அபார்ஷன் ஆனந்தி இன்னும் அடங்கலை.. ஜாமீனில் வெளிவந்தும் கைவரிசை.. வளைத்து பிடித்த போலீஸ்
அபார்ஷன்களை செய்து வரும் ஆனந்தி மறுபடியும் கைது செய்யப்பட்டார்
Recommended Video
திருவண்ணாமலை: அபார்ஷன் ஆனந்தி இன்னும் அடங்கவே இல்லை.. திரும்பவும் வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டார்.. விடுவார்களா நம் போலீஸ்.. சுற்றி வளைத்து கைது செய்துவிட்டனர்.
ஆனந்தி.. பிளஸ் 2 படித்துவிட்டு டாக்டர் என்று ஊருக்குள்ளே சொல்லி கொண்டு திரிந்தவர். திருவண்ணாமலையில் இவர் பெயர் ஃபேமஸ்
வேங்கிக்கால் பொன்னுசாமி நகரில் ஒரு அப்பார்ட்மென்ட் உள்ளது. இங்குதான் அந்த டுபாக்கூர் டாக்டர் ஆனந்தி பெண் சிசுக்களை கருவிலேயே கண்டறிந்து அழிக்கும் மையம் நடத்தி வந்தார். இந்த தகவல் போலீசாருக்கு கடந்த டிசம்பர் மாசம் சென்றதையடுத்து விரைந்து வந்து அபார்ட்மென்ட்டை பார்த்தார்கள்.

மயக்க மருந்து
அபார்ஷன் செய்றதுக்கு ஒரு தனி ரகசிய ரூம், அபார்ஷனுக்கு வரும் பெண்களை தங்க வைக்க 3 ரூம் இருந்ததை பார்த்ததும்தான் அதிர்ச்சி ஆனார்கள். விஷயம் ரொம்ப பெரிசு போல இருக்கே என்று தீவிர விசாரணையில் இறங்கினார்கள். அப்போது நிறைய சமாச்சாரங்கள் ஆனந்தி பற்றி வெளிவந்தது. 2016ம் ஆண்டு இப்படித்தான் அபார்ஷனுக்கு பெண்கள் வந்திருக்கிறார்கள். ஒன்றல்ல, ரெண்டல்ல, 9 பெண்களையும் வரிசையாக படுக்க வைத்து மயக்க மருந்து கொடுத்து, பின்னர் ஆபத்தான நிலைக்கு சென்ற அவர்களை போலீசார் சென்று மீட்டு கொண்டு வந்தனர்.

ஆட்டோ டிரைவர்
அபார்ஷனுக்கு வரும் பெண்களை பஸ் ஸ்டேண்டிலிருந்து ஆனந்தி வீட்டுக்கு கூட்டி வந்து திரும்பவும் பத்திரமாக பஸ் ஏற்றி அனுப்புவதுதான் ஆட்டோ டிரைவர் சிவக்குமார் வேலை. இதற்காக இவருக்கு ஆட்டோ சார்ஜ் 2 ஆயிரமாம். அதுவும் பக்கத்துலதான் பஸ் ஸ்டேண்ட் இருக்குமாம். ஆனாலும் யாரும் தம்மை கண்டுபிடிக்காதவாறு சுற்றி சுற்றி கூட்டிக் கொண்டு போவாராம். உடந்தையாக கணவன் தமிழ்செல்வனும் இருந்திருக்கிறார்.

கைது
ஒருநாளைக்கு 25 அபார்ஷன்கள்கூட ஆனந்தி செய்திருக்கிறார். அதற்கு கட்டணமாக ரூ.60 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை வசூலித்துள்ளவர். அதாவது மாசம் ரூ.15 லட்சம் வரை சம்பாதித்துள்ளார் மொபைல் சர்வீஸ் மூலமாகவும் அபார்ஷன் நடந்திருக்கிறது என்கிறார்கள் போலீசார். கடைசியில் இவர்களை போலீசார் கைது செய்தனர்.

நீதிபதி மகிழேந்தி
இந்த சம்பவம் மாவட்டத்தையே உலுக்கி போட்டது. இந்த ஆனந்தியால் ஆயிரக்கணக்கான சிசுக்கள் கொல்லப்பட்டுள்ளன. அதாவது 10 வருஷத்துல 19 ஆயிரம் கருக்கலைப்புக்கும் மேல இவர் செய்திருக்கிறார். எல்லா பெண்களையுமே ராத்திரியில்தான் இவர் வீட்டுக்கு வரவழைப்பாராம். திருவண்ணாமலை மாவட்டத்தின் பிறப்பு எண்ணிக்கையையே இந்த ஆனந்தி குறைத்திருக்கிறார் என்று மாவட்ட நீதிபதி மகிழேந்தியும் மாவட்ட தலைவரும் அன்று ஆதங்கத்துடனும், வருத்தத்துடனும் தெரிவித்திருந்தனர்.

ஜாமீன்
ஆனந்தி & கோ..வினை கடந்த டிசம்பரில் கைது செய்தபிறகு அந்த வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டது. கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனந்தி குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். ஆனால் ஆனந்தி அடங்கவே இல்லை. திரும்பவும் வெளி மாவட்டங்களுக்கு சென்று பல பெண்களுக்கு அபார்ஷன்களை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

பதுங்கிய ஆனந்தி
இதுகுறித்து சுகாதார இணை இயக்குனர் சுகந்தி அனைத்து மகளிர் போலீஸில் புகார் செய்யவும், அதன்பேரில் விசாரணையும் நடந்தது. இறுதியில் கள்ளக்குறிச்சியில் ஆனந்தி பதுங்கி இருப்பது தெரியவந்ததையடுத்து அங்கு விரைந்தனர். ஆனால், உஷாராகிவிட்ட ஆனந்தி, திரும்பவும் அங்கிருந்து தப்பி திருவண்ணாமலையில் வந்து பதுங்கினார். எனினும் நம் போலீசார் ஆனந்தியை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். அவரிடம் விசாரணையும் நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications