மாஜி ஐஏஎஸ் சசிகாந்த் வெல்வாரா ? தந்தி டிவி எக்ஸிட் போலில் திருவள்ளூரில் காங்கிரசுக்கு தித்திப்பு!
திருவள்ளூர்: மிகுந்த எதிர்பார்ப்புடன் லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், எக்ஸிட் போல் வெளியாகியுள்ளது. தந்தி டிவி வெளியிட்டுள்ள தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பின் படி, திருவள்ளூரில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறுவார் என தெரவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 2019ம் ஆண்டை போல இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற்றிருக்கிறது. முதற்கட்டமாக 22 மாநிலங்களில் ஏப்ரல் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ம் தேதியும், 94 தொகுதிகளுக்கு மூன்றாம் கட்டமாக மே 7ம் தேதியும், 96 தொகுதிகளுக்கு 4ம் கட்டமாக மே 13ம் தேதியும், 5ம் கட்டமாக 49 தொகுதிகளுக்கு மே 20ம் தேதியும் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.

கடைசியாக 7 மாநிலங்களில், 58 தொகுதிகளில் மே 25ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது. இன்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவுகள் நிறைவடைந்து, லோக்சபா தேர்தல் முடிவுறுகிறது.
இந்த முறை மீண்டும் நரேந்திர மோடி பிரதமர் நாற்காலியில் அமர்வாரா? அல்லது இந்தியா கூட்டணி வலுவான போட்டி கொடுத்து ஆட்சியை கைப்பற்றுமா? என்கிற எதிர்பார்ப்புகள் தீவிரமடைந்துள்ளன. இந்த லோக்சபா தேர்தல் இரண்டு கட்சிகளுக்கும் மிக முக்கியமானதாகும்.
பாஜகவை பொறுத்த அளவில், மோடி மீண்டும் பிரதமரானால், நேருவுக்கு பிறகு தொடர்ந்து மூன்று முறை பிரதமராகும் தலைவர் என்கிற பெருமையை அவர் பெறுவார். அதேபோல, 2025ம் ஆண்டு பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-ன் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இதற்காக பாஜக ஆட்சிப்பொறுப்பில் இருக்க வேண்டியது முக்கியம்.
காங்கிரஸை பொறுத்த அளவில் ஆட்சியில் இல்லாத இந்த 10 ஆண்டுகளில் குலாம் நபி ஆசாத் தொடங்கி பல்வேறு தலைவர்கள் கட்சியை விட்டு விலகி சென்றுள்ளனர். பல மாநிலங்களில் ஆட்சியை காங்கிரஸ் இழந்திருக்கிறது. எனவே இந்த முறை மீண்டு வர வேண்டிய கட்டாயத்தில் கட்சி இருக்கிறது. எனவே ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் என முரண்பட்ட கட்சிகளை இந்தியா கூட்டணி என இணைத்து தேர்தலை எதிர்கொண்டிருக்கிறது.
இப்படி இருக்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி தொடங்கிய லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இன்று இறுதி கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கிறது. இதனையடுத்து தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
வாக்குச்சாவடிகளில் வாக்களித்துவிட்டு வரும் ஒவ்வொரு 10 வாக்காளர்களில் ஒருவரிடம், யாருக்கு வாக்களித்தீர்கள் என்கிற விவரம் கேட்கப்படும். அவர் கூற விரும்பும் பட்சத்தில் இப்படியாக தரவுகள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்து கருத்து கணிப்புகளாக வெளியிடப்படும். சி-வோட்டர், ஆக்சிஸ் மை இந்தியா, சிஎன்எக்ஸ் ஆகிய அமைப்புகள் கருத்துக்கணிப்பு நடத்தும் அமைப்புகளில் முக்கியமானதாக கருதப்படுகிறது. இது தவிர ஏராளமான மீடியாக்கள் கருத்துக்கணிப்பை வெளியிடுகின்றன.
அந்த வகையில் தற்போது தந்தி டிவி தமிழ்நாட்டின் திருவள்ளூர் லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவித்திருக்கிறது.
அதாவது, காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த செந்தில், 37.4% வாக்குகளை பெறுவார் என்றும், தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி 30.1% வாக்குகளையும், பாஜக வேட்பாளர் பொன்.பாலகணபதி 10% வாக்குகளையும் பெறுவார் என்றும் தெரிவித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications