"காயத்ரி தந்திரம்".. தூங்கிட்டிருந்த கணவன்.. கிட்டபோன மனைவி.. திகில் கிளப்பிய 3 பேர்.. பரிதாப யுவராஜ்

கள்ளக்காதலனுக்காக கணவனின் கழுத்தை நெரித்து கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்: கள்ளக்காதலனை சந்திப்பதற்காகவே அதே மருத்துவமனையில் நர்ஸாக வேலைக்கு சேர்ந்துள்ளார் காயத்ரி.. இறுதியில் நடந்த கொடூரம், ஒரு குடும்பத்தையே சிதறடித்துவிட்டது. என்ன நடந்தது திருத்தணியில்?

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்துள்ளது சுந்தர்ராஜபுரம் என்ற கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் யுவராஜ்.. 29 வயதாகிறது.. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.

இவரது மனைவி பெயர் காயத்ரி.. சொந்த தாய்மாமன் மகள்தான் காயத்ரி.. 25 வயதாகிறது.. திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது.. இந்த தம்பதிக்கு 2 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

 நர்ஸ் காதல்

நர்ஸ் காதல்

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்த காயத்ரி திடீரென அலறி துடித்தார். இதனால், சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் பதறிப்போய் ஓடிவந்து பார்க்கும்போது, யுவராஜ் தூக்கில் சடலமாக தொங்கி கிடப்பதை பார்த்து அதிர்ந்தனர்.. இதையடுத்து போலீசுக்கு தகவல் பறந்தது.. குடும்ப பிரச்சனை காரணமாக யுவராஜ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.. ஆனால் தங்கள் மகன் சாவில் மர்மம் இருப்பதாக யுவராஜின் அப்பா ஆறுமுகம், ஆர்.கே.பேட்டை போலீசில் புகார் அளித்தார்... இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணையும் மேற்கோள்ளப்பட்டது.

 டிப்ளமோ நர்சிங்

டிப்ளமோ நர்சிங்

முதல் விசாரணையே காயத்ரியிடம்தான் ஆரம்பமானது. ஆரம்பத்தில் இருந்தே முன்னுக்குப்பின் முரணாக பதில் சொல்லி வந்த காயத்ரியை ஸ்டேஷனுக்கு அழைத்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.. அப்போதுதான் உண்மையை எல்லாம் ஒன்றுவிடாமல் சொல்லிவிட்டார். சென்னையில் ஒரு தனியார் காலேஜில் டிப்ளமோ நர்சிங் படித்து வந்துள்ளார் காயத்ரி.. அப்போது அங்கு படித்து கொண்டிருந்த சீனிவாசன் என்பவருடன் நட்பு ஏற்பட்டு, அதுவே காதலாகவும் வளர்ந்துள்ளது.. இவர்களது காதல் விவகாரம் வீட்டுக்கு தெரியவந்ததையடுத்து, காயத்ரிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்..

 யுவராஜ்ஜூக்கு டவுட்

யுவராஜ்ஜூக்கு டவுட்

மேலும், அவசர அவசரமாக தாய்மாமன் மகன் யுவராஜ்ஜிடம் பேசி, காயத்ரியை திருமணம் செய்தும் வைத்துள்ளனர்... எனினும், சீனிவாசனை விட்டு காயத்ரியால் இருக்க முடியவில்லை.. அந்த காதலையும் மறக்க முடியவில்லை. அதனால், மறுபடியும் சீனிவாசனுடன் பழக ஆரம்பித்துள்ளார்.. இருவரும் தனிமையில் அடிக்கடி உல்லாசமாகவும் இருந்து வந்துள்ளனர்.. ஒருகட்டத்தில் காயத்ரியின் நடவடிக்கையில், சீனிவாசனுக்கு சந்தேகம் அதிகமானதால், வேலைக்கு போக வேண்டாம் என்று சொல்லி நிறுத்திவிட்டார்.

