"வர்றது என் பொண்டாட்டியா".. பாஜக நிர்வாகியும், "ஜென்சி"யும்.. இந்த பெண் யார்னு தெரியுமா.. அரண்ட ஆவடி
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட பாஜக நிர்வாகியை ஆவடி மகளிர் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.. அப்படி என்ன காரியம் செய்தார் இந்த பாஜக பிரமுகர்?
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியைச் சேர்ந்தவர் எஸ்.கே.எஸ்.மூர்த்தி.. 52 வயதாகிறது... திருவள்ளூர் பாஜக மேற்கு மாவட்ட துணைத் தலைவராக செயல்பட்டு வருகிறார். ஆவடி பகுதியில் விநியோகஸ்தராகவும் உள்ளார்.

நளினி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.. நளினியும், மூர்த்தியை உயிருக்கு உயிராக நேசித்திருக்கிறார்கள்.. இதையடுத்து, இருவரும், கடந்த 2008ல் திருமணம் செய்து கொண்டார்.. காதல் வாழ்க்கை இருவருக்குமே இனிமையாக சென்று கொண்டிருந்தது. பிறகு திடீரென கடந்த 2017ம் ஆண்டு, "டிராக்" மாற ஆரம்பித்தார் மூர்த்தி..
தேவிகா: தேவிகா என்ற பெண்ணை விரும்பினார்.. தேவிகாவுக்கு 36 வயதாகிறது. இவரும் மூர்த்தியை நேசித்தார்.. ஒருகட்டத்தில் 2 பேருமே கல்யாணம் செய்து கொண்டனர்..
முதல் மனைவியை விட்டுவிட்டு, தேவிகாவுடனேயே குடும்பம் நடத்த துவங்கினார் மூர்த்தி.. வீட்டுக்கும் வருவதில்லை.. ஆசை ஆசையாக காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவன், இன்னொரு பெண்ணை 2வதாக கல்யாணம் செய்ததால், நொந்துபோனார் நளினி.. இதனால், மனவேதனையிலேயே துடிதுடித்து, 2018ம் ஆண்டிலேயே தற்கொலையும் செய்து கொண்டார்.

மகளிர் அணி: தற்போது மீண்டும் "டிராக்" மாறினார் மூர்த்தி.. இரண்டாவது மனைவியான தேவிகாவை விட்டுவிட்டு, ஜென்சி என்பவரை காதலித்தார்.. பாஜக மகளிர் அணியை சேர்ந்தவராம் இந்த ஜென்சி.. இவரும் மூர்த்தியை நேசித்தார்.. ஒருகட்டத்தில், மூர்த்தியும், ஜென்சியும் கல்யாணம் செய்து கொண்டனர். ஆசை ஆசையாக காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவன், இன்னொரு பெண்ணை 3வதாக கல்யாணம் செய்ததால் நொந்து போனார் தேவிகா..
ஆனால் நளினிபோல கோழைத்தனமான முடிவு எடுக்கவில்லை.. நேராக, ஆவடி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார்.. பாஜக பிரமுகரான தன்னுடைய கணவர் எஸ்.கே.எஸ்.மூர்த்தி மீது புகாரும் தந்தார்.. இந்த புகார் தொடர்பாக ஆவடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
கம்பி எண்ணும் பாஜக பிரமுகர்: முதல் மனைவி இருக்கும்போது 2வது திருமணம் செய்து, இரண்டாவது திருமணத்தை மறைத்து 3வது திருமணமும் செய்து, கதிகலங்க செய்த மூர்த்தியை கைது செய்தனர்.. இப்போது மூர்த்தி புழல் ஜெயிலில் உள்ளார்.. 3வதாக வாக்கப்பட்ட, பாஜக மகளிரணி ஜென்சி நிலைமை என்னவென்று தெரியவில்லை.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications