Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வார் ரூம்.. காங்கிரஸ் மேலிட டீலிங்.. சசிகாந்த் செந்தில் சீட் வாங்கியது எப்படி? பரபர பின்னணி தகவல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தலில் திருவள்ளூர் (தனி) தொகுதியில் போட்டியிட முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்திலுக்கு காங்கிரஸ் சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சசிகாந்த் செந்தில் சீட் வாங்கியது எப்படி என்ற தகவல்கள் காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரக்கின்றன.

லோக்சபா தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் களத்திற்கு தயாராகிவிட்டன. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் போட்டியிடும் 9 தொகுதிகளில் 8 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் (தனி) தொகுதியில் சசிகாந்த் செந்தில், கிருஷ்ணகிரியில் கே.கோபிநாத், கரூரில் ஜோதிமணி, கடலூரில் எம்.கே.விஷ்ணு பிரசாத், சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம், விருதுநகரில் மாணிக்கம் தாகூர், கன்னியாகுமரியில் விஜய் வசந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

How did Sasikanth Senthil got thiruvallur lok sabha seat in Congress

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் 5 சிட்டிங் எம்.பிக்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. விருப்ப ஓய்வு பெற்று அரசியலுக்கு வந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், காங்கிரஸ் கட்சியின் 'சென்ட்ரல் வார் ரூம்' தலைவருமான சசிகாந்த் செந்திலின் பெயர் தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பது அரசியல் அரங்கில் கவனம் பெற்றுள்ளது.

யார் இந்த சசிகாந்த் செந்தில்?: சசிகாந்த் செந்தில் கர்நாடக கேடர் ஐஏஎஸ் அதிகாரி. 2009ல் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உதவி ஆணையராக பணியைத் தொடங்கினார். தன் பணிக்காலத்தில் அவர் கர்நாடக மாநிலத்தில் சித்ரதுர்கா, ராய்ச்சூர் மாவட்டங்களில் ஆட்சியராகப் பணியாற்றியுள்ளார். மேலும், பல்வேறு துறைகளிலும் பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார் சசிகாந்த்.

கடந்த 2019 செப்டம்பரில் தனது ஐ.ஏ.எஸ் பணியை ராஜினாமா செய்தார் சசிகாந்த் செந்தில். மத்திய பாஜக அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்த சசிகாந்த், 'தேசத்தை கட்டமைக்கும் அடிப்படை அமைப்புகள் சிதைக்கப்படுகின்றன. அவற்றை காப்பாற்ற வேண்டும்' என்று கூறி 2019 செப்டம்பரில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

காங்கிரஸ் கட்சியில்: பின்னர் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட அவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சமூகவலைதளப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்றார். தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியை சமூக வலைதளங்களில் எடுத்துச் செல்லும் பணியை மேற்கொண்டு வந்தவருக்கு கர்நாடகா சட்டசபை தேர்தலின்போது முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் தமிழக பாஜக தலைவருமான அண்ணாமலை பாஜக சார்பில் தேர்தல் களப்பணிக்காக அனுப்பப்பட்ட அதே வேளையில், காங்கிரஸ் சார்பில் கர்நாடகாவில் களமிறக்கப்பட்டார் சசிகாந்த் செந்தில். கர்நாடகா மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட சசிகாந்த் செந்தில் தேர்தல் வியூகங்களை வகுப்பதில் திறம்படச் செயல்பட்டார்.

How did Sasikanth Senthil got thiruvallur lok sabha seat in Congress

கர்நாடகாவில் சசிகாந்த் போட்ட ஸ்கெட்ச்: கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கான பணிகளை சமூக வலைதளங்களில் ஒருங்கிணைக்க ஒரு ஸ்பெஷல் குழுவை உருவாக்கி, முன்னெடுத்தார். வேட்பாளர்களின் இமேஜை உயர்த்துவது, பாஜகவுக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொள்வது என சசிகாந்த் செந்திலின் டீம் பக்காவாக ஸ்கெட்ச் போட்டு உழைத்தது.

குறிப்பாக, பாஜகவை 40 சதவீத கமிஷன் அரசு என்று விமர்சித்து 'PayCM' 'PayMLA' போஸ்டர்களை கர்நாடகா முழுவதும் ஒட்டி கவனம் ஈர்த்தது காங்கிரஸ். இவையும் சசிகாந்த் செந்தில் வகுத்த தேர்தல் வியூகங்கள். முடிவில், கர்நாடகாவில் காங்கிரஸ் அதிக இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. கர்நாடகாவில் பாஜக ஆட்சியை அகற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வருவதில் முக்கியப் பங்கு வகித்தார் சசிகாந்த் செந்தில்.

செண்ட்ரல் வார் ரூம்: அதன்பிறகு காங்கிரஸ் கட்சியின் 'சென்ட்ரல் வார் ரூம்' தலைவராகவும் சசிகாந்த் நியமிக்கப்பட்டார். கட்சி மேலிடத்தில் பெற்ற நன்மதிப்பு காரணமாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக சசிகாந்த் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்த நிலையில், சமீபத்தில் செல்வப்பெருந்தகைக்கு அந்தப் பதவி வழங்கப்பட்டது.

திருவள்ளூர் சீட்: இந்நிலையில், மக்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் திருவள்ளூர் (தனி) தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு சசிகாந்த் செந்திலுக்கு வழங்கப்பட்டுள்ளது. சிட்டிங் எம்.பியை ஓரங்கட்டி சசிகாந்த் செந்திலுக்கு இந்த சீட் கிடைத்தது எப்படி என்ற தகவல்கள் பரபரக்கின்றன.

முதலில், திருவள்ளூர் தொகுதியை காங்கிரஸுக்கு கொடுக்கவே திமுக விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. திருவள்ளூர் சிட்டிங் எம்.பி ஜெயக்குமார், திமுகவை விமர்சிப்பவர், இதனால் திருவள்ளூர் தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்க திமுக விரும்பவில்லை. இதையடுத்து, திருவள்ளூரை டார்கெட் செய்துள்ளார் சசிகாந்த் செந்தில்.

பிரியங்கா மூலம் சீட்: பிரியங்கா காந்திக்கு நெருக்கமானவர்களிடம் பேசி, இந்த லோக்சபா தேர்தலில் போட்டியிடும் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார் சசிகாந்த். இதை தொடர்ந்து டெல்லி தலைமை அதற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளது. அதன்பிறகு சிக்னல் தமிழ்நாடு காங். கமிட்டிக்கு வந்து, அவர்கள் திருவள்ளூர் தொகுதியில் இவர் தான் வேட்பாளர் என்றே திமுகவிடம் கேட்டு சீட்டை வாங்கியுள்ளனர்.

திருவள்ளூர் (தனி) தொகுதி சீட் கிடைத்ததுமே தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்தி விட்டார் சசிகாந்த். திருவள்ளூரில் பாஜக வேட்பாளராக பொன். பால கணபதி போட்டியிடுகிறார். இதே போல அதிமுக தனது கூட்டணி கட்சியான தேமுதிகவிற்கு சீட் ஒதுக்கியுள்ளது. தேமுதிக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ கு.நல்லதம்பி போட்டியிடுகிறார். இந்த மும்முனை மோதலில் 'வார் ரூம்’ எக்ஸ்பெர்ட் சசிகாந்த் செந்தில் தனது வெற்றியை உறுதி செய்வாரா? பொறுத்திருந்து பார்க்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+