கொலையில் முடிந்த குடும்பத்தகராறு - மனைவியை உருட்டுக்கட்டையால் அடித்து கொன்ற கணவன் கைது
குடும்பத்தகராறில் மனைவியை உருட்டுக்கட்டையால் அடித்துக்கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருவள்ளூர்: வட சென்னையில் வீட்டுத்தகராறுகள் ரத்தக்களறியாகத்தான் முடியும் போல, மீஞ்சூரில் கணவன் மனைவி சண்டை அடிதடியில் முடிந்து கடைசியில் கொலை வழக்காக மாறியுள்ளது. ரவிச்சந்திரன் தனது மனைவி ராதாவை உருட்டுக்கட்டையால் அடித்து காயப்படுத்தவே, படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த அந்த ராதா சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். ரவிச்சந்திரனை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
அடித்துக்கொல்லப்பட்ட பெண்ணின் பெயர் ராதா. இவர் ராமமூர்த்தி என்பவரின் மகளாவார். மீஞ்சூரைச் சேர்ந்த ரவிச்சந்திரனுக்கு தனது மகள் ராதாவை திருமணம் செய்து கொடுத்தார் ராமமூர்த்தி. பிரச்சினைகள் எதுவும் இன்றி சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் புயல் வீசியது. மனக்கசப்புகள் சண்டையாக மாறியது. மனைவி மீது சந்தேகப்பட்டு தினசரியும் அடித்து சண்டை போடுவாராம் ரவிச்சந்திரன்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே நடந்த வாக்குவாதம் முற்றி ரத்தகாயத்தில் முடிந்தது. மனைவி என்றும் பாராமல் உருட்டுக்கட்டையால் தாக்கியதில் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்தார். தகவல் அறிந்து வந்த ராதாவின் அப்பா ராமமூர்த்தி மகளை உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த ராதா உயிரிழந்தார். இதனையடுத்து போலீசார் கொலை வழக்காக மாற்றியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த வாரத்தில் வழக்கம் போல இருவருக்கும் வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன. இதில் ரவிச்சந்திரன் ராதாவை உருட்டுக்கட்டையால் நடுமண்டையில் அடித்துள்ளார். இதில் ராதாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
துருதிர்ஷ்டவசமாக இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மீஞ்சூர் காவல்துறையினர் ரவிச்சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அழகான மகளை இப்படி ஒரு சந்தேகப்பிராணிக்கு திருமணம் செய்து கொடுத்து பலி கொடுத்து விட்டேனே என்று ராமமூர்த்தி கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications