Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆரணியை அதிரவைத்த தேவிகலா.. நடத்தையில் சந்தேகப்பட்ட மாமியார்.. கழுத்தை நெரித்து கொலை செய்த கொடூரம்

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே நடத்தையில் சந்தேகப்பட்ட மாமியாரை, மருமகள் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையான 20 நாட்களுக்குப் பிறகு பிரேத பரிசோதனைப் சான்றிதழிலால் மருமகள் கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகே உள்ள காளசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட ராமன், கோவிந்தம்மாள் தம்பதியின் மகன் சிராலன் (35). இந்த தம்பதிக்கு ராஜலட்சுமி, ராஜேஸ்வரி என்ற இரு மகள்களும் உள்ளனர். ராமன் கோவிந்தம்மாள் தம்பதியினர் தங்களது மகள்களான ராஜேஸ்வரியை அதே கிராமத்திலும், ராஜலட்சுமியை வேலூரிலும் கட்டிக் கொடுத்துள்ளனர்.

arani crime murder

மகன் சிராலன் ராணுவத்தில் பணியாற்றஇ வந்துள்ளார். இந்நிலையில், சிராலனுக்கு கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு தேவிகலா (24) என்பவருடன் திருமணமாகியுள்ளது. இவர்களுக்கு ஹரிணி (வயது 4) என்ற மகளும், ஹரிகரன் என்ற மகனும் (வயது 1) உள்ளனர். ராமன் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். சிராலன் ராணுவத்தில் பணிபுரிவதால் கோவிந்தம்மாள் தனது மருமகள் தேவிகலாவுடன் வசித்து வந்துள்ளார்.

கோவிந்தம்மாளின் மகள்களாந ராஜேஸ்வரி மற்றும் ராஜலட்சுமி இருவருக்கும் குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. இந்நிலையில், தேவிகலாவிற்கு மட்டும் எப்படி இரண்டு குழந்தைகள் பிறந்தது என்று கூறி அடிக்கடி கோவிந்தம்மாளுக்கும், மருமகளுக்கும் இடையே சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. ஒருகட்டத்தில் இப்பிரச்னை முற்றியதையடுத்து இரு தரப்பினரும் கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் இருவரையும் போலீஸார் சமரசம் செய்து வைத்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி மாமியார் கோவிந்தம்மாள், தேவிகலாவிடம் 2 குழந்தைகள் எப்படி பிறந்துள்ளன என்று கூறி அவரது நடத்தையில் சந்தேகம் இருப்பதாகக் கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில், அவர்கள் இருவருக்கும் பெரும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த இருவரும் மாறி மாறி கைகலப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.

இதில், ஆத்திரமடைந்த தேவிகலா மாமியார் கோவிந்தம்மாளின் (வயது 55) கழுத்தை நெரித்து தாக்கியுள்ளார். இதில், கோவிந்தம்மாள் மயக்கமடைந்துள்ளார். அதிர்ச்சியடைந்த தேவிகலா உடனடியாக அருகில் இருந்த கோவிந்தம்மாளின் மகள் ராஜேஸ்வரியை அழைத்து தரையில் தடுக்கி விழுந்து தனது மாமியார் மயக்கமடைந்ததாக கூறியுள்ளார்.

இதையடுத்து, தேவிகலா மற்றும் ராஜேஸ்வரி ஆகிய இருவரும் கோவிந்தம்மாளை வேலூர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு, கோவிந்தம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரழந்தார். இந்நிலையில், அவரது இறப்பில் மருத்துவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் காவல் துறையில் தனியார் மருத்துவமனை சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவிந்தம்மாளுக்கு பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் 20 நாட்களுக்குப் பின்னர் கோவிந்தம்மாள் கழுத்து நெரிக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளதாக சான்றிதழில் தகவல் வெறியாகியுள்ளது.

இதைத்தொடர்ந்து, தனியார் மருத்துவமனை புகாரின் பேரில், கண்ணமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மருமகள் தேவிகலாவிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தேவிகலா நடந்த சம்பவங்களைக் கூறியதுடன், கழுத்தை நெரித்ததால் அவர் உயிரிழந்துள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளார்.

காவல் துறையினர் இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து போளுர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் தேவிகலாவை ஆஜர்படுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். சந்தேகக் கண்ணோட்டத்துடனேயே தகராறில் ஈடுபட்டு வந்த மாமியாரை மருமகளே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+