இப்படிப் போகாதீங்கம்மா, முந்தானையால் இழுத்து மூடிவிட்ட பெண் போலீஸ்.. குவியும் பாராட்டு!
பெண்களுக்கு பாதுகாப்பை தீவிரப்படுத்திய பெண் இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு குவிகிறது.
Recommended Video

திருவண்ணாமலை: தீபத்துக்கு கோயிலுக்கு வந்தவர்கள் எல்லாம் பெண் போலீஸ் மங்கையர்க்கரசியை நன்றியுடன் பார்த்து கொண்டே நகர்ந்து சென்றார்கள்!
பஞ்ச பூதங்களில் அக்னி தலமாக போற்றப்படும் திருவண்ணாமலை தலத்தில், கார்த்திகை மகா தீப திருவிழா நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. கூடியிருந்த பக்தர்கள் அரோஹரா பக்தி முழக்கத்துடன் தீப தரிசனத்தை செய்தார்கள்.
வருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த விழா என்றாலே திருவண்ணாமலையில் விசேஷம்தான். இதற்காக உள்ளூர், வெளியூர், வெளிநாடு என உலகின் பல பக்கங்களிலிருந்து கூட்டம் குவிவார்கள்.

பாதுகாப்பு
இந்த கூட்ட நெரிசலை தவிர்க்க போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதும் வழக்கம்தான். ஆனால் மாவட்ட மகளிர் காவல் ஆய்வாளர் மங்கையர்க்கரசி பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் ஒரு படி மேலே போய்விட்டார். அவர் கை நிறைய சேஃப்டி பின்களை வைத்திருந்தார்.

முந்தானை
இந்த கூட்டத்திலும் நகைகளை அபேஸ் செய்யவும் மர்மபேர்வழிகள் நடமாடவே செய்வார்கள். அதனால் கோயிலுக்குள் நுழையும் பெண்களை அழைத்த மங்கையர்க்கரசி, அப்பெண்களின் முந்தானையாலேயே இழுத்து போர்த்தி மூடிவிட்டார்.

மலர்ந்த முகம்
மூடிவிட்ட கையோடு தான் வைத்திருந்த சேஃப்டி பின்களால் நகைகள் வெளியே தெரியாதவாறு குத்திவிட்டார். கூடவே அந்த பெண்களுக்கு நகைகள், உடைமைகள் பத்திரம் என்று மலர்ந்த முகத்துடனே சொல்லி அனுப்பி வைத்தார்.

பாராட்டுக்கள்
இதனை கண்ட பெண்கள் நன்றி கலந்த சிரிப்பை உதிர்த்து அங்கிருந்து கோயிலுக்குள் நகர தொடங்கினார்கள். இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் நிறைய பேர் பெண் இன்ஸ்பெக்டருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.
{document1}
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications