திருவண்ணாமலையில் திருமணமான மறுநாளே கணவனுக்கு மனைவி தந்த ட்விஸ்ட்.. உடன் இருந்து நண்பன் செய்த துரோகம்

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இளம் பெண் ரேகா என்பவருக்கும் சதீஷ் என்பவருக்கும் அண்மையில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த மறுநாள் நண்பனின் தாயை பார்த்து வருவதாக கூறிய புதுப்பெண் ரேகாவை, தனது நண்பரின் பைக்கில் சதீஷ் அனுப்பி வைத்தாராம். ஆனால் திருமணம் ஆன மறுநாளே புதுப்பெண் ரேகா, சதீஷின் நண்பருடன் எஸ்கேப் ஆகிவிட்டாராம்.இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்த வருகிறது.

இன்றைக்கு பெண்கள் சிலர் திருமணம் என்பதை சரியாக புரிந்து கொள்வது இல்லை.. திருமணத்திற்கு முன்பே சிலரை காதலிக்கிறார்கள். திருமணத்தின் போது எதுவுமே சொல்வது இல்லை. பெற்றோரின் வற்புறுத்தலுக்காக திருமணம் செய்கிறார்கள். இந்நிலையில் காதலன் வந்து கூப்பிட்ட உடன், காதலனுடனே சென்றுவிடுகிறார்கள். இன்னும் சில பெண்கள் திருமணம் முடிந்த பின்னர், கணவனை தேனிலவுக்கு அழைத்து சென்று தீர்த்து கட்டவும் செய்கிறார்கள். காதல் விவாகரங்கள் இருக்கிறதா என்பதை அறியாமல் திருமணம் செய்யும் ஆண்கள் கடைசியல் பலிகடா ஆக்கப்படுகிறார்கள்.

A newlywed couple runs away the day after their wedding in Tiruvannamalai A twist from a friend

சில பெண்கள், திருமணத்திற்கு முதல் நாளில் அல்லது திருமண தேதி குறித்த பின்னர் காதலனுடன் சென்றுவிடுகிறார்கள்.. கடைசி நேரத்தில் திருமணம் நின்ற அதிர்ச்சியில் மாப்பிள்ளை ஆடிப்போகிறார். இன்னும் சில பெண்கள் மணமேடையில் ஏறிய பின்னர், இந்த மாப்பிள்ளை பிடிக்கவில்லை.. வேறு ஒருவரை காதலிக்கிறேன் என்று கூறி ட்விஸ்ட் தருகிறார்கள். இப்படி பல்வேறு சம்பவங்கள் அதிகரித்துவிட்டன.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள ஆத்தூர் கிராமத்தை சேர்ந்த 25 வயதாகும் சதீஷ் என்பவரும், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா பாட்டையூர் கிராமத்தை சேர்ந்த கோட்டீஸ்வரனும் (27) ஒன்றாக வேலை செய்து வந்தார்கள். இதில் அவர்கள் நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். இந்த நிலையில் சதீசுக்கும், கோட்டீஸ்வரனின் உறவினர் பெண்ணான ஆத்தூர் கிராமத்தை சேர்ந்த ரேகாவுக்கும் (23) கடந்த 8-ந் தேதி திருமணம் நடந்திருக்கிறது.

A newlywed couple runs away the day after their wedding in Tiruvannamalai A twist from a friend

திருமணம் நடந்த அன்று மணப்பெண் அவரது தாய் வீட்டில் இருந்தார். மறுநாள் அவரை, சதீஷ் மோட்டார் சைக்கிளில் தனது வீட்டுக்கு அழைத்து சென்றார். வேலூரை அடுத்த பென்னாத்தூர் பஜாரில் சென்றபோது அங்கு, இருசக்கர வாகனத்தில் வந்த கோட்டீஸ்வரன், தனது தாயை பார்க்க ரேகா விரும்புவதாகவும், அதனால் அவரை தனது வீட்டுக்கு அழைத்து சென்று வருவதாகவும் கூறியிருக்கிறார்.

அதை நம்பிய சதீஷ் தனது மனைவியை, கோட்டீஸ்வரனுடன் அனுப்பி வைத்தார். ஆனால் நீண்டநேரம் ஆகியும் அவர்கள் திரும்பிவரவில்லை. இதனால் சந்தேகமடைந்த சதீஷ் மனைவி மற்றும் நண்பரின் வீட்டிற்குசென்று பார்த்திருக்கிறார். ஆனால் புதுப்பெண் ரேகா, கோட்டீஸ்வரன் வீட்டுக்கு போகவில்லை என்பது தெரியவந்தது. இருவரையுமே காணவில்லை.

இதனால் பல இடங்களில் இரவு முழுவதும் சதீஷ் தேடி பார்த்தார். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. அதைத்தொடர்ந்து சதீஷ் வேலூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் தனது மனைவியை காணவில்லை என்று புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுப்பெண் ரேகாவையும், அவரை அழைத்து சென்ற கோட்டீஸ்வரனையும் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+