ஆரணி மஞ்சுளா.. இப்ப திருவண்ணாமலை விஏஓ.. நிலத்திற்கு பட்டா, சிட்டா கேட்ட விவசாயி.. அங்கே பார்த்தால்?

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: விவசாய நிலத்திற்கு சிட்டா மற்றும் அடங்கல் கொடுக்க மறுத்துள்ளர் விஏஓ காந்தி.. இறுதியில் விவசாயி எடுத்த முடிவை பார்த்து திருவண்ணாமலையே பதறி போய்விட்டது.

போலி பத்திரங்கள் நடமாட்டத்தை குறைக்கவும், லஞ்ச நடமாட்டத்தை குறைக்கவும் தமிழக அரசு நிறைய தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.. எனினும் சில அதிகாரிகள் கையும் களவுமாக சிக்கி பொதுவெளியிலேயே அசிங்கப்பட்டு விடுகிறார்கள..

Tiruvannamalai VAO Patta Land

மோசடிகள்: ஒரு நிலத்தை வாங்கி விற்பதற்கு பத்திரங்கள் என்பது அவசியமானது என்பதால்தான், போலி பத்திரங்களை தயார் செய்து, நிஜ பத்திரிகைபோலவே உருவாக்கி மோசடி பெருகி வருகிறது. எனவே, இந்த போலி பத்திரங்கள் நடமாட்டத்தை குறைக்கவும், லஞ்ச நடமாட்டத்தை குறைக்கவும் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

லஞ்சம் வாங்குபவர்கள், பட்டா மோசடி செய்பவர்கள் என எந்த அதிகாரியாக இருந்தாலும் அவர்களின் தவறு நிரூபணமாகும்பட்சத்தில் உடனுக்குடன் கைது செய்யப்படுகிறார்கள்.. இதில் விஏஓ முதல் தாசில்தார் வரை கைதாவது அதிர்ச்சியை தந்து வருகிறது. அதிலும் பெண் அதிகாரிகள் லஞ்சம் வாங்கி கைதாகி வருவது அதற்கு மேல் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

பட்டா மாறுதல்: பட்டா மாறுதலுக்காக லஞ்சம் வாங்கி நாகை விஏஓ செல்வி என்பவர் கைதானார்.. செல்வியை கைது செய்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், அவரை அழைத்துச் சென்றதை, அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியுடன் பார்த்தார்களாம். அதுபோலவே சமீபத்தில் ஆரணியில் வட்டாட்சியர் மஞ்சுளா என்பவரும் சிக்கினார்..
இதோ திருவண்ணாமலையிலும் ஒரு விஏஓ லஞ்சம் கேட்டிருக்கிறார்.. கடந்த 2 நாட்களாகவே இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.. திருவண்ணாமலை அடுத்துள்ளது தேவனாம்பட்டு கிராமத்தில், விஏஓ அலுவலகம் செயல்பட்டு வருகிறது.. இங்கு ஊதிரம்பூண்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி ராமகிருஷ்ணன் என்பவர், தன்னுடைய நிலத்துக்கான சிட்டா மற்றும் அடங்கல் கேட்டு மனு தந்துள்ளார்..

திருவண்ணாமலை: ராமகிருஷ்ணனுக்கு 4 ஏக்கர் விவசாய நிலம் உள்ள நிலையில், இந்த நிலத்தில் ஆட்டுப் பண்ணை வைத்து விவசாயம் செய்து வருகிறார். கடந்த ஒரு மாதமாக தேவனாம்பட்டு விஏஓ காந்தி என்பவரிடம் சிட்டா மற்றும் அடங்கல் கேட்டு மனு கொடுத்துள்ளார். அந்த மனுவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.. அதனால், விவசாயி ராமகிருஷ்ணன் மீண்டும் விஏஓ ஆபீசுக்கு சென்று, காந்தியை நேரில் சந்தித்து தன்னுடைய நிலத்திற்கு சிட்டா மற்றும் அடங்கல் கொடுக்கும்படி வலியுறுத்தியுள்ளார்.

அதற்கு விஏஓ, "அதெல்லாம் கொடுக்க முடியாது.. பணம் இருந்தால் மட்டுமே வேலை நடக்கும்" என்று கறாராக சொல்லியிருக்கிறார். அத்துடன் ராமகிருஷ்ணனை ஒருமையிலும் பேசியிருக்கிறார். இதனால், மனமுடைந்த விவசாயி, அதே விஏஓ ஆபீஸின் வெளியே வந்து, தன்னுடைய உடலில் பெட்ரோல் ஊற்றி நெருப்பை வைத்துக் கொண்டார்.

லஞ்சம்: அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் ஓடிவந்து விவசாயியை காப்பாற்ற முயன்றனர்.. உடல் முழுவதுமே தீப்பற்றி எரிந்ததால், தீயை முதலில் அணைத்தனர்.. பிறகு, வாழையிலையை பறித்து கொண்டு வந்து விவசாயியின் உடலில் வைத்தனர்.. வாழைச்சாறு பிழிந்து உடம்பெல்லாம் ஊற்றினார்கள்..

பின்னர் உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை முடிந்த நிலையில், உடனடியாக வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சுக்காக அனுப்பி வைத்திருக்கிறார்கள்..

முதலுதவி: இந்த சம்பவம் குறித்து கலசப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. விவசாய நிலத்திற்கு சிட்டா மற்றும் அடங்கல் கொடுக்க மறுத்து, லஞ்சமும் கேட்டு, தன்னை தகாத முறையில் பேசியதால், பெட்ரோல் ஊற்றி விவசாயி தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதே திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற புகாரில், வட்டாட்சியர் மஞ்சுளா மற்றும் இரவு காவலர் பாபு கைது செய்யப்பட்டனர்...

சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்குவதற்காக இந்த லஞ்சத்தை மஞ்சுளா கேட்டிருந்தாராம்.. இதற்கு பிறகு ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் விடிய விடிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தியதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.. இவ்வளவு நடந்தும்கூட, இதே திருவண்ணாமலை மாவட்டத்தில் விஏஓ காந்தி லஞ்சம் கேட்டுள்ளது மாவட்ட மக்களுக்கு அதிர்ச்சியை தந்துவருகிறது.

சர்வேயர்: இதனிடையே இன்றைய தினம், திண்டுக்கல்லில் இன்னொரு அதிகாரி சிக்கியிருக்கிறார்.. திண்டுக்கல் மாவட்டத்தில் பட்டா மாறுதலுக்கு 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நில அளவையாளரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக பிடித்த சம்பவம் அரசு அதிகாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தனிப்பட்டாவிற்காக பாக்யராஜ், அவரது உதவியாளர் சதீஷ் என்பவர் மூலமாக 30,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். பிறகு கடைசியாக 15 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் வழங்குவதாக சொன்னாராம்.. இது தொடர்பாக கணேஷ்குமார் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தையடுத்து, சர்வேயர் சிக்கியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+