 வரிந்து கட்டிய காயத்ரி

வரிந்து கட்டிய காயத்ரி

இதனால் அதிர்ச்சி அடைந்த காயத்ரி, யுவராஜிடம் வாக்குவாதமும், தகராறும் செய்து வந்துள்ளார்.. அப்போதுதான், கணவனை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.. இதை சீனிவாசனிடம் சொல்லவும், அவரும் அதற்கு சம்மதம் சொன்னதுடன், நண்பர்களின் உதவியையும் நாடினார்.. அதன்படி, முன்தினம் யுவராஜ் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது காயத்ரி, கள்ளக்காதலன், அவரது நண்பர்கள் என எல்லாருமே ஒன்றுசேர்ந்து, தூங்கி கொண்டிருந்த யுவராஜ் கழுத்தை நெரித்தனர்.. இதில் துடிதுடித்து இறந்துபோனார் யுவராஜ்..

 தூக்கில் ஏற்றினார்

தூக்கில் ஏற்றினார்

அதற்கு பிறகு அதனை தற்கொலை என்று ஊர் மக்களை நம்ப வைப்பதற்காக, சடலத்தை தூக்கில் தொங்கவிட்டு அங்கிருந்து அனைவரும் கிளம்பி சென்றுள்ளனர்.. மறுநாள் காலை விடிந்ததுமே, கணவர் தற்கொலை செய்து கொண்டதாக காயத்ரி கத்தி கூச்சலிட்டு அனைவரையும் நம்பவைத்துள்ளார்.. இது அத்தனையும் வாக்குமூலத்தில் தெரியவந்ததையடுத்து, போலீசார் காயத்ரி, கள்ளக்காதலன் சீனிவாசன், மணிகண்டன், ஜில்லு ஆகியோரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். காயத்ரி அலறி கத்தியபோதே அக்கம்பக்கத்திரிடம், வீட்டில் தகராறு ஏற்பட்டதால்தான், தூக்கு போட்டு கொண்டதாக அவர்களிடம் சொல்லி உள்ளார்..

 மாமனார் டவுட்

மாமனார் டவுட்

அதுமட்டுமல்லாமல், சடலத்தை அவசர அவசரமாக அடக்கம் செய்யவும் ஆர்வம் காட்டி உள்ளார்.. இதையெல்லாம் பார்த்து அப்போதுதான் மாமனாருக்கு, அதாவது யுவராஜின் அப்பா ஆறுமுகத்துக்கு சந்தேகம் அதிகமாகி போலீசுக்கு போயுள்ளார்,. நர்சிங் படித்து முடித்ததுமே திருத்தணியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சீனிவாசனும் வேலை பார்த்து வந்துள்ளார்.. அவர் அங்கு வேலை பார்ப்பதாலேயே, காயத்ரியும் அங்கு ரத்தம் சார்ந்த பிரிவில் நர்ஸாக வேலை பார்த்துள்ளார்..

 யுவராஜ் மார்பு

யுவராஜ் மார்பு

வேலைக்கு போக வேண்டாம் என்று கணவன் தன்னை தடுத்துவிட்டதாக சீனிவாசனிடம் காயத்ரி செல்போனில் சொல்லி அழுதுள்ளார். அதற்கு பிறகுதான் சீனிவாசன் இப்படி யோசனையை சொன்னாராம்.. இதில் கொடுமை என்னவென்றால், கொலை செய்வதற்காக சீனிவாசன் மற்றும் நண்பர்களை வீட்டுக்கு வரவழைத்த காயத்ரி, தூங்கி கொண்டிருந்த யுவராஜனின் மார்பு மீது ஏறி உட்கார்ந்து கொண்டாராம்.. மற்ற 2 பேரும் கை மற்றும் கால்களை பிடித்து கொள்ள, சீனிவாசன், யுவராஜின் கழுத்தை நெரித்து துடிக்க துடிக்க கொன்றுள்ளார்.. இப்போது இவர்கள் எல்லாரிடமும் தொடர் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+