தெள்ளார் அருகே 1200 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால ஐயனார் சிலை கண்டெடுப்பு

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளார் அருகே நல்லூர் கிராமத்தில் 1200 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால ஐயனார் சிலை கண்டறியப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மரபுசார் அமைப்பைச் சேர்ந்த ராஜ் பன்னீர் செல்வம் , உதயராஜா மற்றும் சரவணன் ஆகியோர் இணைந்து தெள்ளாறு பகுதியில் கள ஆய்வு மேற்கொண்ட பொழுது , நல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் திரு. பாரதிராஜா அவர்கள் தந்த தகவலின் பேரில் நல்லூரில் உள்ள விவசாய நிலத்தில் உள்ள சிற்பத்தைக் காணச் சென்றனர்.

நல்லூர் ஊரிலிருந்து பெரியகுப்பம் செல்லும் சாலையில் இடது புறம் உள்ள விவசாய நிலத்தில் மண்ணில் சாய்ந்த நிலையில் ஒரு பலகை சிற்பம் காணப்பட்டது. அதனைச் சுத்தம் செய்து ஆய்வு செய்ததில் அது பல்லவர் காலத்து ஐயனார் சிலை என்பது கண்டறியப்பட்டது.

நான்கடி உயரம்

நான்கடி உயரம்

சுமார் மூன்றடி அகலமும் நான்கடி உயரமும் கொண்ட பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. அழகிய ஜடாபாரம் தலையை அலங்கரிக்க , வட்டமான முகத்தில் தடித்த உதடுகளுடன் இரு காதுகளிலும் பத்ர குண்டலம் அணிந்து காட்சி தருகிறார். கழுத்தில் உருண்டையான மணிகள் கோர்க்கப்பட்ட சரப்பளி போன்ற மாலையையும் , இரு கைகளில் தோள்வளை மற்றும் கைவளை அணிந்து உத்குதிகாசன கோலத்தில் ஒரு வலது காலை மடக்கியும் , இடது காலை தொங்கவிட்டும் அமர்ந்துள்ளார்.

இடை ஆடை

இடை ஆடை

இடையில் உதிரபந்தமும் , இடை ஆடையில் உரையுடன் கூடிய குறுவாள் ஒன்றும் காட்டப்பட்டுள்ளது. வலது கையை வலது காலின் முட்டி மீது வைத்து கையை தொங்கவிட்டு தனது ஆயுதமான செண்டை பற்றிக் கொண்டும் , இடது கையை தொடை மீது வைத்து உள்ளார். இடது காலின் அருகே ஐயனாரின் வாகனமான குதிரை காட்சி படுத்தப்பட்டுள்ளது.

குத்துவிளக்கு

குத்துவிளக்கு

மேலும் இடது பக்கம் குத்துவிளக்கு ஒன்றும் காணப்படுகிறது. இதன் தலைபகுதி லிங்கம் போன்ற அமைப்பில் உள்ளது. சிற்ப அமைதி மற்றும் அணிகலன்களை வைத்துப் பார்க்கையில் இச்சிற்பம் 9ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்கால பல்லவர்கள் காலத்தியது என்று கருதலாம்.

1200 ஆண்டுகள் பழமையானது

1200 ஆண்டுகள் பழமையானது

1200 வருடம் பழமையான இச்சிற்பம் பல வருடங்களாக மண்ணில் சாய்ந்தே கிடப்பதால் வெயிலுக்கும் மழைக்கும் நனைந்து சிலையின் மேற்பரப்பு மிகவும் தேய்ந்த நிலையில் காணப்படுகிறது. இப்பகுதி மக்கள் மூடநம்பிக்கையின் காரணமாக இதனை அப்படியே வைத்து வழிபடுகின்றனர்.

பாதுகாப்பதன் அவசியம்

பாதுகாப்பதன் அவசியம்

இச்சிலையின் தொன்மை மற்றும் பாதுகாப்பதன் அவசியம் குறித்து அங்குள்ளவர்களிடம் விளக்கிய பொழுது , விரைவில் இதனை நிமிர்த்திப் பாதுகாப்பாக வைப்பதாக உறுதி அளித்தனர். காலை தொங்கவிட்டும் அமர்ந்துள்ளார். இடையில் உதிரபந்தமும் , இடை ஆடையில் உரையுடன் கூடிய குறுவாள் ஒன்றும் காட்டப்பட்டுள்ளது.

வலது கால்

வலது கால்

வலது கையை வலது காலின் முட்டி மீது வைத்து கையை தொங்கவிட்டு தனது ஆயுதமான செண்டை பற்றிக் கொண்டும் , இடது கையை தொடை மீது வைத்து உள்ளார். இடது காலின் அருகே ஐயனாரின் வாகனமான குதிரை காட்சி படுத்தப்பட்டுள்ளது. மேலும் இடது பக்கம் குத்துவிளக்கு ஒன்றும் காணப்படுகிறது. இதன் தலைபகுதி லிங்கம் போன்ற அமைப்பில் உள்ளது.

அணிகலன்கள்

அணிகலன்கள்

சிற்ப அமைதி மற்றும் அணிகலன்களை வைத்துப் பார்க்கையில் இச்சிற்பம் 9ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்கால பல்லவர்கள் காலத்தியது என்று கருதலாம். 1200 வருடம் பழமையான இச்சிற்பம் பல வருடங்களாக மண்ணில் சாய்ந்தே கிடப்பதால் வெயிலுக்கும் மழைக்கும் நனைந்து சிலையின் மேற்பரப்பு மிகவும் தேய்ந்த நிலையில் காணப்படுகிறது. இப்பகுதி மக்கள் மூடநம்பிக்கையின் காரணமாக இதனை அப்படியே வைத்து வழிபடுகின்றனர்.

சங்கு சக்கரம்

சங்கு சக்கரம்

இச்சிலையின் தொன்மை மற்றும் பாதுகாப்பதன் அவசியம் குறித்து அங்குள்ளவர்களிடம் விளக்கிய பொழுது , விரைவில் இதனை நிமிர்த்திப் பாதுகாப்பாக வைப்பதாக உறுதி அளித்தனர். மேலும் இவ்வூரில் பாதி உடைந்த நிலையில் சங்கு சக்கரம் ஏந்திய விஷ்ணு சிற்பம் ஒன்று பெரியகுப்பம் செல்லும் வழியில் இருப்பதும் கண்டறியப்பட்டது. இது பிற்கால விஜயநகர கலை பாணியில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+