நர்சின் லீலை! 12 பேரை காதலித்து டாட்டா காட்டிய காதல் ராணி! மகன் முறை இளைஞரை கல்யாணம் செய்த கொடூரம்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டை சேர்ந்த செவிலியர் 12 இளைஞர்களை காதலித்து ஏமாற்றியது அல்லாமல் மகன் முறை வரும் இளைஞரையும் திருமணம் செய்துக் கொண்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பாலாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் முனியம்மா. இவரது கணவர் தணிகைவேல். முனியம்மாள் அந்த பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார்.

அவர் கணவரை பிரிந்து தனது மகள் தேவியுடன் தனியாக வசித்து வருகிறார். தேவிக்கு 24 வயதாகிறது. செவிலியல் படிப்பை முடித்துவிட்டு வீடுகளில் நோய் வாய்ப்பட்டுள்ள நோயாளிகளுக்கு அவர்களது வீட்டிலேயே தங்கி மருத்துவம் பார்க்கும் பணியை தேவி செய்து வந்தார்.
கடந்த 4 மாதங்களாக பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்த தேவி, கடந்த சில தினங்களுக்கு முன்பு மாயமானார். மகளை காணாமல் தவித்த முனியம்மா, அவரை எங்கு தேடியும் கிடைக்காததால் பதறி போய் செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் அதே பகுதியில் சாய்ராம் என்ற 19 வயது இளைஞருடன் காணாமல் போனதாக செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் அவரது உறவினர்கள் புகார் அளித்தனர்.
இந்த நிலையில் விசாரணையில் தேவியும் அந்த 19 வயது இளைஞனும் உறவினர்கள் என தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் தீவிரமாக இருவரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் இருவரும் வழக்கறிஞர்கள் மூலம் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது விசாரணை மேற்கொண்டதில் சாய்ராமுக்கும் தேவிக்கும் இடையே கடந்த 3 மாதங்களாக காதல் இருந்து வந்ததாம்.
சாய்ராமுக்கு தேவி சித்தி முறை என்பதால் இந்த காதலுக்கு இரு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக தெரிகிறது. தொடர்ந்து எதிர்ப்பு நிலவி வந்ததால் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இவர்கள் காவல் நிலையத்திற்கு வருவதை அறிந்த தேவியின் தாய்மாமன் மணி என்ற இளைஞர், தேவியும் தானும் 6 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் கடந்த 3 மாதங்களாக தேவியின் நடவடிக்கையில் மாற்றம் இருந்ததாகவும் கூறியுள்ளார்.
இது ஒரு புறம் இருக்க சோழவரம் அருகே காரனோடை பகுதியை சேர்ந்த விஜய் என்ற இளைஞர், தேவியும் தானும் ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் தன்னிடம் ரூ 5 லட்சம் வரை ஏமாற்றி பணம் வாங்கியதாக விஜய் குற்றம்சாட்டினார். மேலும் தானும் தேவியும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களுடன் காவல் நிலையத்திற்கு வந்தார்.

வடிவேல் காமெடியில் வருவதை போல் இருந்ததால் போலீஸார் என்ன செய்வதென்றே தெரியாமல் விசாரித்தனர். தேவி சுமார் 12 இளைஞர்களை காதலித்து ஏமாற்றி அவர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றியது தெரியவந்தது.
இந்த நிலையில் தேவியை அவரது தாயுடன் செல்லுமாறு போலீஸார் அறிவுறுத்தினர். ஆனால் சாய்ராமோ தேவி தன்னுடன் வர வேண்டும் என்றார். காதலியை பிரிய மனமில்லாமல் சாய்ராம் ஏக்கத்துடன் காதலியை பார்த்துக் கொண்டிருந்தார்.
பின்னர் பெற்றோர் பிடியிலிருந்து திமிறிக் கொண்டு காதலியை பார்க்க சென்ற நிலையில் அவரை பெற்றோர் ஆசுவாசப்படுத்தி வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். தனது லீலைகளால் தனக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சத்தில் போலீஸாரை பகைத்துக் கொள்ளாமல் தேவி தனது தாய் முனியம்மாவுடன் செல்ல சம்மதம் தெரிவித்தார். போலீஸாருக்கு நிம்மதி பெருமூச்சுவிட்டனர். அண்மைக்காலமாக பல ஆண்களை ஏமாற்றி கல்யாணம் செய்த கல்யாண ராணிகளுக்கு மத்தியில் தேவி காதல் ராணியாக திகழ்ந்துள்ளார்.
-
கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை- காவல் துறை விளக்கம் -
"என் கைய விடு" ஐஏஎஃப் அதிகாரி மனைவிக்கு தோழன் விரித்த வலை! வசிய மாந்திரீகம்! நாக்பூரில் யார் பாருங்க -
கும்மிடிப்பூண்டி சிறுமியின் பெற்றோரை மிரட்டினாரா தவெக எம்எல்ஏ விஜயகுமார்? மாதர் சங்கத்தினர் புகார் -
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே? -
இதென்ன உத்தர பிரதேச மாடலா? கும்மிடிப்பூண்டி சிறுமி பலாத்காரம்.. ரகசியமாக உடல் அடக்கம்! கொடுமை -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்!












Click it and Unblock the Notifications