பாஜக சீன்லயே இல்ல.. எங்களுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி: திருவள்ளூர் தொகுதி வேட்பாளர் நல்லதம்பி
திருவள்ளூர்: திருவள்ளூர் தேர்தல் களம் எப்படி இருக்கிறது? தேமுதிக வேட்பாளர் என்ன சொல்கிறார். ஒன் இந்தியா சார்பாக, தேமுதிக வேட்பாளர் நல்லதம்பியிடம் நடத்திய நேர்காணல் இங்கே!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் ஒரே கட்டமான ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக கூட்டணிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி இடையே நான்கு முனை போட்டி நிலவுகிறது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சார பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன.

திருவள்ளூர் தொகுதி நிலவரம்: திருவள்ளூர் (தனி) நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சசிகாந்த் செந்தில், அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பாக முன்னாள் எம்.எல்.ஏ நல்லதம்பி, பாஜகவில் பொன் பாலகணபதி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெகதீஷ் சந்தர் ஆகியோர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.
கடந்த 2009 மற்றும் 2014 நாடாளுமன்றத் தேர்தல்களில் அதிமுக சார்பில் மருத்துவர் வேணுகோபால் வெற்றி பெற்றார். 2014 தேர்தலில் 6,28,499 வாக்குகளை பெற்ற வேணுகோபால் தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற எம்.பி என்ற பெருமையை பெற்றிருந்தார். ஆனால் 2019ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஜெயக்குமார் அமோக வெற்றி பெற்றார்.
இந்நிலையில், திருவள்ளூர் தேர்தல் களம் எப்படி இருக்கிறது? திருவள்ளூர் தொகுதி எந்தளவுக்கு உங்களுக்கு சாதகமாக இருக்கிறது? கள நிலவரம் எப்படி? என அதிமுக கூட்டணியின் தேமுதிக வேட்பாளர் நல்லதம்பியிடம் நமது ஒன் இந்தியா தமிழ் சார்பாக கேள்விகளை முன்வைத்தோம். அதற்கு அவர் அளித்த பதில்களை காணலாம்.
நல்லதம்பி பேட்டி: “திருவள்ளூர் தொகுதி அதிமுகவின் கோட்டை. கேப்டன் விஜயகாந்த்தின் ரசிகர் மன்றங்கள் திருவள்ளூரில் அதிகம். அவர்கள் அனைவரும் தற்போது தேமுதிகவில் உள்ளனர். அதிமுக மற்றும் தேமுதிக தொண்டர்கள், பொதுமக்களின் ஆதரவோடு வெற்றி பெறுவேன்.
மக்களுக்கு பணி செய்வதுதான் எங்கள் வேலை. ஆவடியில் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தை முடித்துவிட்டு 12 மணி அளவில் வீட்டுக்கு போனேன். போனில் சமூக வலைதளங்களை பார்க்கும்போது, திருவள்ளூர் தொகுதி மக்கள், தங்கள் பிரச்சனைகள் பற்றி பேசியதைக் கேட்டேன். சாப்பாட்டுகே கஷ்டப்படுவதாக மக்கள் சொல்லும்போது வேதனையாக இருக்கிறது. பசியோடு இருப்பவர்களுக்கு எல்லாம் சாப்பாடு போட்டவர் விஜயகாந்த். அதுபோன்ற எண்ணத்தில் தான் திருவள்ளூர் மக்களுக்காக போட்டியிடுகிறேன்.
திருவள்ளூர் (தனி) தொகுதியில் பிரதான பிரச்சனை ஒன்று இருக்கிறது. பழவேற்காடு வரை இதுவரை தூர்வாரப்படவில்லை. அதனை தூர்வார நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைப்பேன். அதிமுகவுடன் இணைந்து, மீனவ மக்களைத் திரட்டி இந்தக் கோரிக்கைக்காக தொடர்ந்து குரல் எழுப்பி மக்களுக்காக பாடுபடுவோம். திருவள்ளூர் மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன்.
பாஜக எங்களுக்கு எதிரியே இல்லை: அதிமுகவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி. அதிமுக கூட்டணிக்கும் திமுக கூட்டணிக்கும் தான் போட்டி. இங்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கும் எனக்கும் தான் போட்டி. 2011 சட்டசபை தேர்தலில் திமுகவையே எதிர்க்கட்சி வரிசையில் இருந்து தள்ளிவிட்டோம். பாஜக எங்களுக்கு ஒரு எதிரியே இல்லை. நாங்கள் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட கட்சி.
