திருவண்ணாமலை அருகே நேற்று இரவு மிதமான நிலநடுக்கம்- ரிக்டரில் 3.0 ஆக பதிவு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று இரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 3.0 அலகுகளாக பதிவாகி உள்ளது.
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் நேற்று முன்தினம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கு அடியில் 82 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

கடலுக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுவிக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கத்துக்கு இதுவரை 8 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் நேற்று பகலில் நமது நாட்டின் பல இடங்களில் நில நடுக்கம் உணரப்பட்டது.
சத்தீஸ்கர், மத்திய பிரதேச மாநிலங்களில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டிருந்தது. இது ரிக்டரில் 3.9 ஆக பதிவாகி இருந்தது.
இதனிடையே நேற்று இரவு 8.41 மணிக்கு திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே நிலத்துக்கு அடியில் 30 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்பட்ட நிலநடுக்கம் இது. கடந்த 2004-ம் ஆண்டு இந்தோனேசியாவில் ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் இந்தியா, இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளை உருக்குலைய செய்தது. அந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமியில் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications