பிரதமர் மோடி வாயிலிருந்து உண்மைகள் வருவது "மிகக் குறைவு".. சாடும் முத்தரசன்!
திருவள்ளூர்: பிரதமர் மோடி வாயிலிருந்து உண்மைகள் வெளியே வருவது மிக குறைவு என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
அண்மைக் காலமாக திமுக - ஆளுநர் இடையிலான மோதல் அடுத்தக் கட்டத்திற்கு சென்றுள்ளது. திமுக தரப்பில் ஆளுநரை திரும்பப் பெறக்கோரி குடியரசுத் தலைவரிடம் கடிதம் அளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவு அளித்துள்ளனர்.
இந்த நிலையில் திருவள்ளூர் அடுத்த அதிகத்தூரில் அமைந்துள்ள பன்னாட்டு கார் உதிரிபாகம் தொழிற்சாலையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் நிலம் கொடுத்த நபர்களுக்கு வேலை வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
எடப்பாடி முன்னாடி இந்த வார்த்தையை ஒரு முறை சொல்ல முடியுமா?ஆர்பி உதயகுமாருக்கு மருது அழகுராஜ் சவால்!

பாஜக தலைவர் ஆர்என் ரவி
இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றபின் செய்தியாளர் சந்தித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில், ஆளுநர் ஆர்என் ரவி, அவரது பொறுப்பில் இருந்து விடுபட்டு அரசியல் கட்சித் தலைவர் போல் செயல்படுகிறார். குறிப்பாக பாஜக தலைவர் போல் நினைத்து பேசி வருகிறார். அதேபோல் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களையும், அரசியலைப்பு சட்டத்திற்கு விரோதமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

சர்ச்சைகள்
மதம், மொழி, சாதி, கல்வி என பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி வருகிறார். இதனை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். இந்த நிலையில் அவரை திரும்பப்பெற வேண்டும் என்று திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்ப உள்ளோம். இதில் சிபிஐ நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் கையொப்பமிட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

சென்னை மழை
தொடர்ந்து கனமழை பாதிப்புகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாகவே தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. குறிப்பாக சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் திறம்பட தமிழக அரசு செய்துள்ளது. மழை நீர் தேங்காத வகையில் அரசு நல்ல முயற்சியில் மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்தார்.

உண்மை பேசுவது குறைவு
பின்னர் சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்கிறது என பிரதமர் மோடியின் கருத்துக்கு, பிரதமர் மோடி வாயிலிருந்து உண்மைகள் வெளியே வருவது மிக குறைவு என்று தெரிவித்தார்.