2 மணி நேரத்தில்.. ரூ.72 லட்சம் கொள்ளை.. ஏடிஎம்களில் திருடியது எப்படி? கொள்ளை கும்பலின் ஷாக் டெக்னிக்
ஹரியானாவில் இருந்து வந்து மும்பை, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, திருவண்ணாமலை ஆகிய இடங்களில் கொள்ளையடித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நடந்த ஏடிஎம் கொள்ளை சம்பவம் தமிழ்நாட்டில் நடைபெற்றதிலேயே மிகப்பெரிய கொள்ளை சம்பவமாக பார்க்கப்படுகிறது. வெறும் 2 மணி நேரத்தில் 72 லட்சம் ரூபாய் இங்கே கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலையில் வெறும் 4 கிமீ இடைவெளியில் இருக்கும் 4 ஏடிஎம்களை திருடி உள்ளனர். இதில் ஒன்இந்தியா ஏடிஎம் மையத்தில் ரூ.3,00,000 கொள்ளையடிக்கப்பட்டது. போளூரில்எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் ரூ.18,00,000 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது. மாரியம்மன் கோவில் தெரு எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் ரூ.19,50,000 மற்றும் தேனிமலை எஸ்பிஐ ஏடிஎம்மில் ரூ.32,00,000 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது.
இந்த கொள்ளை தொடர்பாக டிஎஸ்பி குணசேகரன் தலைமையில் 6 தனிப்பிரிவு அமைக்கப்பட்டு உள்ளது. வட இந்திய கும்பல் இந்த கொள்ளையை செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

தப்பி ஓடி இருக்கலாம்
இவர்கள் கொள்ளையடிக்கப்பட்டது ஆந்திர எல்லைக்கு அருகே என்பதால் எளிதாக ஆந்திராவிற்கு தப்பி ஓடி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆந்திர பிரதேசத்திற்கு இவர்களின் சுமோ சென்றதாக கூறப்படுகிறது. சுமோ ஒன்றில் இவர்கள் பயணம் செய்ததற்கான சிசிடிவி ஆதாரங்கள் உள்ளன. அந்த சுமோ ஆந்திரா அருகே தமிழ்நாடு எல்லையில் உள்ள டோல் கேட் ஒன்றை தாண்டி சென்று இருக்கிறது. இதனால் தற்போது தமிழ்நாடு போலீசார் ஆந்திர போலீசாரின் உதவியையும் நாடி உள்ளனர். அந்த மாநிலத்தில் உள்ள பல்வேறு சிசிடிவி காட்சிகள் ஆராயப்பட்டு வருகின்றன.

அந்த மாநிலம்?
இந்த கொள்ளையர்கள் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஹரியானாவில் இருந்து வந்து மும்பை, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, திருவண்ணாமலை ஆகிய இடங்களில் கொள்ளையடித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் ஹரியானாவிலும் இவர்களின் இருப்பிடம் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது. அங்கே இவர்கள் தப்பி சென்றுவிட்டனரா என்றும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அங்கே இருக்கும் போலீசார் உதவியுடன் இந்த விசாரணை நடந்து வருகிறது.

மும்பை சிசிடிவி - ஹை வே சிசிடிவி
மும்பையில் இதே கும்பல் இதற்கு முன் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மும்பையில் இதே போன்ற பாணியில் ஏடிஎம் கொள்ளை ஒன்று சில மாதங்களுக்கு முன் நடந்தது. அதில் ஏடிஎம் வெளியே இருந்த சிசிடிவி காட்சி ஒன்று போலீசாரிடம் உள்ளது. அதை தமிழ்நாடு போலீசார் தற்போது வாங்கி உள்ளனர். அதேபோல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இதை வைத்து அந்த கொள்ளையர்களின் உருவங்களை கண்டுபிடிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

லாட்ஜ்
சமயங்களில் இவர்கள் ஆந்திரா செல்லாமல் இங்கேயே பதுங்கி இருக்கவும் வாய்ப்புகள் உள்ளன. அதனால் தமிழ்நாட்டில் இருக்கும் சில லாட்ஜுகளையும் போலீசார் சோதனை செய்து வருகின்றனர். ஆந்திர எல்லை, திருவண்ணாமலை, திருத்தணியில் உள்ள லாட்ஜுகளை போலீசார் சோதனை செய்து வருகின்றனர். இந்த பகுதிகளில் இருக்கும் ஏடிஎம்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஏடிஎம் மையத்தில் அதிகாலையில் சென்று, மையத்தின் கதவை மூடிவிட்டு, கேமராவை மறைத்துவிட்டு கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தி உள்ளனர். வெல்டிங் மிஷின் மூலம் இந்த கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தி உள்ளனர்.

எப்படி செய்தனர் - 2 மணி நேரம் - நோட்டம்
இந்த கொள்ளையை கொள்ளையர்கள் மிகவும் வித்தியாசமாக மேற்கொண்டு உள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட ஏடிஎம்களில் பாதுகாவலர்கள் இல்லை, இரவில் இங்கே போலீஸ் ரோந்து இல்லை என்பதை இவர்கள் பல நாட்கள் நோட்டம் செய்து கண்டுபிடித்து உள்ளனர். போலீஸ் இல்லாத சாலையில் உள்ள ஏடிஎம் சென்று அந்த ஏடிஎம் கதவை மூடி உள்ளனர். பின்னர் உள்ளே சென்று பின் பக்கம் சர்வர் கதவை உடைத்து சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிஸ்க்கை திருடி உள்ளனர். அதன்பின் கேமராவை உடைத்து நொறுக்கி உள்ளனர். பின்னர் ஏடிஎம் மிஷினை பின்னர் வெல்டிங் மிஷின் வைத்து உடைத்து உள்ளனர். பின்னர் பணத்தை திருடியதும் மிஷினை தீ வைத்து உள்ளனர். இது அனைத்தையும் 2 மணி நேரத்தில் செய்துள்ளனர். 2 டீம்களாக இவர்கள் பிரிந்து இதை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
-
ஒரே நாளில் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்.. 17 மாவட்ட எஸ்.பிக்கள் அதிரடியாக மாற்றம் - அரசு உத்தரவு -
மூக்கில் ரத்தம், டிரஸ் இல்ல.. ஹனிமூன் சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! என்ன நடந்தது -
தமிழ்நாட்டில் விபச்சாரத்திற்கு அனுமதி தர வேண்டும் - மஎஜக தலைவர் காயல் அப்பாஸ் வைத்த கோரிக்கை! -
"என் கைய விடு" ஐஏஎஃப் அதிகாரி மனைவிக்கு தோழன் விரித்த வலை! வசிய மாந்திரீகம்! நாக்பூரில் யார் பாருங்க -
கும்மிடிப்பூண்டி சிறுமியின் பெற்றோரை மிரட்டினாரா தவெக எம்எல்ஏ விஜயகுமார்? மாதர் சங்கத்தினர் புகார் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை












Click it and Unblock the Notifications