Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அசையவே இல்லை.. ரெயிடின்போது பின்னாடி "சத்தமின்றி" நின்ற உருவம்..திருவள்ளூரில் தெறித்து ஓடிய ஆபீசர்ஸ்

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் நடந்த சம்பவத்தின் பரபரப்பு இன்னமும் அடங்கவில்லை.. தவறுகளை அசால்ட்டாக செய்ததும் இல்லாமல், அந்த தவறுகளிலிருந்து தப்பித்து கொள்வதற்காக, இப்படியெல்லாம்கூட கேவலமாக சிலர் நடந்து கொள்வார்களா? என்று ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது. அப்படி என்ன நடந்தது பொன்னேரியில்?

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில், அதிகாரிகள் லஞ்சம் வாங்குவாக நிறைய புகார்கள் எழுந்தபடியே இருந்தன.. குறிப்பாக, ஆவணங்கள் பதிவு செய்வதற்கு அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் வந்தவண்ணம் இருந்தன.

tiruvallur ponneri sub registrar office

எனவே, திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராமமூர்த்தி தலைமையில் 6 பேர் கொண்ட அதிகாரிகள், அதிரடியாக பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்திற்குள் நுழைந்து சோதனை நடத்தினார்கள்.

அதிகாரிகள்: பொதுவாக அதிகாரிகள் சோதனை நடத்தும்போது, மற்றவர்களின் குறுக்கீடும், தலையீடும் இருக்கக்கூடாது.. சோதனை நடத்தும் பகுதிகளுக்கும் ஊழியர்கள் செல்ல மாட்டார்கள்.. ஆனால், அங்கிருந்த சில நபர்கள் தேவையில்லாமல் குறுக்கு மறுக்குமாக அந்த ஆபீசுக்குள்ளேயே நடந்து கொண்டிருந்தார்கள்..

இதைப்பார்த்து சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அலுவலகத்திற்குள் நடமாடிய நபர்களையும், அவர்களிடமிருந்த உடைமைகளையும் சோதனை செய்துவிட்டு அனுப்பிவிட்டார்கள். பிறகு மறுபடியும் ஆவணங்களை சரிபார்த்து கொண்டிருந்தபோதுதான், திடீரென புஸ்ஸ்ஸ் என்று சத்தம் கேட்டுள்ளது. எங்கிருந்து சத்தம் கேட்கிறது என்று சுற்றுமுற்றும் அதிகாரிகள் பார்த்துள்ளார்கள்.

பதறிய அதிகாரிகள்: அப்போதுதான் அந்த காட்சியை கண்டு பதறிப்போய்விட்டார்கள்.. அதிகாரிகளை நோக்கி, ஒரு கண்ணாடி விரியன் பாம்பு, படமெடுத்து நின்று கொண்டிருந்தது.. இதைப்பார்த்து அலறியடித்துக் கொண்டே அதிகாரிகள் ஓடமுயன்றனர். ஆனால், பாம்பை தாண்டி அவர்களால் ஓட முடியாத நிலைமை ஏற்பட்டது. இதனால், என்ன செய்வதென்றே தெரியாமல் அதிகாரிகள் பயத்தில் கத்தினார்கள்.

அப்போது சோதனைக்கு வந்திருந்த அதிகாரி ஒருவர், அங்கிருந்த தடிமனான அட்டையை எடுத்து, பாம்பின் தலையில் தட்டி தட்டியே, அதை மயக்கமடைய வைத்தார்.. அதற்கு பிறகே அதிகாரிகள் அனைவரும் பத்திரமாக உயிர் தப்பினார்கள்..

விஷப்பாம்பு : இந்த விஷப்பாம்பு எப்படி சார் பதிவாளர் அலுவலகத்துக்குள் வந்திருக்கும்? என்று தெரியவில்லை.. ஆனால், சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறையினரை அச்சுறுத்துவதற்காகவே, கண்ணாடி விரியன் பாம்பை சிலர் ஏவியிருக்கிறார்கள் என்று அதிகாரிகள் தரப்பில் சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.

ஆனாலும் அதிகாரிகள் விடவில்லையே.. அதே சார் பதிவாளர் அலுவலகத்தில் சுமார் 4 மணி நேரம் ரெயிடு நடத்தினார்கள்.. இறுதியில், கணக்கில் வராத லட்சக்கணக்கான பணம், முக்கிய ஆவணங்களையும் பறிமுதல் செய்திருக்கிறார்கள். இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

tiruvallur ponneri sub registrar office

எழுத்தர்: இதுஒருபுறமிருந்தாலும், பாம்பு விவகாரம் குறித்து விசாரணை ஆரம்பமாகியிருக்கிறது.. லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனைக்கு வருகிறார்கள் என்று தெரிந்ததுமே, ஆவண எழுத்தராக பணிபுரியும் ஊழியர் ஒருவர், தான் வைத்திருந்த பணத்தை, அந்த அலுவலகத்தின் மதில் சுவர் வழியாக, பக்கத்திலிருக்கும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் தூக்கி வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டாராம்.. அவரையும் போலீசார் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பாம்பு கொண்டுவந்து போட்டது யார் என்று தெரியவில்லை.

ஆக, ஒருபக்கம் கண்ணாடிவிரியன் பாம்பு.. மறுபக்கம் சுவர் ஏறி குதித்த ஓடிய எழுத்தர்... இதற்கு நடுவில் கணக்கில் வராத பணம் பறிமுதல் என ஒரே நாளில் ஏகப்பட்ட பரபரப்புகள் நம்முடைய தமிழ்நாட்டின் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடந்திருக்கிறது... இந்த விசாரணையின் முடிவில் பல அதிகாரிகளுக்கு "கச்சேரி" இருக்குது போல!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+