பின்னாடி திரும்பி சூர்யா சிரிப்பு சிரித்த திருடன்.. அய்யோ என்ன ஒரு சிரிப்பு.. சோனா முத்தா போச்சா..!
திருவள்ளூர்: எல்இடி டிவியை திருடிச் சென்ற திருடர்கள், இருசக்கர வாகனத்தில் செல்லும் போது, பின்னாடி திரும்பி திடீரென சூர்யா சிரிப்பு சிரித்தார். இதனால் அவர்கள் ஏரியில் குதித்து தப்ப முயன்றும் சிக்கிவிட்டனர். திருவள்ளூர் மாவட்டம் பெரிய பாளையம் அருகே போலீசார் திருடர்களை கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கற்குழி பகுதியில்,மின்சாதன பொருட்களை வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகிறார் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சதாம் .

இவர் வாடிக்கையாளருக்கு வழங்குவதற்காக, எல்இடி டிவி ஒன்றை தனது நண்பர் உதவியுடன் எடுத்துக்கொண்டு பெரிய பாளையம் அருகே சென்று கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அவர்களை வழிமறித்து, எல்இடி டிவியை திடீரென கண் இமைக்கும் நேரத்தில் பறித்துச் சென்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சதாம் உடனே பெரிய பாளையம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன்படி சோதனை செய்த போலீசார், கொள்ளையர்கள், அருகில் உள்ள ஏரியில் இருப்பதை கண்டுபிடித்தனர்.
அதனைத் தொடர்ந்து, ஏரியில் குதித்து தப்பிச் செல்ல முயன்ற கொள்ளையர்கள் இரண்டு பேரையும் பெரிய பாளையம் போலீசார் கைது செய்தனர், அவர்களிடம் இருந்து எல்இடி டிவியையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்டஇருவரையும் பிடித்து விசாரித்த போது, மாம்பாக்கம் பகுதியை சேர்ந்த ராஜதுரை மற்றும் தாணிப்பூண்டி பகுதியை சேர்ந்த அப்துல் ரஹ்மான் என்பது தெரியவந்தது.
கலகலப்பு படத்தில் விமல், சிவா இருவரும் தப்பி செல்வார்கள். அப்போது சிவா, உன்னுடைய சூர்யா சிரிப்பு சிரி பயந்து ஓடிடுவான் என்று கூறுவார். அதன்படியேபின்னாடி திரும்பி விமல், சூர்யா சிரிப்பு சிரிப்பார். அதுபோன்ற காட்சி தான் அரங்கேறி உள்ளது. கொள்ளையன் எல்இடி டிவியுடன் பின்னாடி திரும்பி, சிரித்திருக்கிறார். அதனால் கொள்ளையர்கள் மாட்டியிருக்கிறார்கள். ஏரியில் குதித்து தப்ப முயன்ற கொள்ளையர்களை, போலீசார் சாதூர்யமாக செயல்பட்டு கைது செய்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications