அதிகாலையில் பயங்கரம்.. திருவள்ளூரில் இரண்டு ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை
திருவள்ளூர்: சென்னை சோழவரத்தில் போலீசார் தாக்கிவிட்டுத் தப்ப முயன்ற ரவுடிகளை அதிகாலையில் போலீசார் எண்கவுண்டர் செய்தனர். இதில் மூன்று போலீசாரும் படுகாயமடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பாடியநல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன்.. இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் கொடூராக கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் இதுவரை 10 பேரை கைது செய்துள்ளனர்.

இதில் முக்கிய குற்றவாளியான முத்து சரவணன் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். அவரை போலீசார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், அவர் சென்னை சோழவரத்தை அடுத்த பூதூர் மாரம்பேடு பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கே விரைந்த போலீசார் ரவுடி முத்து சரவணனைக் கைது செய்ய முயன்றனர். இருப்பினும், அவர் போலீசாரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார். இதையடுத்து வேறு வழியின்றி போலீசார் என்கவுண்டர் செய்துள்ளனர்.
போலீசாரை தாக்கிவிட்டுத் தப்ப முயன்ற போது, நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ரவுடி முத்து சரவணன் உயிரிழந்துள்ளார். அப்போது அங்கே இருந்த மற்றொரு ரவுடி சதீஷ் படுகாயமடைந்தார். அவரை சிகிச்சைக்காக போலீசார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நிலையில், அவர் இப்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3 போலீசாரும் காயமடைந்தனர். போலீசாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி முத்து சரவணன் மீது நெல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் கொலை உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. ரவுடி முத்து சரவணன் உடல் இப்போது ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications