திருவண்ணாமலையில் கண்ணை உறுத்திய 3 கிராம் நகை.. மதுரையில் உடைந்த நெஞ்செலும்பு! இப்படியும் மனிதர்களா?

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: ஊரகப் பகுதிகளில், புறநகர்ப்பகுதிகளில் வயதானவர்களை குறி வைத்து கொள்ளை, கொலை போன்ற சம்பவங்கள் நடப்பது அதிகரித்து வருவதாக ஏற்கனவே நீதிமன்றங்கள் வேதனை தெரிவித்திருந்தன. ஆனால் இப்போதெல்லாம் நகர்ப்புறங்களிலேயே நகைக்கொள்ளை நடந்து வருவது அதிர்ச்சியை தந்து வருகிறது.. தங்கம் விற்கும் விலையில், நகைகளை வாங்கவே முடியாது என்ற சூழலில் நடுத்தர, ஏழை மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.. இப்படிப்பட்ட சூழலில் நகை திருட்டு, கொள்ளைகள் அதிகரித்தவாறே உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்துள்ளது குடியாந்தண்டலம் கிராமம்.. இங்க மன்னார்சாமி என்பவர் வசித்து வருகிறார்.. இவருக்கு 90 வயதாகிறது.

Tiruvannamalai Madurai 3 Gram Gold Jewelry Shocking incident committed by a young woman without any affection 3

கடந்த 13ம் தேதி காலை 7 மணிக்கு மாரியம்மன் கோயிலுக்கு சென்ற மன்னார்சாமி மறுபடியும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை..

திருவண்ணாமலை

அன்றைய தினம் இரவு, மாரியம்மன் கோயில் அருகே உள்ள காரியமேடை ஒட்டி முட்புதரில் இறந்து கிடப்பதை கண்டு, அந்த பகுதி மக்கள் உடனடியாக தூசி போலீசாருக்கு தகவல் தந்தனர்..

போலீசாரும் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டபோதுதான், போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தது.

அந்த அறிக்கையில், மன்னார்சாமியின் நெஞ்சு பகுதியில் எலும்பு உடைக்கப்பட்டும், கழுத்து எலும்பு நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது..

உடைந்த நெஞ்சு எலும்புகள்

இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.. அப்போதுதான், அதே கிராமத்தை சேர்ந்த பிரவீன்குமார் (19), தினேஷ்(21) ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரித்ததில், மன்னார்சாமியை 3 கிராம் நகைக்காக கொன்றதாக ஒப்புக் கொண்டனர்.

சம்பவத்தன்று கோயிலுக்கு வந்த மன்னார்சாமியை வழிமறித்து, அவரது மார்பில் எட்டி உதைத்தும், கழுத்து நெரித்தும் கொன்று விட்டு 3 கிராம் மோதிரத்தை பறித்து சென்றதாக வாக்குமூலம் தந்தனர்.. இதையடுத்து இந்த கொலை தொடர்பாக, போலீசார் இரு இளைஞர்களையும் கைது செய்தனர்.

மதுரை - ரூ.45000 பணம்

அதேபோல மதுரையிலும் ஒரு கொடுமை நடந்துள்ளது.. ஆனையூர் கணபதி நகரை சேர்ந்த தம்பதி பழனிச்சாமி.. இவருக்கு 65 வயதாகிறது.. இவரது முதல் மனைவி இறந்துவிட்டதால், ஜோதி என்ற என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சித்ராதேவி (25) என்ற வளர்ப்பு மகள் உள்ளார்.

இதில், சித்ராதேவிக்கும், பழனிச்சாமிக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான தகராறு இருந்து வந்துள்ளது.. இந்த தகராறு முன்விரோதமாக மாறியது..

இப்படிப்பட்ட சூழலில், சித்ராதேவி தன்னுடைய நண்பர்கள் சரத், விஜய் ஆகியோருடன் நேற்று பழனிச்சாமி வீட்டிற்கு வந்திருக்கிறார்.. தனக்கு ரூ.4,500 வேண்டும் என்று கேட்டுள்ளார்.. பழனிசாமி தன்னிடம் பணம் இல்லை என்று சொல்லவும், ஆத்திரமடைந்த சித்ராதேவியும், நண்பர்களும், பழனிசாமியை கடுமையாக தாக்கி அவரது கழுத்தை நெரித்துள்ளனர்.

வளர்த்த பாசம் இல்லை

இதில் மயங்கி கீழே விழுந்துள்ளார் பழனிசாமி.. இதைப்பார்த்து பதறிய அக்கம்பக்கத்தினர் பழனிசாமியை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.. ஆனால், பழனிசாமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக சொல்லிவிட்டனர்.

இந்த கொலை தொடர்பாக கூடல்புதூர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த சித்ராதேவி, சரத், விஜய் ஆகிய 3 பேரையுமே கைது செய்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள். வளர்த்த பாசமே இல்லாமல், வெறும் 4500 ரூபாய்க்காக நடந்த கொலை மதுரையை அதிர்ச்சியடைய வைத்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+