அதிர்ச்சி சம்பவம்.. சாமியார் பேச்சை கேட்டுக் கொண்டு 16 வயது சிறுவனை ஜீவசமாதி செய்த குடும்பம்
திருவண்ணாமலையில் சிறுவனை ஒரு குடும்பம் ஜீவசமாதி செய்துள்ளது.
Recommended Video
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே 16 வயது சிறுவனை ஒரு சாமியாரின் பேச்சைக் கேட்டு ஜீவ சமாதி செய்த குடும்பத்தினரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வழக்கமாக சாமியார்கள், சித்தர்கள்தான் அந்தக் காலத்தில் ஜீவசமாதி ஆவது வழக்கமாக இருந்தது. இப்போதெல்லாம் அது போல நடப்பதில்லை. நடப்பதாக தெரிந்தால் காவல்துறையினர் விரைந்து வந்து நடவடிக்கை எடுத்து விடுவார்கள்.
இந்த நிலையில் திருவண்ணாமலை அருகே 16 வயது சிறுவனை ஜீவசமாதி செய்துள்ள செயல் அனைவரையும் அதிர வைத்துள்ளது. இதை லைவாக வீடியோவிலும் எடுத்து சமூக வலைதளங்களில் போட்டுள்ளது இன்னும் அதிர வைப்பதாக உள்ளது.

16 வயது சிறுவன்
திருவண்ணாமலை அருகே உள்ளது செண்பகத்தோப்பு ராமநாதபுரம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஆசிரியர் ஹரிகிருஷ்ணன். இவருக்கு தன நாராயணன் என்ற 16 வயது மகன் இருந்தான். இவனுக்கு உடல் நிலை சரியில்லை. இதனால் படிப்பை தொடர முடியாமல் வீட்டிலேயே இருந்து வந்தான்.

ஜல சமாதி ஆகி விட்டதாக
இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டுக்கு அருகே உள்ள கிணற்றின் பக்கத்தில் நின்றிருந்தபோது வலிப்பு வந்து தவறி கிணற்றில் விழுந்து விட்டான் தன நாராயணன். இதில் தலையில் அடிபட்டது. தீயணைப்புப் படையினர் விரைந்து வந்தனர். 108 ஆம்புலன்ஸும் வந்தது. அதில் இருந்தவர்கள் சிறுவனை பரிசோதித்து அவன் இறந்து விட்டதாக கூறினர்.

சாமியார் ஆலோசனை
இந்த நிலையில் அந்தப் பக்கமாக ஒரு சாமியார் வந்துள்ளார். அவர் அந்தப் பகுதியில் பிரபலமானவர் போல. அவர் வந்து என்ன ஏது என்று பார்த்து விட்டு தன நாராயணன் இறக்கவில்லை. நாடி இருக்கு. அவன் ஜீவசமாதி அடைய வேண்டும் என்று கூறி விட்டுப் போயுள்ளார். இதைக் கேட்ட குடும்பத்தினர் கொஞ்சமும் யோசிக்காமல் ஜீவசமாதிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.

ஜீவ சமாதி
பெரிய பள்ளம் தோண்டி அதில் சிறுவனை அமர வைத்த நிலையில் வைத்து மண்ணைப் போட்டு மூடி விட்டனர். அந்த சிறுவனுக்கு உண்மையிலேயே நாடி இருந்திருந்தால் அவனை மீண்டும் மருத்துவமனைக்குக் கொண்டு போய் சிகிச்சை அளித்திருந்தால் ஒருவேளை காப்பாற்றியிருக்கலாமோ என்னவோ.

என்ன சொல்வது
சாமியார் பேச்சைக் கேட்டுக் கொண்டு சிறுவனை ஜீவசமாதி செய்த பெற்றோரின் செயலை என்னவென்று சொல்வது. இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியே பரபரப்பாகிக் கிடக்கிறது. இப்போது அந்த சமாதிக்கு பலரும் வந்து சிறுவன் புதைக்கப்பட்ட இடத்தில் வணங்கிச் செல்கின்றனராம். அந்த இடத்திற்கு வருவோர் வசதிக்காக பெரிய சைஸ் போர்டெல்லாம் கூட வைத்து விட்டனராம்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications