

ஸ்டாலின் சுற்றுப்பயணம்
ஸ்டாலின் திமுக இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்று பணியாற்றிய ஆரம்பக் காலங்களில் தமிழ்நாடு முழுவதும் அவர் சுற்றுப்பயணம் செய்வது வழக்கம். வாரத்திற்கு எப்படியும் நான்கு, ஐந்து நாட்கள் தமிழ்நாட்டில் ஸ்டாலினுடைய சுற்றுப்பயணம் இருக்கும். இப்படி ஸ்டாலின் செல்லும் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் அவருக்கு துணைக்கு மூன்று பேர் செல்வார்கள். அந்த மூன்று பேர் யார் யார் என்று பார்த்தோமானால் ஆவடி நாசர், பல்லாவரம் சிங்காரம், நாகை அசோகன் ஆகியோர் தான்.

ஏற்க முடியாத நிகழ்வு
இதில் பல்லாவரம் சிங்காரம், நாகை அசோகனுக்கு கிடைக்காத வாய்ப்பாக ஆவடி நாசருக்கு மேயர், மாவட்டச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் என பல பதவிகளை வழங்கி அழகுப்பார்த்தார் முதலமைச்சர் ஸ்டாலின். இந்நிலையில் அமைச்சர் நாசர் கோபப்படுகிறார், எடுத்தெறிந்து பேசுகிறார் என அவர் மீது இதற்கு முன்னர் பல புகார்கள் குவிந்த போதெல்லாம் அதை முதல்வர் ஸ்டாலின் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பொதுவிடம் என்று கூட பார்க்காமல் கல்லைக் கொண்டு தனக்கு கீழ் இருக்கும் நிர்வாகியை அவர் தாக்கியது தான் ஸ்டாலினால் ஏற்கவே முடியவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

கடும் கோபம்
அதுமட்டுமல்லாமல் துறை ரீதியிலான சில சர்ச்சைகளும் முதல்வருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் தான் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள திருவள்ளூர் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர் நாசரிடம் முகம் கொடுத்து கூட பேசாமல் திரும்பினார். சரி இப்போது எல்லாம் மறந்திருப்பார் பழையபடி பேசுவார் என எதிர்பார்த்த அமைச்சர் நாசருக்கு இந்த முறையும் முகம் கொடுத்து பேசாமல் முதல்வர் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

கட்சிப் பதவி
மேலும், எல்லாவற்றுக்கும் மேலாக நேற்றைய தினம் அமைச்சர் நாசர் மகனின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டது ஹை வோல்ட் ஷாக்காக இருந்திருக்கிறது. அமைச்சர் நாசர் மீது முதல்வர் எந்தளவுக்கு அதிருப்தியில் இருக்கிறார் என்பதை அவரது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ள படங்களை வைத்தே அறிந்துகொள்ள முடிகிறது. சிறுமி டான்யாவை முதலமைச்சர் நலம் விசாரித்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் கூட ஆவடி நாசர் படம் இடம்பெறாதவாறு எடிட் செய்த பிறகே அதனை தனது Mk Stalin டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் ஸ்டாலின். ஆனால் அதேவேளையில் Cmo Tamilnadu என்ற அரசு சார்பில் நிர்வகிக்கப்படும் முதலமைச்சரின் டிவிட்டர் பக்கத்தில் மட்டும் அமைச்சர் நாசர் படம் இடம்பெற்றிருக்கிறது.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications