திருவண்ணாமலையில் 50 சென்ட் நிலம்.. பிரிக்கப்படாத குடும்ப சொத்துக்களால் வந்த வில்லங்கம்.. அதுக்கு?
திருவண்ணாமலை: முறையாக சொத்துக்களை பகிர்ந்தளிக்கப்படாவிட்டால், அது சிலசமயம் உயிரையே காவு வாங்கும் அளவுக்கு கொண்டுசென்றுவிடுகிறது. அப்படித்தான் திருவண்ணாமலையில் ஒரு சோகம் நடந்துள்ளது.. அண்ணன் - தம்பி இருவருமே இல்லாமல் இன்று இருவரின் குடும்பமும் தவிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ளது தென்முடியனூர் என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் பாலு. இவருக்கு வாசு, புருஷோத்தமன் என்ற 2 மகன்கள் இருக்கிறார்கள். வாசுவுக்கு 55 வயதாகிறது.. புருஷோத்தமனுக்கு 53 வயதாகிறது.

பாலுவுக்கு சொந்தமான 8 ஏக்கர் நிலம் இருந்தது.. தந்தை பாலு இறந்துவிட்டதால், மகன்கள் இருவரும், இந்த நிலத்தை தங்களுக்குள் பிரித்துக்கொண்டு, அதில் விவசாயம் செய்து வந்தனர்.
50 சென்ட் நிலம்: இதுதவிர பாலுவின் பெயரில் 50 சென்ட் நிலம் உள்ளதாக தெரிகிறது.. அந்த நிலத்தை பிரித்து கொடுக்காமல், அண்ணன் வாசு மட்டும் பயிர் செய்து வந்ததாக சொல்கிறார்கள். எனவே, இதுகுறித்து புருஷோத்தமன் கேட்டுள்ளார்.. 50 சென்ட் நிலத்திலிருந்து தன்னுடைய பாகத்தை தர வேண்டும் என்றும், அந்த நிலத்தை பிரித்து கொடுக்கும்படியும் கேட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், சம்பவத்தன்று, வாசு தன்னுடைய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த புருஷோத்தமன், நிலத்தை எனக்கு பிரித்து தராமல் நீயே அனுபவிக்கிறாயா? உடனே பிரித்து தர வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனால், அண்ணன் - தம்பிக்கு இடையே வாக்குவாதம் வெடித்துள்ளது. ஒருகட்டத்தில் கைகலப்பு வரை சென்றுள்ளது..
உச்சக்கட்ட ஆவேசம்: இதில், ஆத்திரம் அடைந்த வாசு, கீழே கிடந்த மண் வெட்டியை எடுத்துவந்து, புருஷோத்தமனின் தலையில் வெட்டியதாக தெரிகிறது. இதில் தலையில் ஆழமாக வெட்டுப்பட்டு, ரத்த வெள்ளத்தில் புருஷோத்தமன் அங்கேயே மண்ணில் சரிந்து விழுந்தார்..
புருஷோத்தமனின் அலறல் சத்தத்தை கேட்டு, நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த கிராம மக்கள், பதறியடித்து கொண்டு ஓடிவந்தனர்.. உயிருக்கு போராடிக் கொண்டிருந்த புருஷோத்தமனை மீட்டு சிகிச்சைக்காக தண்டராம்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், டாக்டர்கள் புருஷோத்தமனை பரிசோதித்துவிட்டு, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
அதிர்ச்சி: இதுகுறித்த புகாரின் பேரில் தண்டராம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாசுவை கைது செய்தனர். சொத்து தகராறில் தம்பியை அண்ணனே வெட்டிக்கொன்ற சம்பவம் தி.மலை மாவட்டத்தில் பெரும பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications