உண்ணாவிரத போராட்டம் இருக்கட்டும்.. சைட் கேப்பில் பிரியாணியை சைலெண்டாக உள்ளே தள்ளிய போராட்டக்காரர்கள்
திருவள்ளூர்: ஒரு பக்கம் படுதீவிரமாக உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வந்த போதே சைட் கேப்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரியாணியைச் சாப்பிட்ட குபீர் சம்பவம் நடந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டம் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி சாலை அருகே நடந்த நிலையில், அனைத்து டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் காஞ்சிப்பாடி சரவணன் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
போராட்டம்: மத்திய அரசு சமீபத்தில் புதிதாக ஹிட் அண்ட் ரன் சட்டத்தைக் கொண்டு வந்து இருந்தது. இருப்பினும், இதற்கு வடமாநிலங்களிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியது.. அதாவது இந்த புதிய சட்டத்தின் கீழ் விபத்தை ஏற்படுத்தும் வாகன ஓட்டுநருக்கு அதிகபட்சம் 7 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கவும் முடியும்.. இருப்பினும், லாரி ஓட்டுநருக்கு இந்த தொகை அதிகம் என்று கூறி வடமாநிலங்களிலேயே லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இதையடுத்து இந்த சட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது. இந்தச் சட்டத்தை நிரந்தரமாகத் திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி திருவள்ளூரில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினர். மேலும், திருவள்ளூரில் சவுண்டு மணல் குவாரிகளை தொடங்க வேண்டும். வாகன வரிகளைக் குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தி இந்த ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் லாரி உரிமையாளர்கள் ஈடுபட்டனர்.

லஞ்ச் பிரேக்: இந்த போராட்டம் காலையில் 10 மணிக்கு ஆரம்பித்த நிலையில், முதலில் 200க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் இதில் கலந்து கொண்டனர். இருப்பினும், 3 மணி நேரத்தில் மதிய உணவு நேரம் வந்த நிலையில், அனைவருக்கும் பசி வந்துவிட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஒருவர் பின் ஒருவராக சைலெண்டாக எழுந்து சாப்பிடச் சென்றுவிட்டனர். ஒரு கட்டத்தில் மேடையில் மட்டுமே ஆட்கள் இருக்கக் கீழே இருந்த இருக்கைகள் காற்று வாங்கிக் கொண்டு இருந்தது.
மதிய நேரத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அப்படியே அருகே இருந்த பிரியாணி கடைகள் பக்கம் சென்றனர். அங்குப் பிரியாணி பாக்கெட்களை பார்சல் வாங்கிய ஓட்டுநர்கள் அப்படியே க்ரூப் க்ரூப்பாக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி சாலையில் ஒதுங்கினர். அங்குப் பிரியாணியைத் திருப்திகரமாக முடித்த லாரி ஓட்டுநர்களும் அதன் பிறகு மீண்டும் போராட்ட களத்திற்கு வந்தனர்.
இதை அங்கிருந்த சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நிலையில், இப்போது அது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications