குத்தம்பாக்கத்தில் பேருந்து நிலையம் சம்பந்தமாக சர்ப்ரைஸ்.. சென்னைக்கு குட் நியூஸ்.. மக்களே ரெடியா
திருவள்ளூர்: குத்தம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் 425 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டு வரும் நிலையில், அது எப்போது மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நேற்றைய தினம் இந்த பேருந்து நிலையத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்ட சிஎம்டிஏ அதிகாரிகள், சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர். இந்த தகவல்கள் பயணிகளின் கவனத்தை பெற்றுள்ளது.
திருமழிசை அருகே உள்ள குத்தம்பாக்கத்தில், புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று கடந்த 2019ல் தமிழக அரசு அறிவித்திருந்தது..

மக்களுக்கு குட்நியூஸ்
இதற்காக குத்தம்பாக்கம் கிராமத்தில், வீட்டுவசதி வாரியத்திடம் இருந்து, 24.8 ஏக்கர் நிலம் பெறப்பட்டு, 5 லட்சம் சதுர அடியில் ரூ.427 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி, 2021ல் ஆரம்பமானது.
அதாவது ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டப்படி, இங்கு மற்ற பேருந்து நிலையங்களில் விடுபட்ட பணிகள் என போலீஸ் ஸ்டேஷன், பணிமனை, ஏசி வசதி பல்வேறு பணிகளுக்கு திட்ட மதிப்பு ரூ.427 கோடியாக திருத்தி அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த பணிகள் இறுதிகட்டத்தையும் நெருங்கிவிட்டது.
திருவள்ளூர் திருமழிசை
இந்நிலையில், சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் பிரகாஷ், ஓய்வு பெற்ற சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணைய சிறப்பு செயலாளர் ஜெயக்குமார், தலைமை பொறியாளர் மகாவிஷ்ணு, குத்தம்பாக்கம் பேருந்து நிலைய வருவாய் அலுவலர் பால் பிரின்சிலி ராஜ்குமார் உள்பட அதிகாரிகள், பேருந்து நிலைய கட்டுமான பணிகளை நேற்றைய தினம் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அவர்கள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் செய்தியாளர்களிடம் பேசும்போது, பொதுமக்கள், போக்குவரத்து அதிகாரிகளுடன் நடத்திய கலந்தாய்வில் வந்த தகவலின் பேரில், பொங்கல் விடுமுறைக்கு பிறகு பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வரும்" என்று தெரிவித்தனர்.
குத்தம்பாக்கம் பேருந்து நிலையம்
குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் வந்துவிட்டால், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு செல்லும், அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படும்.
இது கோயம்பேடு, மாதவரம் மற்றும் கிளாம்பாக்கம் பகுதிகளில் உள்ள பேருந்து வசதிகளை அதிகரிக்கவும், நகரின் நான்காவது முக்கிய பேருந்து நிலையமாக மாறவும் உதவும். திருவள்ளூருக்கு அருகில் இருப்பதால், மேற்கு நோக்கிச் செல்லும் புறநகர் சேவைகளுக்கு இது முக்கியமான கட்டமைப்பாக அமையும்.
பஸ் ஸ்டாண்டு எப்போது திறக்கப்படும்
இந்த புதிய நிலையத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கான 9 ஏக்கர் பகுதி, ஒரு காவல் நிலையம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை 4 உடன் இணைக்கும் 18.2 ஏக்கர் அணுகு சாலை போன்ற வசதிகள் உள்ளன.
கடந்த வருடமே இந்த பேருந்து நிலையம் திறக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டும் வந்தது.. ஆனால் கட்டுமான பணிகள் குறித்த காலத்தில் முடியாதது, கூடுதல் வசதிகள் செய்ய சிம்டிஏ திட்டமிட்டது போன்ற காரணங்களால் திறப்பு விழா தள்ளிப்போனது. இதற்கு பிறகு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போதும் திறக்கப்படவில்லை.
பொங்கலுக்கு பிறகு
இதையடுத்து, ஜூலை இறுதிக்குள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போதும் திறக்கவில்லை. பிறகு ஆகஸ்ட் இறுதிக்குள் என்றார்கள், நவம்பர் இறுதிக்குள் என்றார்கள்.. ஆனால் பணிகள் முடியாததால் அப்போதும் திறக்கப்படவில்லை.
எனவே பண்டிகையை கருத்தில் கொண்டு, எப்படியும் பொங்கலுக்குள் திறக்கப்பட்டுவிடும் என்று கருதப்பட்டது. ஆனால், பொங்கல் விடுமுறைக்கு பிறகுதான் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வரும் என்று தற்போது சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications