"பச்சை துரோகம்".. பல ஆண் நண்பர்கள்.. ரத்த அரிவாளுடன்.. ராத்திரி ரோட்டில் போனாராமே.. ஓ ப்ரியா ப்ரியா
திருவள்ளூர்: 25 வயதுதான் ஆகிறது பிரியாவுக்கு.. இந்த வயதில் இவ்வளவு வன்மமா? இவ்வளவு குரூரமா? என்ற அதிர்ச்சியில் உறைந்துள்ளது திருவள்ளூர் மாவட்டம்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பகுதியை சேர்ந்தவர் நாகராஜ்... இவர் ஒரு கட்டிட மேஸ்திரி... இவரது மனைவி பெயர் பிரியா.. 25 வயதாகிறது.. இந்நிலையில், கோபாலகிருஷ்ணன் என்பவருடன் பிரியாவுக்கு நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு கள்ளக்காதலாக மாறியிருக்கிறது.

கள்ளக்காதல்: கோபாலகிருஷ்ணனுக்கு 24 வயதாகிறது.. ஒரு தனியார் கொரியர் கம்பெனியில் வேலைபார்த்து வருகிறார். 2 வருடமாக இவர்களின் கள்ளக்காதல் வளர்ந்துள்ளது.. பலமுறை தகாத உறவிலும் இருந்துவந்துள்ளனர்.. இந்நிலையில், வேலை விஷயமாக, கோபாலகிருஷ்ணன் அடிக்கடி வெளியூர்களுக்கு செல்ல நேர்ந்துள்ளது.. இதனால், முன்பு போல, பிரியாவை அடிக்கடி சந்திக்க முடியவில்லை..
இதனால், பிரியா, இன்னொரு நபருடன் கள்ளக்காதலில் இருந்துள்ளார்.. சென்னை சேத்துப்பெட்டை சேர்ந்த ரவுடியான ஜில்லா என்கிற ஆனந்தன் என்பவருடன் பிரியாவுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது..
ஆவேசம்: ஒருகட்டத்தில் இந்த விஷயம், கோபாலகிருஷ்ணனுக்கு தெரியவந்ததுமே, பிரியாவை போனில் அழைத்து கண்டித்துள்ளார்.. கள்ளக்காதலை கைவிடும்படி சத்தம் போட்டுள்ளார்.. ஆனால், பிரியா அதை காதில் வாங்காமல், ஆனந்தனுடன் உறவை வளர்த்து வந்துள்ளார். இதனால் மனம் நொந்து போன கோபாலகிருஷ்ணன், பிரியாவுக்கு தொடர்ந்து அட்வைஸ் செய்து வந்துள்ளார்.. இதில் எரிச்சலடைந்த பிரியா, ரவுடி ஆனந்திடம் சென்று, கோபாலகிருஷ்ணனை கொலை செய்யும்படி கூறியிருக்கிறார்.
இதையடுத்து, சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த 4 கூலிப்படையினரிடம் பேரம் பேசப்பட்டது.. நேற்றிரவு திடீரென கோபாலகிருஷ்ணனுக்கு போனை போட்டு, புளியந்தோப்புக்கு வருமாறு அழைத்திருக்கிறார் பிரியா.
ஆசைவார்த்தைகளை சொல்லி பிரியா அழைக்கவும, கோபாலகிருஷ்ணனும் வந்துள்ளார்.. அப்போது, கூலிப்படையினர் 4 பேரும், கோபாலகிருஷ்ணனை சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டி சாய்த்துள்ளனர்..
ஆவேச பிரியா: இந்த 4 பேருடன் சேர்ந்து, பிரியாவும் அரிவாளால் கோபாலகிருஷ்ணனை வெட்டியிருக்கிறார். பிறகு 5 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.. தகவலறிந்து வந்த போலீசார், சடலத்தை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர். உடனடியாக வழக்கு பதிவு செய்து, தலைமறைவாகிவிட்ட பிரியாவை விடிய விடிய தேடினார்கள்.. இறுதியில், இன்று அதிகாலை சிக்கிவிட்டார் பிரியா.. கூலிப்படையினர் 4 பேரையும் தேடும்படலம் நடக்கிறது.
அதாவது, அரிவாளால், கோபாலகிருஷ்ணனை வெட்டி கொன்றபோது, பக்கத்திலேயே நின்ற பிரியா அதனை ரசித்து பார்த்து சிரித்து கொண்டே நின்றாராம். கோபாலகிருஷ்ணன் வலி தாங்க முடியாமல் அலறவும், அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்துள்ளனர். ஆனால், அதற்குள் கொலையாளிகள் அனைவரும் அங்கிருந்து பைக்கில் தப்பி உள்ளனர்..
மாஸ்டர் பிளான்: கிளம்பி செல்லும்போது, பிரியாவிடம் கொலைக்கு பயன்படுத்திய அரிவாள்களை கொடுத்து விட்டு, தப்பி சென்றார்கள். அரிவாள்களுடன் ரோட்டில் தனியாக நின்ற பிரியா, அந்த வழியே வந்த ஒரு காரில் லிப்ட் கேட்டு புழல் பகுதியில் இறங்கி கொள்வதாக சொல்லி உள்ளார்.
ஆனால், புழல் அருகே கார் சென்றதும், வழக்கமாக போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.. பிரியா வந்த காரையும் மடக்கி சோதனை செய்தபோதுதான், அரிவாள்களும், அதிலிருந்த ரத்தக்கறைகளும் பிரியாவை காட்டி கொடுத்துவிட்டன. பிரியாவிடமிருந்து, ரத்த கறை படிந்த 4 அரிவாள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கணவர்: இந்த பிரியாவுக்கு கல்யாணமாகி 10 வருஷமாகிறதாம். அதாவது 15 வயதிலேயே ஆட்டோ டிரைவரான லட்சுமணன் என்பவரை காதலித்து கல்யாணம் செய்திருக்கிறார்.. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். ஆனால், பிரியாவின் கள்ளத்தொடர்புகள் அதிகமாகி கொண்டே போனதால், கணவர் லட்சுமணன் வீட்டுக்கு வருவதையே நிறுத்திவிட்டாராம்.. எப்போதாவது வந்து, தன்னுடைய 2 பிள்ளைகளை மட்டும் பார்த்து செல்வாராம்.
கணவர் வீட்டை விட்டு போய்விட்டது, பிரியாவுக்கு இன்னும் வசதியாகிவிட்டது. அதனால், பலருடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்திருக்கிறார்.. இதில், கோபாலகிருஷ்ணன் மட்டும், பிரியாவை அளவுக்கு அதிகமாக நேசித்துள்ளார். ஆனாலும், கள்ளக்காதலி யார் என்பதில், கடும் போட்டி ஏற்பட்டு, கடைசியில் கொலை வரை வந்துவிட்டது.
பச்சை துரோகம்: கட்டிய கணவனுக்கு துரோகம் செய்து, கள்ளக்காதலனையும் ஏமாற்றி, 2 குழந்தைகளையும் யோசித்து பார்க்காமல், ஒரு உயிரையே காவு கொண்டுவிட்டது தலைக்கேறிய காமம்.. அனைத்து குற்ற செயல்களுக்கும் ஒரு பெண் மட்டுமே மூலகாரணமாக இருந்திருக்கிறார் என்பதைதான் ஜீரணிக்கவே முடியவில்லை.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications