பார்வதி வாழ்க்கை.. குறுக்கே வந்த ராஜேஸ்வரி! மார்க்கெட்டில் பெட்ரோல் ஊற்றி கொலை! அதிர வைக்கும் காட்சி
திருவள்ளூர்: திருவள்ளூரில் காய்கறி மார்க்கெட்டில் பெண் ஒருவர் மற்றொரு பெண் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்த காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தனது கணவனுடன் முறை தவறிய உறவில் இருந்ததால் கொடூர செயலை செய்த பெண் உட்பட எட்டு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் எப்போதும் மூழ்கிக் கிடக்கும் பெண்கள் மற்றும் ஆண்களால் கள்ளக்காதல் கொலை சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருவது சமீப காலங்களாக அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

செல்போன்களில் மூழ்கும் பெண்கள், இளைஞர்கள் சமுக வலைதளங்களான ஃபேஸ்புக் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் உலாவி, தங்கள் வாழ்வையே தொலைக்கும் நிகழ்வுகளும் நடைபெறுவதைக் காணமுடிகிறது.
இதனால் பல நேரங்களில் அவர்களின் வாழ்க்கையையும், மற்றவர்களின் கேள்விக்குறியாக்கும் நிகழ்வுகளும் நடைபெற்று தான் வருகின்றன. அந்த வகையில் தான் திருவள்ளூரில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. பல பேர் பார்க்க தனது கணவனுடன் முறை தவறிய உறவில் இருந்த பெண்ணை இளம் பெண் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த காட்சிகள் பலரையும் அதிர வைத்துள்ளது. ஏன் இந்த கொலை வெறி.. இதன் பின்னணியில் நடந்தது என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.
திருவள்ளூர் மாவட்டம் புள்ளரம்பாக்கம் பகுதியில் சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கு திருமணமாகி பார்வதி என்ற மனைவியும் இரு குழந்தைகளும் இருக்கின்றனர். இருவரின் மணவாழ்க்கையும் சந்தோசமாக சென்று கொண்டிருந்த நிலையில் இடையே வந்தவர் தான் ராஜேஸ்வரி. சுரேஷை விட வயதில் மூத்தவரான ராஜேஸ்வரி உடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த பழக்கம் ஒரு கட்டத்தில் எல்லை மீற பார்வதிக்கு விவகாரம் தெரிய வந்துள்ளது.
இதை அடுத்து அவர்கள் வாழ்க்கையில் புயல் வீச தொடங்கியது. தன்னைவிட ராஜேஸ்வரி அப்படி என்ன உசத்தி என கேட்டு பார்வதி சுரேஷ் உடன் அடிக்கடி சண்டை செய்து வந்துள்ளார். ஆனால் சுரேஷோ ராஜேஸ்வரி உடனான பழக்கத்தை கை விடுவதாக இல்லை. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் மனைவியிடம் இருந்து விலகத் தொடங்கிய சுரேஷ் தான் நடத்திவரும் காய்கறி கடையை கவனிக்கும் பொறுப்பை ராஜேஸ்வரிக்கு ஒப்படைத்து இருக்கிறார்.
இதனால் கடும் ஆத்திரம் அடைந்த சுரேஷின் மனைவி பார்வதி ராஜேஸ்வரியை கொலை செய்ய வந்தாலும் பரவாயில்லை என்ற கொடூர எண்ணத்திற்கு வந்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த ஒன்பதாம் தேதி காலை 9 மணி அளவில் திருவள்ளூர் மார்க்கெட் பகுதியில் சுரேஷின் கடையில் ராஜேஸ்வரி இருந்தார். அப்போது அங்கு வந்த பார்வதி ராஜேஸ்வரியின் மீது திடீரென பெட்ரோலை ஊற்றினார்.
என்ன நடக்கிறது என யூகித்து சுதாரிப்பதற்க்குள் ராஜேஸ்வரி மீது பார்வதி தீ வைத்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. காய்கறி கடையில் நின்று கொண்டிருந்த ராஜேஸ்வரி மீது சுரேஷின் மனைவி பெற்றோரை ஊற்றுவதும், தொடர்ந்து தீ வைப்பதும் ராஜேஸ்வரி தீப்பற்றி அலறி துடித்து விழுந்த காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உடல் முழுவதும் தீக் காயங்களுடன் உயிருக்கு போராடிய ராஜேஸ்வரியை அருகில் இருந்தோர் மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். நான்கு நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ராஜேஸ்வரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து கொலை வழக்கு வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சுரேஷ், அவரது மனைவி பார்வதி உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications