திருவண்ணாமலை தீபத் திருவிழா.. நாளை முதல் 9 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை! மாணவர்களுக்கு குஷி!

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை (டிசம்பர் 8) முதல் 16 ஆம் தேதி வரை திருவண்ணாமலை மாவட்டத்தில் 156 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வரும் 13 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. திருக்கார்த்திகை தினத்தில் திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாமலையார் ஆலயத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு அதிகாலை 4 மணியளவில் கோவில் மூலவர் சந்நிதியில் பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு 2 ஆயிரத்து 668 அடி உயரத்தில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

tiruvannamalai schools police

இந்த ஆண்டு மகா தீபத்தைக் காண சுமார் 40 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் சிறப்பு ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்காக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், சுமார் 16,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அவர்கள், திருவண்ணாமலை நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிகளில் தங்கவைக்கப்பட உள்ளனர்.

இந்நிலையில், திருவண்ணாமலை மாநகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள 156 பள்ளிகளில் போலீசார் தங்க உள்ளதன் காரணமாக, அந்தப் பள்ளிகளுக்கு நாளை முதல் டிசம்பர் 16 வரை 9 நாட்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளார் திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர். மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை முதல், 156 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

tiruvannamalai schools police

திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பள்ளிகளுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், "திருவண்ணாமலை மாவட்டத்தில் 13.12.2024 அன்று நடைபெற உள்ள திருக்கார்த்திகை தீபத் திருவிழாவினை முன்னிட்டு 08.12.2024 முதல் 16.12.2024 வரை 156 அரசு/ அரசு நிதியுதவி பெறும்/ தனியார் தொடக்க/ நடுநிலை/ உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் 16,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் ஒப்புதலுக்கிணங்க, 156 அரசு/ அரசு நிதியுதவி பெறும்/ தனியார் தொடக்க/ நடுநிலை/ உயர்/ மேல்நிலைப் பள்ளிகளுக்கு 08.12.2024 முதல் 16.12.2024 வரை 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது என சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது." என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+