மத்தியில் ஆள்வதால் தான் தமிழ்நாட்டில் காலூன்றும் எண்ணத்தோடு வருகிறது பாஜக. மோடியா லேடியா என கேட்ட ஜெயலலிதாவைப் போல, மத்தியில் ஆளும் பாஜகவை பற்றி பயப்படாமல் பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி. அண்ணாமலை போன்ற தலைவர்கள் சில சமூக விரோதிகளை சேர்த்துக்கொண்டு கட்சி நடத்துகின்றனர்.
வார் ரூம்.. காங்கிரஸ் மேலிட டீலிங்.. சசிகாந்த் செந்தில் சீட் வாங்கியது எப்படி? பரபர பின்னணி தகவல்!
அன்று திமுக கோட்டையை உடைத்தோம்: மக்களுக்காக பணி செய்யும் வெற்றிக் கூட்டணி நாங்கள் தான். நிச்சயமாக பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். திமுக கட்சியினரே விஜயகாந்த்தை வணங்கி போற்றி வருகின்றனர். விஜயகாந்த் மீது மக்கள் கொண்டுள்ள அன்பு, எங்களுக்கு கிடைக்கு வாக்குகளாக மாறும்.
2011ல் எழும்பூர் தொகுதியில் திமுக கோட்டையை உடைத்து வெற்றி பெற்றோம். அன்றைக்கு 6 முறை எம்.எல்.ஏவாக இருந்த பரிதி இளம்வழுதியை தோற்கடித்தேன். இன்றைக்கு ஜெயலலிதா, கேப்டன் விஜயகாந்த் ஆசியில், எடப்பாடி பழனிசாமி, பிரேமலதா விஜயகாந்த்தின் ஒத்துழைப்போடு மகத்தான வெற்றியைப் பெறுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
-
மம்தாவை சுத்துபோடும் பாஜக.. பதிலுக்கு சக்கர வியூகம் போட்டு தூக்கும் திரிணாமுல்! யாரும் எதிர்பார்க்கல -
அழுத்தக்காரர் எடப்பாடி.. பின்னாலேயே வந்த பழைய கேஸ்.. டெல்லி செக் மேட்! மொத்தமும் விஜய்யால் வந்த வினை -
118-க்கு செக் வைக்கும் பாஜகவின் 130 கணக்கு! ஒரே கல்லில் 2 மாங்கா.. அதிமுகவுக்கு ஆப்பு வைக்குதா தாமரை -
மோடி கைக்கு போன லிஸ்ட்.. முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக.. மம்தாவுக்கு அதிர்ச்சி! -
தாமரை மலர்கிறது? மம்தாவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் பாஜக.. புதிய தேர்தல் சர்வேயில் மிக பெரிய ட்விஸ்ட்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
NDA Alliance: தமிழகத்தில் பாஜக 27 தொகுதிகளில் போட்டி? அதிமுக அதிரடி? காங்கிரஸை விட குறைவாச்சே! -
பாஜக உறவை முறிக்கும் என்.ஆர்.காங்கிரஸ்.. ஜோஸ் மார்ட்டினால் வந்த சிக்கல்! விஜய்யுடன் சேரும் ரங்கசாமி? -
சட்டம் அதன் கடமையை செய்யும்.. விஜய் பிஜேபி கூட போகவே மாட்டாரு.. ஏனென்றால்? விடாமல் அடிக்கும் ஜூலி -
நிதிஷ் குமாருக்கே இந்த நிலைமை என்றால்.. ஊர்ந்து ஊர்ந்து போன எடப்பாடிக்கு? விட்டு விளாசிய உதயநிதி -
இருந்தாலும் அவருக்கு இவ்வளவு ஆகாது! கூட்டணிக்கு வருமா? வராதா? பாஜகவுக்கு பிரஷர் ஏற்றும் புதியதமிழகம் -
சிரிச்சுக்கிட்டே சிபிஐ ஆபீஸில் இருந்து வந்த விஜய்! இரவில் விஜய்யை சந்தித்த டெல்லி அதானி தூதுவர் யார்












Click it and Unblock the Notifications