திருவள்ளுவர் சிலைக்கு “விபூதி”.. பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் குங்குமம் வைத்ததால் பரபரப்பு!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன், திருவள்ளுவர் சிலைக்கு விபூதி, குங்குமம் வைத்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நேரத்தில் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை.

திருவண்ணாமலை லோக்சபா தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை, அதிமுக சார்பில் கலியபெருமாள், பாஜக சார்பில் அஸ்வத்தாமன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். முன்னணி கட்சிகள் திருவண்ணாமலையில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. சி.என்.அண்ணாதுரைக்கு ஆதரவாக அண்மையில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்த நிலையில் அமைச்சர்கள் களமிறங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
திருவண்ணாமலை பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன், மத்திய பாஜக அரசின் சாதனைகளை மக்களிடம் கூறி வாக்கு சேகரித்து வருகிறார். இந்த நிலையில், செங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட சாத்தனூர், கொளமஞ்சனூர், தானிப்பாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் நேற்று இரவு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அஸ்வத்தாமன், சாத்தனூர் கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் சிலையின் நெற்றியில் திருநீறு பூசி, குங்குமப் பொட்டு வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது பாரத் மாத கி ஜெ என பாஜகவினர் கோஷம் எழுப்பினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஏற்கனவே திருவள்ளுவருக்கு பாஜகவினர் மத அடையாளம் பூசுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வரும் நிலையில், திருவண்ணாமலை பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் திருவள்ளுவருக்கு விபூதி, குங்குமம் வைத்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications