ஆரணியில் 1 பெண்ணுக்கு 3 பேர் போட்டி? திருவண்ணாமலை காதலனின் நிலை! பைக்கில் அதை கட்டி இழுத்த நண்பர்கள்

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளைஞனுக்கு நடந்த சம்பவம் நேற்று முதல் மாவட்ட மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்த வண்ணம் உள்ளது.. இதுதொடர்பான விசாரணையை போலீசார் முன்னெடுத்து வந்த போதிலும், நண்பனின் கொலையை இவ்வளவு குரூராக செய்ய முடியுமா? என்ற கலக்கம் மக்களை கவ்வி உள்ளது.. பெற்றோரின் கதறல் காண்போரை கதிகலங்க செய்துவிட்டது... என்ன நடந்தது நண்பர்களுக்குள்?

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை சேர்ந்த டேனி வளனரசு.. இவருக்கு 19 வயதாகிறது... , வேலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் BA இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

Arani Tiruvannamalai

ஆரணி காதலன்

வேலூரில் காலேஜ் என்பதால், அங்குள்ள சாய்நாதபுரத்திலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி வந்துள்ளார்.. இவருடன் இதே வீட்டில் ஆரணியை சேர்ந்த கிஷோர் கண்ணன் (19), பாண்டிச்சேரியை சேர்ந்த பார்த்தசாரதி (19), தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த இன்பவர்மா (18) ஆகிய நண்பர்களும் தங்கி உள்ளார்கள்.. இங்கிருந்தபடியே காலேஜூக்கு டேனி சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், கல்லூரிக்கு செமஸ்டர் விடுமுறை அறிவிக்கப்பட்டதால், நண்பர்கள் 4 பேரும் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். விடுமுறை முடிவதற்கு முன்பாக, கடந்த 31ம் தேதி இரவு டேனி வளனரசு மட்டும் தனியாக வேலூருக்கு திரும்பி வந்துள்ளார்.

திருவண்ணாமலை நம்ப முடியாத சம்பவம்

ஆனால், அதன்பிறகு, ஊருக்கு வந்து சேர்ந்துவிட்டதாக தன்னுடைய பெற்றோருக்கு போன் செய்து சொல்லவில்லை.. இதனால் அவரது பெற்றோரே டேனிக்கு போன் செய்துள்ளனர்.. ஆனால் அவரது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருந்தது.. இதனால் பெற்றோர், உறவினர்கள் பதற்றமடைந்தனர்.

உடனே டேனியின் நண்பர்களை தொடர்புகொண்டு விசாரித்த போது, அவர்கள் சரியாக பதில் சொல்லவில்லையாம்.. மேலும், முன்னுக்குப்பின் முரணான தகவல்களை சொல்லி உள்ளனர்.. இதனால் சந்தேகம் அடைந்த டேனி வளனரசுவின் பெற்றோர், பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசாரும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

காதலனின் நிலை

கிஷோர் கண்ணனை பிடித்து விசாரித்ததில், டேனி வளனரசுவுக்கும், கிஷோர் கண்ணன், பார்த்தசாரதி ஆகியோருக்கும் கல்லூரியில் படிக்கும் ஒரு பெண்ணை காதலிப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. அதனால்தான் டேனியை எப்படியாவது கொன்றுவிடுவது என்ற முடிவை கிஷோர், பார்த்தசாரதி எடுத்தார்களாம்.. இதற்காக கடந்த ஒரு வாரமாகவே ஸ்கெட்ச் போட்டு வந்தார்களாம்..

அதன்படி, கடந்த 1ம் தேதி புத்தாண்டு தினத்தன்று நண்பர்கள் அனைவருமே மது குடித்து உள்ளனர்.. அப்போது போதையில் இருந்த டேனி வளனரசுவை இரும்பு கம்பியால் தாக்கி, கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர்.

பைக்கில் கட்டி இழுத்த நண்பர்கள்

அதற்கு பிறகு தங்கள் மீது எந்த சந்தேகமும் வராமல் இருக்க, டேனி ஃபுல் போதையில் இறந்தது போல் சித்தரித்து, சடலத்தை மலையடிவாரத்தில் வீச முடிவு செய்தனர்.. இதற்காகவே சடலத்தை பைக்கில் எடுத்துச் சென்று சாய்நாதபுரத்திலிருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தமிழக-ஆந்திர எல்லை பகுதியான சித்தபாறை மலையடிவாரத்தில் வீசிவிட்டு சென்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது..

கிஷோரிடம் விசாரிக்கும்போது ஆரம்பத்தில் பொய் தகவலை சொல்லி உள்ளார்.. பிறகு தங்கள் பாணி விசாரணையை போலீசார் நடத்தவும்தான், மேற்கண்ட உண்மைகளை சொல்லி உள்ளார்.. எனினும் இது முதற்கட்ட விசாரணை என்பதால், மேலும் தகவல்களை பெற போலீசார் திட்டமிட்டு உள்ளார்களாம்.. எனவே இந்த கொலையை ஒப்புக்கொண்டுள்ள நிலையில் அது தொடர்பான விசாரணை நண்பர்களிடம் நடத்தப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+