மாணவர்களின் கல்வி கட்டணம்.. "வேலையை" காட்டிய ஜோடி.. அந்த பெண் காமினி எங்கே? திருவள்ளூரில் பரபரப்பு
திருவள்ளூர்: மாணவர் சேர்க்கை மற்றும் கல்வி கட்டணத்தில் போலி ரசீதுகள் மூலம் லட்சக்கணக்கில் மோசடி செய்த கல்லூரி ஊழியர் கைதாகி உள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பகுதியில் சதர்ன் அகாடமி மற்றும் மாரிடைம் ஸ்டடிஸ் என்ற பெயரில் கடல்சார் கல்லூரி இயங்கி வருகிறது. இது கப்பல் சார்ந்த படிப்புக்களுக்கான கல்லூரியாகும்.. இங்கு ஏராளமான மாணவ - மாணவிகள் படித்து வருகிறார்கள்.

இந்த கல்லூரியின் தலைமை அலுவலகம் மயிலாப்பூர் ஆர். கே. சாலையில் செயல்பட்டு வருகிறது.. இந்த அலுவலகத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக அசோகன் பணியாற்றி வருகின்றார். இங்கு, கணக்காளராக காமினி என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு 28 வயதாகிறது. இவர்களை தவிர, விளம்பர அதிகாரியாக வெங்கடேசன் (42) என்பவரும் பணியாற்றுகிறார்.
அசோகன்: இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, நிர்வாக அதிகாரி அசோகன், கல்லூரியின் வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்தார்.. அப்போது, கிட்டத்தட்ட 35 லட்ச ரூபாய் அளவுக்கு பணம் கையாடல் செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்..
பின்னர் அசோகன் இது குறித்து விசாரணையும் நடத்தினார்.. அப்போதுதான், அந்த அலுவலகத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் பணிபுரிந்து வந்த வெங்கடேசன் மற்றும் கணக்காளர் காமினி ஆகிய 2 பேருமே கூட்டாக சேர்ந்து கல்லூரி மாணவர்கள் செலுத்திய கல்வி கட்டணத்தில் சுமார் 35 லட்சம் ரூபாயை கையாடல் செய்தது உறுதியானது.. இத்தனை நாளும் போலி கணக்குகளை இவர்கள் காட்டிவந்ததும் தெரியவந்தது.
போலீசில் புகார்: உடனே அசோகன் ராயப்பேட்டை போலீசாரிடம் சென்று புகார் தந்ததுடன், சம்பந்தப்பட்ட ஆவணங்களையும் போலீசில் ஒப்படைத்தார்..
இதையடுத்து போலீசார் இருவர் பேர் மீதும் ஐபிசி 406 மற்றும் 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.. போலீசார் தங்கள் மீது வழக்கு பதிவு செய்த தகவல் அறிந்த பெண் கணக்காளர் உள்பட 2 பேருமே தலைமறைவாகிவிட்டனர். இதையடுத்து, தனிப்படை போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினார்கள்..
காமினி: இறுதியில், திருவொற்றியூர் சின்ன மேட்டுப்பாளையம் 5வது தெருவை சேர்ந்த வெங்கடேசனை, இரவு நேரத்தில் சுற்றிவளைத்து கைது செய்தனர்.. ஆனால், அதற்குள் காமினி எஸ்கேப் ஆகிவிட்டார்.. தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தீவிரமாக தேடிக்கொண்டிருக்கிறார்கள்.. கல்வி கட்டணமாக செலுத்தப்பட்ட பணத்தை, கல்லூரி ஊழியர்களே "வாரிசுருட்டிய" இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications